61. 1 இராஜாக்கள் 1:31-32 இல் உள்ளபடி 10 கோத்திரங்கள் இஸ்ரவேல் ராஜ்யமாகவும் ஒரு கோத்திரம் யூதா ராஜ்யமாகவும் மாறியது. மீதம் ஒரு கோத்திரம் யார்? அது என்னவாயிற்று? யார் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது? (நவமணி ஆபேல், இந்தியா)
தென்ராஜ்யத்தில் யூதா, பென்யமீன் எனும் இரு கோத்திரங்களும் இருந்தன. இவ்விரு கோத்திரங்களும் பொதுவாக ஒரு கோத்திரமாக கருதப்பட்டமையினாலேயே 1 இராஜாக்கள் 1:31-32 ஒரு கோத்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
31. யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.
32. ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment