- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday, 18 February 2014

வேதமும் விளக்கமும் நியாயாதி 1: 19 கர்த்தருடைய வல்லமையினால் இருப்புரதங்களை மேற்கொள்ள முடியவில்லையா?

நியாயாதிபதிகள் 1: 19கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக் கூடாமற்போயிற்று என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் கர்த்தருடைய வல்லமையினால் இருப்புரதங்களை மேற்கொள்ள முடியவில்லையா? 

இவ்வசனத்தை மட்டும் வாசிக்கும்போது கர்த்தரை விட இருப்பு இரதங்களுக்கு வல்லமை அதிகம் என்றே எண்ணத் தோன்றும். ஆனால் நியாயாதிபதிகள் 2ம் அதிகாரத்தில் முதல் மூன்று வசனங்களையும் பார்க்கும்போது இஸ்ரவேல் மக்கள், எல்லோரோடும் யுத்தம் பண்ணவில்லை என்பதை அறிந்திடலாம். இதற்காக கர்த்தர் அவர்களை கடிந்து கொள்கிறார். கர்த்தர் யூதாவோடே இருந்தும் அவர்கள் பள்ளத்தாக்கின் குடிகளோடு யுத்த்திற்கு செல்லவில்லை. இதற்கு காரணம் பள்ளத்தாக்கின் குடிகளிடம் இருப்பு இரதங்கள் இருந்தமையாகும். அவர்கள் யுத்தத்திற்கு சென்றிருந்தால் பள்ளத்தாக்கின் குடிகளையும் அவர்கள் துரத்தி விட்டிருப்பார்கள். இருப்பு ரதம் எதிரிகளிடம் இருக்கின்றது என்பதனால் அவர்கள் யுத்தத்திற்கு செல்லாமல் இருந்து விட்டார்கள் இதனால் அவர்களை துரத்தக் கூடாமற் போயிற்று.  
 நியாயாதிபதிகள்
2 அதிகாரம்

1. கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும்,

2. நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?

3. ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment