- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday, 3 January 2011

எபிரேய உருவக மொழிகளை அறிந்து கொள்ளுதல் - 2

6. உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப் போடுங்கள். (மத் 10.14)


இயேசுக்கிறிஸ்து தனது சீடர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது ”எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்” இது அக்காலப் பிண்ணனியில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். யூதர்கள் வழமையாக புறஜாதியருடைய பட்டணங்களுக்கூடாக பிரயாணம் செய்திருந்தால் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிவரும்போது தமது கால்களில் படிந்துள்ள தூசியை நகர எல்லையில் உதறிப் போடுவார்கள். யூதர்கள் புறஜாதியாரை அசுத்தமானவர்களாக கருதியமையால் அவர்கள் வாழும் இடங்களும் அசுத்தமானவையாக கருதினர். இனால் அவர்களின் பட்டணங்களினூடாக செல்லும்போது அப்பிரதேச மண்ணில் பட்ட தமது கால்களை அசுத்தமாகிவிட்டதாகக் கருதி தம்மை சுத்திகரிக்க இவ்வாறு செய்தனர். சில சந்தர்ப்பங்களில் தாம் அணிந்திருக்கும் ஆடைகளையும் உதறுவர். யூதர்கள் புறஜாதியினரை அசுத்தமானவர்களாகவும் இறை இராஜ்யத்திற்குப் புறம்பானவர்களாகவும் கருதினர். ஆனால் இயேசுவின் பார்வையில் நற்செய்தியினை நிராகரிப்பவர்களே அசுத்தமானவர்களாகவும், இறை இராஜ்யத்திற்குப் புறம்பானவர்களாகவும் இருந்தனர். இதன்மூலம் யூதர்கள் எப்படி புறஜாதியினரை நடத்தினார்களோ அதேவிதமாக நற்செய்தியினை நிராகரிப்பவர்களிடம் நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். அத்தோடு இயேசுவின் அடுத்த வசனத்தின் அடிப்படையில் இது ஒரு தீர்க்கதரிசன அடையாளச் செயலாகவும் உள்ளது. அதாவது நற்செய்தியினை நிராகரிப்பவர்கள் மீது வரவிருக்கும் தண்டனையை அறிவிக்கும் ஒரு அடையாளச் செயலாக உள்ளது. .



7. உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? 4)



அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?(லூக் 11.11-12)
அடுப்பின் எரிபொருட்களாக காய்ந்த புல் (மத் 6.30) முட்செடிகள் (பிர 7.6) போன்றன பயன்படுத்தப்படும். இவ்வாறு அப்பஞ்சுடும் கல்லை சூடாக்கி அப்பத்தினை சுடும்போது அடுப்பின் சாம்பல், தூள்கள் காரணமாக அவை அப்பத்தின் மீது படிவதனால் அப்பம் நிறம்மாறி கூழாங்கல் வடிவத்திலேயே காணப்படும். அத்தோடு பலஸ்தீனாவிலுள்ள தேள்கள் வெண்மையாகவும் முட்டை வடிவத்திலேயும் சுருண்டு காணப்படும். இப்படியிருக்கும்போது பொல்லாதவர்களாகிய (அதி 6.5, சங். 51.5) மனிதர்களே தமது பிள்ளைகளை ஏமாற்றாது நல்ல ஈவுகளைக் கொடுக்கும்போது இறைவனை நோக்கி உண்மையாக வேண்டுதல் செய்பவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் மூலமான நன்மையான ஈவுகளை (மத் 7:11, லூக் 11:13 அவர் கொடுப்பது அதிக நிச்சயம் என்பதை மறுப்பதற்கில்லை



9. இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைக்கிறேன். அதை ஒருவனும் பூட்டமாட்டான் (வெளி. 3:8)4)



பாலஸ்தீன வீடுகளின் கதவுகள் காலையிலிருந்து மாலைவரை திறந்தவாறே காணப்படும். வீட்டில் இல்லாத பட்சத்திலும் இரவு வேளைகளில் மட்டுமே கதவுகள் பூட்டப்பட்டிருக்கும். வீட்டின் கதவு திறந்திருந்தால் வீட்டுக்காரர்கள் இருக்கிறார்கள் என்றும் நாம் சென்று அவர்களோடு உரையாடத் தடையில்லை என்பதும் நி்ச்சயமானதாகும். இதனூடாக நாம் அறிந்து கொள்வது யாதெனில் நாம் தேவனிடம் செல்வதற்கு அவரது வாசல் எப்போதுமே திறந்திருப்பது மட்டுமல்ல அவர் எவ்வேளையிலும் நம்மை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறார். எனவே நாம் தேவனை எப்போதும் சந்தித்து உரையாடலாம்.




10. ஒருவனும் கோடித்துண்டை பழைய வஸ்திரத்தோடே இணைக்க மாட்டான் (மத் 9:16)4)



கோடித்துண்டானது ஒருமுறையாவது துவைக்கப்படாத புதிதான சேலைத் துணியைக் குறிக்கும். பழைய துணியிலுள்ள கிழியலை மறைப்பதற்காக புதிய துணியை இணைப்பர். அப்பழைய துணியினை துவைத்த பின் அதில் இணைத்த புதிய சேலைத் துணியானது சுருங்கும். அப்போது முன்பிருந்ததை விட அதிகமான கிழியல்கள் பழைய துணியில் உண்டாகும்.



கிறிஸ்து இதனை ஏன் கூறினாரென்பதை சற்று நோக்குவோம். ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு முன் உபவாசமிருக்க வேண்டும் என்பது பரிசேயரது போதனையாயிருந்தது. எனவேதான் யோவானது சீஷர் இயேசுவிடம் வந்து உம்முடைய சீஷர்கள் உபவாசியாமலிருப்பது என்ன எனக் கேட்டார்கள். எனவே கிறிஸ்து பரிசேயரது போதனையை நிராகரித்து இரட்சிப்பிற்காக உபவாசமிருப்பதல்ல. மாறாக இரட்சிக்கப்பட்ட பின்பே உபவாசமிருக்க வேண்டும் (மத் 9:14)எனக் கூறுவதோடு பரிசேயரது போதனையையும் தனது போதனையையும் எவ்விதத்திலும் இணைக்கவோ இல்லது இணையாக கைக்கொள்ளவோ முடியாது என்ற கருத்துப்படக் கூறினார். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. கிறிஸ்துவின் போதனையை மட்டுமே நாம் கைக்கொள்ள வேண்டும். அதன் மூலமே இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.



11. ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.(Luke 9:59)4)



இயேசுக்கிறிஸ்து ஒருவனைக் கண்டு தன்னைப் பின்பற்றி வரும்படி கூறியபோது ஒருவன் அவருக்கு கொடுத்த பதிலே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே அவன் தகப்பன் மரித்திருக்கவில்லை. அம்மனிதன் கூறிய சாட்டுப்போக்கிற்காகவே இக்கூற்று உள்ளது. வேலைக்கள்ளிக்குப் “பிள்ளை சாட்டு என்பது போல“ இதனையும் எடுத்துக் கொள்ளலாம்.




Reference:
1. இராபின்சன் ஞான. இஸ்ரவேலரின் வரலாறு இரண்டாம் பாகம் மதுரை – மதுரை கிறிஸ்தவ இறையியில் நூலோர்
குழு, 1965
2. வசந்தகுமார், எம்.எஸ், புனித வேதாகமத்தின் புனித வரலாறு. கண்டி, இலங்கை இலக்கிய சேவை, இலங்கை
வேதாகமக் கல்லூரி, 1996
3. செனஞானம், கா.தா, புதிய ஏற்பாட்டு அறிமுகம், மதுரை, கிறிஸ்தவ இறையில் நூலோர் குழு, 1996
4. டெனி, மெரில் சி. புதிய ஏற்பாட்டு அறிமுகம்(மொழிமாற்றம்) பேராதனை: இலங்கை வேதாகமக் கல்லூரி
வேதவியாக்கியான பிரிவு
5. Alexander, Pat The Lion Encyclopedia of the Bible, England : The Lion Publication, 1978
6. David. The Lion Hand Book to the Bible England : The Lion Publication, 1973
7. Gleason L. Archer, A Survey of Old Testament Introduction (Revise and Exampled) Chicago : Moody Press, 1994
8. Freeman, James M, Manners and Customs of the Bible. New Jersey. Logos International, 1972
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment