மறைந்த கவிஞர் கண்ணதாசன் தான் எழுதிய இறவாக்காவியம் - இயேசு காவியம் என்று கூறியுள்ளார். இவரே அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தொகுப்பையும் எழுதியுள்ளார். நியாயத்தீர்ப்பு நாளில் இவர் போன்றோர் கிறிஸ்துவினால் அங்கீககரிக்கப்படுவார்களா? (சாம் சுரேஸ், ராஜநாயகம், மட்டக்களப்பு, இலங்கை)
தொடர்புடைய பதிவுகள் :
இயேசுகிறிஸ்துவினால் அங்கீகரிக்கப்படுவதற்கு நாம் அவரை நாம் தனிப்பட்ட ரீதியாக விசுவாசித்து நம்முடைய இரட்சகராகவும் கர்த்தராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்துவாலன்றி
வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின்
கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம்
கட்டளையிடப்படவும் இல்லை என்று அப்போஸ்தலர் 4:12 கூறுகின்றது. இரட்சிக்கப்படுவதற்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையே விசுவாசிக்க வேண்டும் என்பதை
அப். 16:31 அறியத் தருகின்றது. இவைப் போன்ற வசனங்கள் வேதாகமத்தில் உள்ளன.
எனவே, ஒருவர் இயேசுகிறிஸ்துப் பற்றி எழுதியமையால் அவர் இரட்சிக்கப்பட்டு
நியாயத் தீர்ப்பு நாளில் இயேசுகிறிஸ்துவின் பக்கம் இருப்பார் எனக்
கூறமுடியாது. கவிஞர் கண்ணதாசன் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து தனிப்பட்ட
ரீதியாக இரட்சிக்கப்பட்டாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. அவர் எல்லா
மதங்களும் ஒன்றெனக் கருதியவர். கடைசி நேரத்தில் யாராவது ஒருவர் புத்தரைப்
பற்றி காவியம் எழுதும்படி சொல்லியிருந்தால் அவர் புத்தரைப் பற்றியும்
எழுதியிருப்பார். இயேசுகிறிஸ்துப் பற்றி எழுதுவது நியாயத்தீர்ப்பின் போது அவர் பக்கம் இருப்பதற்கான காரணமாயமைந்து விடாது.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment