- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday, 14 August 2013

திருமறையை விளக்கும் முறை - அத்தியாயம் 2- இலக்கணம் இன்றியமையாததே.


திருமறையைச் சரியாய் விளங்கிக் கொள்ளவும் பிறருக்கு விளக்கிக் காட்டவும் நான்கு அடிப்டை விதிகளைக் கடைபிடிக்க வேண்டுமென்று முந்திய அத்தியாயத்தில் கண்டோம். அவற்றில் முதலாவது விதியைப் பற்றி இங்கே சற்று விரிவாக்க காண்போம். 


விதி 1- இலக்கணவிதிகளின்படி வேதத்தை விளக்கம் செய்ய வேண்டும்

1. அதிகார வசனப் பகுப்பு

நம்முடைய வேதாகமத்தில் காணப்படும் அதிகார, வசனப் பிரிவுகள் வேததை வாசிக்கவும் ஆராயவும் நமக்குப் பேருதவியாயிருக்கின்றன. ஆயினும் மூலநூலில் இத்தகைய பிரிவுகள் கிடையாது. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் இராபர்ட் ஸ்டீபன்ஸ் இந்தப் பாகுபாடுகள் சரியான முறையில் அமையவில்லை.
  1. II இராஜாக்கள் 7ஆம் அதிகாரத்தின் பொருள் 6:24 ஆரம்பமாகின்றது.
  2. ஏசாயா 53ஆம் அதிகாரத்தின் பெருள் 52:13 இல் ஆரம்பமாகின்றது.
  3. யோசுவா 5:13-15 ஐ 6ஆம் அதிகாரத்துடன் சேர்த்து வாசிக்கவும் 6:1 ஒருவேளை பிறை அடைப்புக் குறிக்குள் (Brackets)போடப்பட்டிருக்க வேண்டும்
  4. யாத்திராகமம் 5:23ஐ வசனத்துடன் நின்று விடாமல் 6:1-13ஐத் தொடர்ந்து வாசித்தல் நலம்
  5. 2 கொரிந்தியர் 7:1 ஆம் வசனம் 6ஆம் அதிகாரத்தின் கடைசி வசனமாக இருக்க வேண்டும்.
  6. கொலோசேயர் 4:1ஆம் வசனம் 3 6ஆம் அதிகாரத்தின் கடைசி வசனமாக இருக்க வேண்டும்.
  7. யோவான் 8:1 ஆம் வசனம் 7ஆம் அதிகாரத்தின் கடைசி வசனம்.
  8. ஏசாயா 4:1 ஆம் வசனம் 3ஆம் அதிகாரத்தின் கடைசி வசனம்.



2. நிறுத்தற் குறிகள் 

  1. சங்கீதம் 12:1  இல் கேள்விக்குறி தேவையா?பழைய திருப்புலையும் புதிய திருப்புதலையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
  2. யோவான் 12:27 என்னை இரட்சியும்  என்று சொல்வேனோ(ப.தி) அல்லது என்னை இரட்சியும் ஆனாலும் (பு.தி)
  3. ஏசாயா 45:11 “.....கேளுங்கள்… கட்டளையிடுங்கள்“ கர்த்தர் ஊக்கத்துடன் ஜெபிக்கும்படி ஏவுகிறார் என்பது வியாக்கியானம்.


    ஆனால் முன்பின்னுள்ள வசங்களை நாம் பார்க்கும்போது கேட்கிறதுக்கும் நீங்கள் யார்? கட்டளையிடுகிறதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் என்றும் பொருள்படும் “வருங்காரியங்களைப் பற்றி என்னிடம் விசாரிக்கிறீர்களே! என் பிள்ளைகளைப் பற்றி… எனக்கு கட்டளையிடுவீர்களே! என்ற புதிய மொழிபெயர்ப்பு சரியாகஇருக்கலாம்.
  4. யோவான் 7:37-38 ஜீவனுள்ள நதிகள் விசுவாசியின் உள்ளத்திலிருந்து பாய்ந்தோடுமா? அல்லது இயேசுவின் உள்ளத்திலிருந்து பாய்ந்தோடுமா? 39ம் வசனம் பழைய விளக்கத்திற்கு ஆதரவு அளிக்கின்றதாகத் தெரிகின்றது. ஆனால் பழைய ஏற்பாட்டில் அதற்கேற்ற வேதவாக்கியமில்லாத காரணத்தால் ஒரு சிலர் நிறுத்தக் குறிகளைச் சற்று மாற்றி இரண்டாம் விளக்கம் கூறுவர். ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு இந்த இரண்டாம் விளக்கத்திற்கு ஆதரவாக. 

37ம் வசனத்தில் ”யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்! என்னில் விசுவாசங்கொள்பவன் குடிக்கட்டும்! என்றும்  38ம் வசனத்தில் மறைநூல் கூறுவதுபோல மறைநூல் கூறுவதுபோல், ‘‘அவனுடைய உள்ளத்திலிருந்து உயிருள்ள நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என்றார்.“ என்று கூறுகின்றது. (சக. 14:8, எசே. 47:13)

ஆனால் நிறுத்தற் குறிகளை நம் விருப்பப்படி மாற்றியமைப்பது சரியல்ல. ஒரு சிலர் தவறான உபதேசங்களைக் நிலை நாட்ட இவ்விதம் செய்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக யெகோவாவின் சாட்சிகள் (Jehovah’s Witness) லூக்கா 23:43 இல் ஒரு கால் புள்ளியைப் பெயர்த்து “ இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” என்பதற்கு மாறாக. “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்“  என்று வேத உண்மையை திருத்திப் போதிக்கிறார்கள். 

இங்கிலாந்து நாட்டில் புகழ்பெற்ற போதகர் ஒருவர் யோவான் 9:3 இல் “அது இவன் செய்த பாவமுமல்ல, இவன் பெற்றோர்  செய்த பாவமுமல்ல. தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டாக… நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்“ என்று வசனத்தை மாற்றி அமைத்தார். கடவுளின் கிரியைகள் இவனிடம் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்.“ என்ற கருத்து அந்தப் போதகருக்குப் பிடிக்காததால்   தம் விருப்பம் போல நிறுத்தற் குறிகளை மாற்றியது தவறு. தமிழ் வேதாகமத்தில் சரியான கருத்தையே காட்டும் வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 


3. வினைச்சொற்கள்

  1. யோவான் 5:39, 40 ஐ வாசிக்கவும் பழைய திருப்புதலில் “வேதத்தை ஆராய்ந்து பாருங்கள்” என்ற வினைச்சொல் ஏவல் வடிவத்தில் உள்ளது. புதிய திருப்புதலில் “வேதத்தை ஆராய்ந்து பார்க்கிறீர்கள்” என்று உள்ளது. எது சரி? கிரேக்க மொழியில் இவ்வினைச்சொல்லுக்கு எப்படிப் பொருள் கூறலாம்? எனவே இதன் பொருளை முன் பின்னுள்ள வாக்கியங்களை ஆதாரமாக்க் கொண்டு தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஆண்டவர் யூதத் திருமறை அறிஞர்களுடன் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்.  அவ்வேத பாரகர்கள் பழைய ஏற்பாடு முழுவதையும் நுட்பமாக கற்றுத் தேறியவர்கள். பல பகுதிளை மனப்பாடமாக கற்றிருந்தவர்கள். இவர்களிடம் “ஆராய்ந்து பாருங்கள்” என்று இயேசு கூறியது எண்ணுவது பொருந்தாது. ஆனால் அதிகமாக ஆராய்ச்சி செய்தும் திருமறை சுட்டிக்காட்டும் மேசியா இவர்தான் என்று அவ்வேதபாரகர்கள் உணராதிருந்த காரணத்தினால் அவர்கள் இயேசுவிடம் வரவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. எனவே, புதிய திருப்புதலின்படி வேதத்தை ஆராய்ந்து பார்க்கிறீர்கள்(ஆயினும் என்னிடம் வர உங்களுக்கு மனதில்லை) என்ற மொழிபெயர்ப்பு சரியாக இருக்கக் கூடும்

  2. ரோமர் 5:1’ “சமாதானம் பெற்றிருக்கிறோம்” என்ற பழைய திருப்புதல் சரியா அல்லது சமாதானமுடையவர்களாக நிலைத்திருப்போமாக” என்ற புதிய திருப்புதல் சரியா? மூலமொழியின் சில சுவடிகளில் (Ectomen) எகோமென் என்ற பாடம் உண்டு. “ஒ” அல்லது ”ஓ” அவ்வளவுதான்.

    முன்பின்னுள்ள பகுதிகளைக் கவனிக்குங்கால் பழைய திருப்புதல்தான் சரி என்பது புகழ்பெற்ற பேராயர் ஹண்ட்லி மோல் (Bishop Handley Moule) என்பவரின் முடிவு.
  3. 1 யோவான் 3:9 “கடவுளிடமிருந்து பிறந்தவன் பாவஞ் செய்வதில்லை…” என்று கூறுகின்றது.

    அவன் பாவத்தில் வாழமுடியாது. (R.C.V) என்பதே உண்மையான கருத்து. அவன் சிலவேளைகளில் பாவத்தில் விழலாம். (1 யோவான் 1:7,8; 5:16,17) ஆனால் அவன் பாவநிலையில் தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டான்.
  4. 1 யோவான் 1:7 “சுத்திகரிக்கின்றது என்பது நிகழ்காலத்தையும் தொடர்ச்சியையும் குறிக்கும் வினைச்சொல். ஆகவே இயேசுவின் இரத்தம் எவ்விதப் பாவமும் நீங்க நம்மைச் சுத்திகரித்துக் கொண்டேயிருக்கின்றது. (Keep in cleansing us) என்று பொருள்படும். 


(வளரும்)
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment