57. மத்தேயு 12:43-45 இல் ஒருவனிலிருந்து வெளியேறும் அசுத்த ஆவி மறுபடியும் அவனுக்குள் வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது, இது எப்படிச் சாத்தியமாகும்? (ஐசக் பிரான்சிஸ், கண்டி, இலங்கை)
இயேசுகிறிஸ்து யூதர்கள் மத்தியில் வல்லமையான செயல்களைச் செய்தும் அவர்கள் அவரை மேசியாகவாக ஏற்றுக் கொள்ளவில்லை. பிசாசுக்கள் துரத்தப்பட்டன. வியாதியஸ்தர் குணமடைந்தனர், தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி அறிவிக்கப்பட்டது. மத்தேயு 12ம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத பரிசேயருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கங்கள், கருத்து முரண்பாடுகள் பற்றி நாம் வாசிக்கலாம். இயேசுகிறிஸ்து செய்த அற்புதங்கள் அவர் மேசியா என்பதற்கான அடையாளங்களாயிருந்தன. அப்படியிருந்தும் அவரக்ள் அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது செயல்களைத் தவறாகப் புரிந்து கொண்ட பரிசேயர்கள் அவர் மீது பல விதமான குற்றச் சாட்டுக்களைக் கொண்டுவந்தனர். அவர் ஓய்வுநாள் கட்டளைகளையும் முன்னோரின் பாரம்பரியங்களையும் மீறுகிறவர் என்றும், பிசாசுக்களைின் தலைவனைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறவர் என்றும் கூறினர். யூதர்களுடைய இத்தகைய தன்மையை அவர்களுக்குப் புரிய வைப்பதற்காகவே மத்தேயு 12:43-45 இலுள்ள விபரணம் சொல்லப்பட்டுள்ளது. இவ்வதிகாரத்தில் 22ம் வசனத்திலிருந்து வாசிக்கும்போது இயேசுகிறிஸ்து தான் தேவனுடைய வல்லமையினால் பிசாசுக்களைத் துரத்துவதை அறியத் தருவதோடு, பிசாசைத் துரத்துவதற்குத் தேவவல்லமை அவசியம் என்பதை 43-45 வரையிலான வசனங்களில் கூறுகின்றார். ஒரு மனிதனிலிருந்து அசுத்த ஆவி துரத்தப்பட்டும் அம்மனிதன் தேவவல்லமையைப் பெறாதவனாய் இருந்தால், அவனுக்குள் மறுபடியுமாய் அசுத்தஆவி வரும் என்பதை இயேசுகிறிஸ்து அறியத் தருகிறார். ஒருதரம் தேவவல்லமையினால் அசுத்த ஆவி துரத்தப்பட்டமையினால் அதுமறுமுறை வரும்போது, தன்னைத் துரத்தமுடியாத அதிகபலத்தோடு இருப்பதற்காக மேலதிக ஆவிகளையும் கூட்டிக் கொண்டு வருகின்றது. எனவே ஒரு மனிதிலிருந்து அசுதத ஆவி துரத்தப்பட்டப்பின் அவ் ஆவி மறுபடியும் வராதபடிக்கு அம்மனிதனில் தேவவல்லமை இருக்க வேண்டும். தேவனருளும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலேயே அசுத்தஆவிகள் மறுமடியும் வராமல் தடுக்க முடியும்.
மத்தேயு 12:43-45
43. அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:
44. நான் விட்டு வந்த வீட்டுக்குத் திரும்பிப் போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு,
45. திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment