!
"முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ"" என்று புலம்பினார் யோபு (யோபு 6:6). சுவையில்லைதான், ஆனால் சத்துண்டு! பாடுகள் நம் நம்பிக்கையின் அளவைச் சுட்டிக்காட்டுகின்றன. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமான இயேசுவைவிட்டு நாம் கண்களை விலக்கும்போது சிக்கலுக்குள்ளாகிறோம் (எபிரெயர் 12:1). மூழ்கத் துவங்கியதும் கதறுகிறோம். அப்போது நம்மிடம் ஆண்டவர் கேட்பது, "உங்கள் விசுவாசம் எங்கே?"" பாடுகளைச் சரியான விதத்தில் சகித்தால் விசுவாசம் வலுப்படும். உபத்திரவத்தின் உச்சக்கட்டத்தில்தான் யோபு, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்"என்று வீர முழக்கமிட்டார் (யோபு 18:15).
கம்யூனிசச் சிறைகளில் பல ஆண்டுகள் சித்ரவதை அனுபவித்த ரிச்சர்டு உம்பிராண்டும் அவரது மனைவியார் சபீனாவும் தாங்கள் கற்றுக்கொண்டதை இவ்விதம் விளக்கினர்: """"சிறையில் நாங்கள் இறையியலைக் களைந்து இறைவனைக் கற்றுக்கொண்டோம்"" இதே பாணியில் மார்ட்டின் லூத்தரும், "உபத்திரவங்களுக்குள் வரும்வரை திருவசனத்தின் சரியான பொருள் எனக்கு விளங்கவில்லை!"" என்றார்.
உபத்திரவங்கள் தேவ கிருபையின் முக்கித்துவத்தை அதிகமதிகமாய் நமக்கு உணர்த்துகின்றன. சகோதரர், அறிமுகமானோர், இனத்தார், நண்பர், வீட்டார், வேலைக்காரர், சிறுபிள்ளைகள் யாவரையும் ஆண்டவர் யோபுவுக்குத் தூரமாக்கினார். மனித உதவிகள் நீக்கப்படும்போதுதான் நாம் ஆண்டவரை மட்டும் நோக்குகிறோம். அவரும் தம்மைச் சில வேளைகளில் மறைத்துக் கொள்ளும்போது, முன், பின், வலது, இடது புறங்களில் அவரைக் காணாதபோது, "நாம் அறியோம், அவர் அறிவார்" என முழக்கமிடுவோம் (யோபு 23:8-10).
நாம் பாடுபடும்போது பிறரது வேதனைகளையும் உணர்வுகளையும் நன்கு உணர முடிகிறது (2 கொரிந்தியர் 1:4). உணர்வில்லாத ஆலோசனைக்காரரை "காரியத்துக்குதவாத வைத்தியர், அலட்டுண்டாக்கும் தேற்றரவாளர், வீணான ஆறுதல் சொல்வோர்"" என்றார் யோபு (யோபு 13:4; 16:2; 21:34). இந்நாட்களில் கம்ப்யூட்டர்கூடத்தான் ஆலோசனை தருகிறது! நமக்குத் தேவை "காயப்பட்ட வைத்தியர்களே!"
சிலுவையில் நொறுங்கிய இயேசு இன்று எவ்வளவாய் நம் புண்களுக்கு மருந்திடுகிறார்! அவர்போல் ஆறுதல் தருபவர் எவருமில்லையல்லவா? நமக்குள் உறங்கிக் கிடக்கும் ஆன்மீக வல்லமையும் பிரச்சினைகளின்போதுதான் துள்ளி எழுந்து செயல்படுகின்றன. பாம்பையும், வெறிநாயையும் பார்த்தால்தான் நாம் இத்தனை வேகமாக ஓடமுடியும் என்று நமக்கே தெரியும்! ஆழ்கடல் அனுபவம் நம்மை ஆழ்த்த அல்ல; ஆளாக்கவே! பாடுகளின் வேளைகள் வெளிப்பாடுகளின் வேளைகளே, வெறுமையான தீவு ஒன்றில் பொறுமையாய்ப் பாடனுபவித்தபோதுதான் வருங்காலத்தின் மகிமையான வெளிப்பாடுகள் யோவானுக்குக் கிடைத்தன (வெளிப்படுத்தல் 1:9)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment