- இன்று முதல் குடும்ப ஜெபம் நடத்த தீர்மானித்திருக்கிறேன். எல்லாத் தடைகளையும் மேற்கொண்டு குடும்ப ஜெபம் நடத்த என்னால் இயன்றதைச் செய்வேன். தினமும் அரைமணி நேரம் குடும்பத்திற்காக மட்டும் ஜெபிக்கத் தீர்மானித்திருக்கிறேன்.
- ஒவ்வொரு பிள்ளைகளுக்காகவும் கர்த்தரைத் துதிப்பேன். வாரயிறுதி நாட்களிலும் ஒவ்வொரு பிள்ளையோடும் தனித்தனியே கூடி ஜெபிப்பேன். அவர்கள் தினமும் வேதத்தை வாசிக்கவும், ஜெபிக்கவும் கட்டாயப்படுத்துவேன்
- வேதாகம வார்த்தைகளை கற்பிப்பேன். அளவுக்கு மீறி மதத்தை திணித்து, அதை அவர்கள் வெறுக்காதபடிக்கு கவனமாயிருப்பேன். பிள்ளைகளை ஒழுங்காக ஆலயத்திற்கும் ஞாயிறு பள்ளிக்கும் அழைத்துச் செல்வேன்.
- என் பிள்ளைகளுக்கு நான் ஒரு நல்ல முன்மாதிரியாயிருக்கத் தீர்மானித்திருக்கிறேன். நானே சாதிக்க முடியாததை அவர்களிடம் எதிர்பார்கக மாட்டேன். என் குறையை அவர்கள் சுட்டிக் காட்டும்போது நானாகவே அதைத் தாழ்மையோடு ஒத்துக் கொள்வேன். நான் தவறிழைக்கும்போது அவர்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்க மாட்டேன்.
- பிள்ளைகள் குறைபாடுகள், கல்வி, ஞானம், என்னிடம் நடந்துகொள்ளும்முறை யாவற்றுக்கும் அப்பாற்பட்டு அவர்களிடம் அன்புகாட்ட தீர்மானித்திருக்கிறேன். மற்றப் பிள்ளைகளோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசியோ, கேலி செய்தோ, பிறர்முன் அவர்களை குற்றஞ்சாட்டியோ குறைகூறியோ எரிச்சல் மூட்ட மாட்டேன்.
- என் சொல்லாலும் செயலாலும் அவர்கள் எனக்கு வேண்டுமென்பதை அவர்கள் உணரும்படி செய்வேன். ஒரு பிள்ளையை மற்றொரு பிள்ளைகளோடு ஒப்பிடமாட்டேன். எல்லாரையும் ஒன்றாகவே நடத்துவேன். அவர்களது உழைப்பு, முயற்சி, நன்னடத்தையைப் பாராட்டி பெருமைப்படுத்துவேன்.
- பிரம்பைக் கையாடத் தீர்மானித்திருக்கிறேன். கீழ்படியும்வரை பிள்ளைகளைப் பயமுறுத்திக் கொண்டும் கத்திக் கொண்டும் இராமல் ஏற்றவேளையில் அடி கொடுப்பேன். அவர்களின் தவறை அவர்களாகவே உணரச்செய்வேன். முழுக் கீழ்ப்படிதலையும் பிள்ளைகளிடம் இனி எதிர்பார்ப்பேன்.
- பாவம் செய்யும்போது தவறிழைக்கும்போது தண்டித்து அன்போடு திருத்துவேன். இருதயத்தில் கசப்பை சுமந்துகொண்டே திரிந்து நாள்முழுவதும் அதை வெளிப்படுத்த மாட்டேன். தண்டித்தபின் பழைய அன்பின் உறவைக் காட்டுவேன்.
- பிள்ளைகளை முரட்டு்க கோபத்தில் நடத்தாமல், அன்பிலும், நல்ல நடத்தையினாலும், பாசத்தை வெளிப்படுத்துவேன். அம்பலத்தில் அவர்களைத் தண்டிக்காமலும் வார்த்தைக்கு வார்த்தை பதில் கொடுத்து அவர்களைக் கோபப்படுத்தாமலும் பொறுமையுடனும் உண்மையுடனும் கண்டிப்பேன்.
- என் கண்வர் அவர்களைத் தண்டிக்கும்போதோ திருத்தும்போதோ குறுக்கிட்டுத் தடை செய்யக் கூடாதெனத் தீர்மானித்திருக்கிறேன். அவரது கண்டிப்பு தவறென்பதுபோல பின்னர் நடந்து கொள்ளாமல் பொறுமையுடன் பிள்ளைகளுக்கு அவர்கள் செய்த தவறினை விளக்குவேன். கணவரோடு எனக்கு மனவேறுபாடுகள் ஏதுமிருந்தால் அதைப் பிள்ளைகளிடம் வெளிப்படுத்த மாட்டேன்.
- என் முன்மாதிரியைப் பிள்ளைகள் பின்பற்றும்படியாக கணவனுக்கு எல்லா அன்பும் மரியாதையும் பணிவும் கீழ்படிதலுடனும் காண்பிக்கத் தீரமானித்திருக்கிறேன். பிள்ளைகள் தங்கள் தகப்பனோடு நல்லறவுக்கொள்ள என்னாலான முயற்சிகளை எடுப்பேன். பிள்ளைகளிடம் அளவுக்கு மீறிப் பரிவு காட்டி கணவன் மீது பொறாமைக்கொள்ள இடங் கொடுக்க மாட்டேன்.
- வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கத் தீர்மானித்திருக்கிறேன். பி்ள்ளைகளோடு உட்கார்ந்து பேசி, விளையாடிப் பொழுதுபோக்குவதை நான் வீணென்று கருதமாட்டேன். அவர்கள் பாடாசலையிலிருந்து திரும்பும்போது நான் வீட்டிலிருப்பேன். அந்ததந்த நாளின் விபரங்களைப் பகிர்ந்து கொள்வேன்.
- பிள்ளைகளின் பேச்சைக் கவனமாகக் கேட்பேன். என் மனநிலையினால் அவர்கள் பாதிக்கப்படாதபடி எப்பொழுதும் மகிழ்ச்சியோடும் பொறுமையோடும் காணப்படுவேன். மாதம் ஒருமுறையாவது நான் அவர்களை வெளியே அழைத்துச் செல்வேன்.
- பிள்ளை படிக்கும் பாடசாலை ஆசிரியர்களோடு தொடர்புகொள்ளத் தீரமானி்த்திருக்கிறேன். ஆசிரியரின் குற்றச்சாட்டுக்களை அசட்டை செய்யாது அதைத் தீரவிசாரித்தறிந்து பிள்ளையைத் திருத்துவேன். அக்கம் பக்கத்தார் குற்றஞ்சாட்டும்போது எனது பி்ள்ளையின் பக்கமாக மட்டும் சாய்ந்து பேசாமல் உண்மை நிலையை ஒத்துக் கொள்வேன்.
- பி்ள்ளைகளின் படிப்பில் நான் கவனஞ் செலுத்துவேன். பாலியல் சம்பந்தமான காரியங்களைக் கூடத் தயங்காமல் பேசி அவர்களின் சந்தேகங்களைப் போக்கிடச் செய்வேன். புத்தகங்களை பரிசீலனை செய்வேன். கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாய் பதிலுரைப்பேன்.
- கூடுமான நாள்வரை என் குழந்தைகளுக்கு தாய்பாலூட்டத் தீர்மானித்திருக்கிறேன். உணவுக்காரியத்தில் “அது வேண்டாம்; இது வேண்டாம்“ என ஒதுங்காது வீட்டில் சமைப்பதை வீணாக்காது முறுமுறுக்காது முகமலர்ச்சியோடு உண்ணும்படி பழக்குவிப்பேன். வீட்டில் சரிவிகித உணவு திட்டத்தை மேற்கொள்வதோடு, நானே அவர்களுக்குப் பரிமாறுவேன்.
- பி்ள்ளைகளின் காரியங்கள் யாவற்றையும் நானே அவர்களுக்குப் பதிலாகச் செய்து அவர்களின் வளர்ச்சியை தடுக்காதிருக்கத் தீர்மானித்திருக்கிறேன். பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் தேவையான விடுதலையையும் சுந்திரத்தையும் அளிப்பேன்.
- பிள்ளைகளை எப்பொழுதும் பிடித்து வைத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் அதேசமயம் அவர்கள் நண்பர்கள், பிள்ளைகள் செல்லும் இடங்களைக் குறித்து நிர்விசாரமாயிருக்க மாட்டேன். நன்மையானதைத் தெரிந்து கொள்ள பழக்குவிப்பேன். தன் வேலையைத் தானே செய்யவும் வீட்டுவேலைகைளில் பங்கெடுக்கவும் பழகுவிப்பேன்.
- பிள்ளைகள் கேட்டதெற்கெல்லாம் சரி சொல்லாமல் “இல்லை“ என்ற பதிலையும் மகிழ்ச்சியாய் ஏற்க பழக்குவிப்பேன். எனனுடைய பிள்ளைகளை எளிய வாழ்க்கைகத் தரத்தில் வளர்ப்பேன்.
(நன்றி சத்தியவசனம் January - March - 2008 ஆசிரியர் - டாக்டர் லில்லியன் ஸ்டான்லி)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment