58. தேவன் மேசேயிக்கு தரிசனமான போது பாதரட்சைகளைக் கழற்றும்படி கூறப்பட்டது. அப்படியானால் இன்று நாம் ஏன் ஆலயத்திற்குள் செல்லும்போது பாதரட்சைகளை கழற்றுவதில்லை? (சில்வியா மினோலி, நாவலப்பிடிடிய, இலங்கை)
தேவன் தரிசனமளித்த இடம் பரிசுத்தமானது என்பதனாலேயே பாதரட்சைகளைக் கழற்றும்படி மோசேக்கு கூறப்பட்டது. இதேவிதமாக யோசுவா 5:15 இல் யோசுவாவுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. எஜமானின் முன்னிலையில் வேலைக்காரர்கள் பாதரட்சைகளைக் கழற்றி எஜமானுக்கு மரியாதை செலுத்தும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது. அதேசமயம், பாதரட்சைகள் இல்லாமலிருப்பது ஒருவனை அடிமை எனக் காட்டும் அடையாளமாகவும் இருந்தது. ஏனெ்னறால் அக்காலத்தில் அடிமைகள் பாதரட்சைகளை அணிவதில்லை. இதிலிருந்து, மோசே பாதரட்சைகளை கழற்றிய செயலானது அவன் தேவனுக்கு மரியாதை செய்யும் செயலாகவும் அவர் முன்பாக தான் ஒரு அடிமை என்பதை உணர்த்திடும் செயலாகவும் இருந்தது. நமது நாட்டில் பிறமத வழிபாட்டிடங்களில் மக்கள் பாதரட்சை இன்றியே ஆலயத்திற்குள் உட்செல்லுவதையே நாம் அவதானிக்கலாம். இது தெய்வத்திற்கு மரியாதை செலுத்தும் ஒரு செயலாகவே கருதப்படுகின்றது. அதிக குளிரான பிரதேசங்களில் வெறுங்காலுடன் தரையில் இருப்பது சிரமமானதாய் இருந்தமையால் ஐரோப்பிய கலாசாரத்தில் பாதரட்சையுடனேயே மக்கள் ஆலயத்திற்குள் சென்றனர். ஐரோப்பியர்களே கிறிஸ்தவத்தை இலங்கைக்கு கொண்டு வந்தமையால், அவர்களுடைய கலாசாரத்தின்படி நம்நாட்டு கிறிஸ்தவர்களும் பாதரட்சைகளுடன் ஆலயத்திற்குள் செல்கின்றனர். விசுவாசிகள் தரையில் அமரும் சபையில் மட்டுமே மக்கள் பாதரட்சைகளைக் கழற்றிவிட்டு உள்ளே செல்கின்றனர். சில பிரதேசங்களில் பாதரட்சைகளை கழற்றுவது ஒரு பாரம்பரிய செயலாக மாறிவிட்டது. அதாவது, பாதரட்சைகளை கழற்ற வேண்டும் என்பதற்காக கழற்றப்படுகின்றதே தவிர தேவனுக்கு மரியாதை செலுத்தும் மனநிலை பலருக்கும் இருப்பதில்லை. பலர் பாதரட்சைகளைக் கழற்றாமலேயே தேவனுக்கு மரியாதை செலுத்தும் மனநிலையில் ஆலயத்திற்குள் செல்கின்றனர். எனவே, இவ்விடயத்தில் கண்டிப்பான கட்டளைகள் எதுவும் இல்லை. தேவனுக்கு மரியாதையும் கனமும் செலுத்தும் மனநிலையே அவசியம்.
15. அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment