59. மத்தேயு 5.43 இல் உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். என்று இயேசுகிறிஸ்து கூறுகின்றார். அன்புள்ள தேவன் சத்துருவை பகைக்கும்படி எப்படிக் கட்டளையிடலாம்? (ஆர். டேவிட், கண்டி, இலங்கை)
இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டு வசனத்தையல்ல மாறாக, பழைய ஏற்பாட்டுக்கு அக்கால யூதமதப் போதகர்களும் வேதபாரகர்களும் கொடுத்த விளக்கத்தையே குறிப்பிடுகின்றார். சத்துருவை பகைக்கும்படி பழைய ஏற்பாட்டில் எதுவித கட்டளையும் இல்லை. சங்கீதப் புத்தகத்தில் பல தடவைகள் எதிரிகள் மீதான வெறுப்பும் கோபமும் பழிவாங்கும் எண்ணமும் வெளிப்படுவதை நாம் அவதானிக்கலாம். எனினும் இவை சங்கீதக்காரனின் மன உணர்வுகளே தவிர, கர்த்தரின் கட்டளைகள் அல்ல. யூதமதப் போதகர்கள் இத்தககு பகுதிகளுக்கு விளக்கம் கொடுக்கும் பொழுது எதிரிகளைப் பகைக்குபடி கூறினர். அக்கால யூதர்கள் புறஜாதியார் மீது பகைமையையும் வெறுப்பையும் கொண்டிருந்தனர். இதனால் அவர்களது போதனை அவர்களது பகைமையும் வெறுப்பையும் வெளிப்படுத்தும் வண்ணம் சத்துருக்களைப் பகைக்கும்படி அறிவுறுத்தல்களைக் கொடுத்தது. இயேசுகிறிஸ்து இத்தகைய யூதமப் போதரக்களின் கட்டளையையே மத். 5:43 இல் குறிப்பிட்டுள்ளார். புதிய ஏற்பாட்டைப் போலவே பழைய ஏற்பாட்டிலும் சத்துருவை நேசிக்கும்படியான கட்டளைகளே உள்ளன. லேவியராகமம் 19:33-34 இல் “யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக” என்று கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும் யாத்திராகம்ம் 23:4-5 இல் சத்துருவிற்கு உதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வசனங்களில் “உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக. என்று சொல்லப்பட்டுள்ளது. நீதிமொழிகள் 25:21 இல் சத்துருவை நேசிக்கும்படி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. இதிலிருந்து சத்துருவை பகைப்பாயாக என்பது தேவ கட்டளையல்ல என்பது தெளிவாகின்றது. அவ்வாறு செய்யாமல் சத்துருவை நேசிக்கும்படி மத்தேயு 5:44 இல் கூறுகின்றார்.
மத்தேயு 5:44
44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment