இயேசுகிறிஸ்து கழுதையின் மீது பவனி வந்தாரா? அல்லது கழுதைக்குட்டியின் மீது பவனி வந்தாரா? மத்தேயு 21:2இயேசுகிறிஸ்து கழுதையையும் அதனோடு கட்டப்பட்டிருக்கும் குட்டியையும் கொண்டுவரும்படி சொல்கிறாரே? (எ.ராயப்பன், செல்லபுரம், இந்தியா)
மத்தேயுவில் மட்டுமே இச்சம்பவத்தில் கழுதையையும் அதனது குட்டியையும் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். அதேசமயம் மத்தேயு 21:4 இல் கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறிக்கொண்டு வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளமையால் இயேசுகிறிஸ்து இரண்டின்மீதும் சவாரி செய்தார் எனும் எண்ணத்தை தோற்றுவிப்பதாக உள்ளது. உண்மையில் இவ்வசனம் சகரியா 9:9இலுள்ள தீர்க்கதரிசன வாக்கியமாகும். அத்தீரக்க்தரிசனப் பகுதி மூலமொழியில் கவிதை நடையிலேயே உள்ளது. எபிரேயக் கவிதை முறையின்படி அவ்வசனத்தில் முதலாம் வரியில் கழுதை என்று உள்ளது. இரண்டாவது வரியில், அக்கழுதை எப்படிப்பட்டது என்று விபரித்து, கழுதைக்குட்டி என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்வேதாகமத்தில் இரண்டின்மீதும் பவனிவருகிறார் என்னும் எண்ணதைத் தோற்று’விக்குமாறு அவ்வசனம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மாற்கு, லூக்கா என்போரது சுவிசேஷப் புத்தகங்களைப் பார்க்கும்போது இயேசுகிறிஸ்து தாய்கழுதையையும், அதன் குட்யையும் கொண்டுவரும்படி சொன்னது நமக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனினும் கழுத்தைக்குட்டியைக் கொண்டுவருவதற்கு அதனது தாயையும் கொண்டுவருவது அவசியமானாயிருந்திருக்கும். தாயக்கழுதை வராவிட்டால் கழுதைக்குட்டி வந்திருக்காது. இதனால்தான் இரண்டையும் கொண்டுவரும்படி இயேசுகிறிஸ்து கூறினார்.
மத்தேயு-21 அதிகாரம்
2. உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.
மத்தேயு-21 அதிகாரம்
4. இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன்குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
சகரியா 9 அதிகாரம்
9. சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment