- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday, 7 August 2013

திருமறையை விளக்கும் முறை - அத்தியாயம் - 1 அடிப்படை உண்மைகள்

அத்தியாயம் - 1


அடிப்படை உண்மைகள்



ஓர் உத்தம கிறிஸ்தவன் ஊழியன் மறைநூல் அறிஞானக இருத்தல் அவசியம். அவன் தன் கருவுலத்தினின்று புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக் கொடுக்கின்ற வீட்டுத் தலைவனுக்கு ஒப்பாவான். (மத். 13:52) பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகிய இண்டிலுமுள்ள கருத்து நுணுக்கங்களை அவன் ஆராய்ந்தறிந்து அவற்றை தனக்கு உரிமையாக்கிக் கொள்வது மட்டுமின்றி பிறருக்கும் எடுத்துச் சொல்வான். எனவே, வேதத்தை விளக்கம் செய்யும் முறையானது என்பது பற்றிய ஆராய்ச்சி கிறிஸ்துவின் அடியார்க்கு இன்றியமையாததாகும். ஆயினும் இவ்வாராய்ச்சியினைத் தொடங்கும் முன்னர் நாம் கவனிக்க வேண்டிய சில அடிப்படை உண்மைகள் உண்டு.


1. இவ்வாராச்சியின் முக்கியத்துவம்

(அ) வேதாகமம் முழுவதும் தேவனுடைய வார்த்தை ஆகவே அதைப் புரிந்து கொள்ள நாம் சிரத்தை எடுப்பதோடு தகுந்த முயற்சியும் செய்ய வேண்டும். “கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக் கொண்டபோது, அதை மனித வார்த்தையாக ஏற்றுக் கொள்ளாமல் தேவ வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள்” (1 தெச. 2:13)

(ஆ) வேதாகமம் நமக்கு அருளப்பட்டிருக்கும் ஒரு தேவ தூதாகும். நமக்கென்று இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒரு கடிதமாகும். எனவே, இக்கடிதத்தில் தேவாதி தேவன் நமக்குக் கூறும் செய்தி என்னவென்று நாம் கூர்ந்து கவனித்தல் அவசியம். தேவன் எழுதுவித்த கடிதத்தின் ஒவ்வொரு எழுத்தையும் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமன்றோ!

(இ) தேவ வார்த்தையாகிய வேதாகமத்தில் அடங்கியுள்ள உண்மைகளைப் பிறருக்கு விளக்கிக் கூறவேண்டியது தூதுவராகிய நமது கடமை. எழுத்தறிவற்ற மக்களுக்கு ஒரு கடிதத்தை படித்துக் காட்டும்போது அதன் உண்மையான கருத்தை அவர்கள் விளங்கிக் கொள்ளத்தக்க வகையில் மிகக்வனமான வாசித்து விளக்குவது போலவே வேதாகமத்தை நாம் நுட்பமாக ஆராய்ந்து மக்களுக்கு விளக்கம் செய்தல் வேண்டும். தேவ தூதுடன் நாம் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது. நமது சொந்த கற்பனையின் படி தெய்வீக உண்மையை மிகைப்படுத்தவும் அழகுற வர்ணிக்கவும் கூடாது.

2. இவ்வாராய்ச்சியின் இடர்பாடுகள்

(அ) தேவனுடைய வார்த்தையை அற்ப மக்களாகிய நாம் உடனுக்குடன் விளங்கிக் கொள்வது இயலாததாகும். “உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகள் உயர்ந்திருக்கிறது. (ஏசாயா 55:9) என்று ஆண்டவர் கூறுகின்றார். வேதாகமத்தில் பல்வேறு கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை போல் தோன்றலாம்.

(ஆ) திருமறை தெய்வீக அதிகாரமுள்ள நூல் என்றும்“ கொள்கை சம்பந்தமான வாக்குவாதத்தில் அதுவே உரைக்கல் என்றும் நாம் ஒப்புக் கொண்டாலும் இன்னும் நாம் விசுவாசத்தின் ஒருமைப்பாட்டுக்குள் வந்து சேரவில்லை. கள்ள உபதேசத்தைப் பரப்பும் பிரிவினர் கூட வேதாகமத்தை ஆதாரமாக வைத்தே தங்கள் கொள்கைகளைப் பரப்புகின்றனர். எனவே வேதத்தை விளக்குவதற்கேதுவான சரியான விதிமுறைகளையும் விதிகளையும் நாம் கடைபிடித்தால் இந்தத் தவறுகளிலிருந்து நாமும் தப்பலாம். நம்முடன் பிற கிறிஸ்தவர்களையும் தப்புவிக்கலாம்.

(இ) அறுப்பத்தாறு நூற்களடங்கிய வேதாகமம் பல்வேறு இடங்களில் (யூதேயா, பாபிலோன், அரபுநாடு, ரோமாபுரி) வெவ்வேறு காலங்களில் (கி.மு. 1500 கி.பி. 100 வரை) எழுதப்பட்டமையால், இந்நூற்களின் ஆக்கியோன், இடம், காலம் போன்ற விபரங்களைக் குறித்த சர்ச்சைகள் எழலாம். (பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதி எபிரேயு மொழியிலும், சிலபகுதிகள் அரேமிய மொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டமையினால் இம்மொழிகளின் இலக்கணமுறை, மற்றும் ஒப்பனை உருவகச் சொற்கள் ஆகியவற்றை குறித்த சிக்கல்களும் எழும்பக் கூடும்)


3. இவ்வாராய்ச்சிக்குத் தேவையான பண்புகள்

வேதத்தை சரியான முறையில் விளங்கி, பிறருக்கு விளக்கம் செய்யத் தேவையான பண்புகள் மூன்றாகும்.

(அ) ஜெப சிந்தையோடு கூடிய சுறுசுறுப்பு

(ஆ) சிரமத்தை பாராமல் உழைக்கும் தன்மை.

(இ) இடைவிடாமல் ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் 

ஆகியவைகளே

ஜெப வாழ்க்கை இல்லாத வேத ஆராய்ச்சி பயனற்றது. நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவித்திராத கருத்துக்களைச் சுய அறிவினால் போதிப்பதும் பயனற்றதே. வாழ்க்கை முழுவதும் வேதத்தைப் படித்து ஆராய்ச்சி செய்யும் கிறிஸ்தவனே நற்போதனாயிருக்க முடியும். “நன்றாய் ஜெபிக்கிறவன் நல்ல வேத அறிவாளியாவான். ஏனெனில் ஜெபிக்கிறவன் வேதத்தைக் கருத்துடன் படிக்கவும் செய்வான்“ என்கிறார் ஒருவர். 


வேதத்தை ஆராயும் முயற்சியில் சிறந்த பலனை அடையக்கூடியவன் யார்?

I. ஆவிக்குரிய மனிதன் மறுபடியும் பிறந்த மனிதன் (யோவான் 3:3, 1 கொரி. 2:14) 

II. சாந்தமுள்ள மனிதன் (சங். 25:9)

III. கீழ்படிதல் உள்ள மனிதன் (யோவான். 7:17)

IV. ஜெபம் செய்கிற மனிதன் (சங். 119:18 ; யாக். 1:5)


4. இவ்வாராய்ச்சிக்குத் தேவையான நூல்களும் துணைநூல்களும்

(அ) வெகுகாலம் நிலைத்திருக்கக்கூடிய ஒத்த வாக்கிய வேதாகமம்

(ஆ) புதிய திருப்புதலையும் வாங்கி வாசிப்பது நன்று. புதிய மொழிபெயர்ப்பு ஆராய்ச்சிக்கு இன்றியமையாத துணை நூலாகும்.

(இ) திருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்டது. (95/96 இல்)

(ஈ) உரோமன் கத்தோலிக்க சபையைச் சார்ந்த தமிழ் இலக்கியக் கழகம் 1970 இல் வெளியிட்ட புதிய ஏற்பாடு ஓரளவுக்கு பயனுள்ளதாகும். கத்தோலிக்க அறிஞர்கள் முதல் முறையாக்க் கிரேக்க மூலநூலிலிருந்து உயர்ந்த தமிழ்நடையில் மொழிபெயர்ப்புச் செய்துள்ள இப்புதிய ஏற்பாட்டைச் சற்று கவனத்துடன்தான் பயன்படுத்த வேண்டும். மொழிபெயர்ப்பு பெரும்பாலும் சிறப்பாக அமைந்திருப்பினும் சில பிழைகளும் உண்டு. அடிக்குறிப்புகள் பயனுள்ளவையாயிருப்பினும் ரோமன் கத்தோலிக்க கொள்கைகளை நிலைநாட்டும் வகையில் இந்த அடிக்குறிப்புகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

(உ) ஆங்கில வேதாகமத்தைப் படிப்பவர்கள் 1611 இல் வெளியான பழைய திருப்புதலுடன் (King James Authorised) ஒரு புதிய திருப்புதலையும் பயன்படுத்தலாம். புதிய மொழிபெயர்ப்புகளில் New International Version மிகவும் சிறந்தாகும்.

(ஊ) வேத அகராதி (Bible Dictionary) ஒன்றும் ஒத்த வாக்கிய அகராதி (Bible Concordance) ஒன்றும் இருப்பின் மிக உதவியாக இருக்கும்

(எ) வேத விளக்க நூல்கள் (Bible Commentaries)

மேற்கூறிய நூல்கள் அனைத்தும் கிடைக்காவிடினும் சோர்ந்து போகத் தேவையில்லை. உங்களிடம் உள்ளவற்றையே ஜெப சிந்தையுடன் பயன்படுத்தலாம்.

5. வேதத்தை விளக்கும் முயற்சியில் கட்டாயமாக்க் கடைப்பிடிக்க வேணடிய நான்கு அடிப்படை விதிகள்

(அ) இலக்கண விதிகளுடன் வேதத்தை விளக்கம் செய்தல் வேண்டும். சொற்பொருளைச் சரியாய் விளக்குதல் அவசியம். (Interpret with a proper regard for grammatical usage and the plain meaning of words)

(ஆ) முன் பின்னுள்ள வாக்கியங்களைக் கவனித்து அவற்றின் பொருளுக்கு ஏற்ற முறையில் வசனத்தை விளக்க வேண்டும். (Interpret with due regard to the immediate context)

(இ) நாம் விளக்கும் வசனம் வேதாகமத்தின் எந்தப் புத்தகத்தில் உள்ளதோ அந்தப் புத்தகம் எழுதப்பட்ட சூழ்நிலை, நோக்கம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அவ்வசனத்தை விளக்க வேண்டும். (Interpret with due regard to the character and purpose of the book in which your text is found)

(ஈ) வேதாகமத்தின் முழு கருத்துக்கும் இசைந்தவாறு வசனத்தை விளக்க வேண்டும். எனவே வசனங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். Interpret with due regard to teaching of the Bible. Scripture is its own commentary compare scripture with scripture.)

(அத்தியாயம் 1 முற்றிற்று)
(வளரும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment