சேர். ஐசக் நியூட்டன் என்னும் விஞ்ஞானி, தானியேல் 12:4 இல் உள்ள தீரக்கதரிசனத்தை வாசித்தபோது “இவ்வசனம் கூறுவது உண்மையாயின், பிரயாணம் செய்வதற்குப் புதிய முறைகள் கண்டுபிடிக்கப்படல் வேண்டும். ஏனெனில், மானிட அறிவு அதிகரிப்பதனால், ஒரு மணித்தியாலயத்தில் மனிதன் 50 மைல்கள் வேகமாகச் செல்லக்கூடிய பிரயாண முறையைக் கண்டுபிடிப்பான்“ என்று கூறினார்.
நியூட்டனின் கூற்றை பிற்காலத்தில் வாழ்ந்த பிரபல பிரெஞ்சுத் தத்துவஞானி வொல்ட்டயர் ஏளனம் செய்யத் தொடங்கினான்.
“புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்த நியூட்டனின் பெரிய மூளையைப் பாருங்கள். அவன் வேதாகமம் என சொல்லப்படும் புத்தகத்தை வாசிக்கும்போது அதிலுள்ள பைத்தியக்காரத்தனமான விடயங்களை உண்மை எனக் கூற முற்பட்டுள்ளான். மானிட அறிவு அதிகரிப்பதனால் அவனால் மணித்தியாலத்துக்கு 50 மைல்கள் வேகத்தில் பிரயாணம் செய்ய முடியும் எனது நம்பியுள்ளான். வயோதிப காலத்தில் அவனது அறிவு குழம்பியுள்ளது“ என்று வொல்டயர் கூறினான்.
ஒரு காலத்தில் உலகப்பிரசித்திப் பெற்ற தத்துவஞானியாக இருந்த வொல்ட்டயருடைய வார்த்தைகள் எந்தளவுக்கு அறிவீனமானவை என்பதை இன்று ஒரு சிறுபிள்ளை கூட உடனடியாக புரிந்து கொள்ளும். மணிக்கு பலநூறு மைல்கள் வேகத்தில் செல்லக்கூடிய விமானங்களை மனிதன் இன்று கண்டுபிடித்துள்ளான். மனிதன் 50 மைல்கள் வேகத்தில் பிரயாணம் செய்வான் என்பதைக் கூட அறியமுடியாத ஞானியாகவே வொல்ட்டயர் இருந்துள்ளான். ஆனால், குறுகிய தூர பிரயாணத்திற்குக் கூட அதிக நேரம் தேவைப்பட்ட காலத்திலேயே, வேதாகம வார்த்தைகளை நம்பிய ஐசக் நியூட்டன் கூறியவை உண்மை என்பதை இன்று எவராலும் மறுக்க முடியாது.
உண்மையில் தன் அறிவை நம்பி வாழ்ந்து, ஒரு காலத்தில் புகழ்பெற்றிருந்த தத்துவஞானி வொல்ட்யரின் கூற்று இன்று பைத்தியக்காரத்தனமானதாய் இருக்கையில் ஆண்டவருடைய வார்த்தையை நம்பி வாழ்ந்த விஞ்ஞானி சேர். ஐசக் நியூட்டன் இன்றுவரை அனைவராலும் புகழப்படும் விஞ்ஞான மேதையாக இருக்கிறார். “கர்த்தருடைய வேதமே பேதைகளை ஞானியாக்கும்“ (சங். 19:7) என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.
(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
மிக்க நன்று
ReplyDelete