- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday, 11 January 2011

மனிதனால் புரிந்திட முடியாதவை


ஆதிச்சபையின் இறையிலாளர்களில் முக்கியமானவரும், கிறிஸ்தவ சபைச் சரித்திரத்தில் இன்றுவரை நிலைத்து நிற்பவருமான ஒகஸ்டீன் (கி.பி. 354-430)என்பார் ஒருநாள் கிறிஸ்தவ இறையியலில் முழுமையானதும் தெளிவானதுமான விளக்கத்தை எவராலும் கொடுக்க முடியாத திரித்துவ உபதேசத்தைப் பற்றி மனக்குழப்பத்துடன் கடற்கரையில் வந்து கொண்டிருந்தார்.

திரித்துவ உபதேசத்தைப் பற்றிச் சிந்தித்த வண்ணமாக்கச் சென்று கொண்டிருந்த ஒகஸ்டீன், கடற்கரை மணலில் ஒரு சிறு குழியைத் தோண்டி, அதைக் கடல் நீரால் நிரப்பிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டார். அவனது செயல் ஒகஸ்டீனுக்கு வேடிக்கையானதாய் தென்பட்டமையால் சிறுவனே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?“ என்று கேட்டார்.
ஒகஸ்டீனின் கேள்விக்குப் பதிலளித்த அச்சிறுவன் “ஓ அதுவா! நான் கடலை இக்குழிக்குள் போட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்“ என்றான்.

சிறுவனின் பதில் ஒகஸ்டீனுக்கு பாரிய உண்மையை வெளிப்படுத்தியது. “திரித்துவ உபதேசம் மானிட அறிவால் கிரகித்து புரிந்து கொள்ள முற்படுவது, கடலை சிறு குழிக்குள் போட முற்படுவதற்குச் சமனானது. கடலைப் போல விசாலமான தெய்வீக விடயங்களை சிறிய மூளைக்குள் கொண்டுவர முயல்கின்றேனே” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
தேவனைப் பற்றிய மனிதனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத விடயங்களுக்கு முழுமையான விளக்கங்களை நம்மால் கொடுக்க முடியாது. திரித்துவம், இயேசுவின் இருதன்மைகள், தேவனுடைய தெரிந்து கொள்ளுதல், பிசாசின் வீழ்ச்சி போன்ற சில முக்கிய விடயங்களுக்கு முழுமயான விளக்கங்கள் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை. இதற்குக் காரணம், நமது குறுகிய மூளையினால் அவற்றை புரிந்து கொள்ளமுடியாதிருப்பதேயாகும். இதனால், நாம் அறிந்து கொள்வதற்கு அவசியமான விடயங்களை மட்டுமே தேவன் வேதாகமத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

தேவன் வெளிப்படுத்தி உள்ளவற்றுக்கு மேலதிகமாக அறிந்து கொள்ள முற்படுவது அர்த்தமற்றது. ஏனென்றால், அது வெறும் ஊகங்களுக்கும் உபதேசக் குழப்பங்களுக்குமே வழிவகுக்கும். இவ்விடயத்தில் தேவன் நமக்குப் பின்வருமாறு அறிவுறுத்துகின்றார்.

மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். (உபா 29:29)


(இவ்வாக்கமானது சகோ. வசந்தகுமார் அவர்கள் எழுதிய சில சம்பவங்களில் சில சத்தியங்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment