பலதரமணம் தேவனால் தடைசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ள போதிலும், இன்றைய கிறிஸ்தவ உலகில் பலதாரமணம் தேவனால் அங்கீகரிக்கப் பட்டுள்ளதென்று தர்க்கிக்கப்படுகின்றது. இதற்கு ஆதாரமாக 2 சாமுவேல் 12:7-8)சுட்டிக்காட்டப்படுகின்றது. இவ்விடத்தில் தீர்க்கதரிசியாக நாத்தான் தாவீதுக்கு தேவனுடைய வார்த்தைகளை அறிவிக்கிறான். “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,8. உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்“ என்று சொன்னான். இதில், “உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து“ எனும் வாக்கியத்தை காண்பித்து தேவன், தாவீதுக்குப் பல பெண்களைக் கொடுத்து பலதாரமணத்தை அங்கீகரித்துள்ளார் என சிலர் தர்க்கிக்கின்றனர். எனினும், இது இவ்வசனங்களை சரியாக விளங்கிக் கொள்ளாத்தினால் ஏற்ப்டுள்ள ஒரு தவறான தர்க்கமாகும். “அக்காலத்தில் ஒரு அரசனுடைய மரணத்தின் பின், அவனுடைய வீடும் அங்குள்ளவர்களும், அவனுக்குப் பின் அரசனாகுபவனுக்குக் கொடுக்கப்படுவது வழமை(01) இதன்படி, சவுலின் மரணத்தின் பின், அவனுடைய வீடும் அங்கிருந்தவர்களும் தாவீதுக்குக் கொடுக்கப்பட்டுள்ளனர் என்பதே இவர்களது தர்க்கமாகும்.
“இவ்வசனத்திலுள்ள 'உன்மடியில்' எனும் பதம் மூலமொழியின்படி NIV ஆங்கில மொழிபெயர்ப்பில், 'உன்கரத்தில்' என்றே உள்ளது. இது NASB ஆங்கிலமொழி பெயர்ப்பில் உள்ளதுபோல 'உன் பொறுப்பில்' என அர்த்தம் தரும் வண்ணம் மொழிபெயர்க்கப்பட வேண்டிய பதமாகும். (02) எனவே, தேவன் சவுலின் வீட்டையும் அங்குள்ளவர்களையும் தாவீதின் கரத்தில், அதாவது அவனுடைய பொறுப்பில் விட்டுள்ளார் என்று நாத்தான் தாவீதுக்குச் சொல்லுகிறாரே தவிர, சிலர் தர்க்கிப்பதுபோல, சவுலின் மனைவிகளைத் தேவன் தாவீதுக்கு மனைவியாக்க் கொடுத்தார் என்பது இதன் அர்த்தம் அல்ல. தாவீது உரியாவின் மனைவியாகிய பத்தேசபாளை எடுத்துக்கொண்ட பாவத்தைக் கண்டிக்கவே தேவன் நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார். எனவே, சவுலின் மனைவிகளைத் தேவன் தாவீதுக்கு கொடுத்திருந்தால், அவன் உரியாவின் மனைவியை எடுத்துக் கொண்டதற்காக அவனைக் கண்டிப்பதும் அர்த்தமற்றதாகவே இருக்கும். மேலும், சவுலுக்கு இரண்டு மனைவிகளே இருந்தனர். இவர்களுள் ஒருத்தி தாவீதினுடைய மனைவி மீகாளின் தாயாகிய அகினோவாம் (1 சாமு. 14:50) இன்னுமொருத்தி ரிஸ்பாள் என்னும் பெயருள்ள மறுமனையாட்டி (2 சாமு 3:7) எனவே சவுலின் மனைவிகளை தேவன் தாவீதுக்குக் கொடுத்தார் என்று சொன்னால் அவர் தாவீதின் மாமிகளை அவனுக்கு மனைவியாக கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும். இது லேவியராகம்ம் 18:17 இல் தேவன் கொடுத்த கட்டளைக்கு எதிரான செயலாகும். எனவே, இது அர்த்தமற்ற செயலாகும். எனவே இது அர்த்தமற்ற தர்க்கமாகும். “தாவீது இள வயதுடையவனாக இருக்கையி மீகாளை மணமுடித்தமையால் இதன் பின்னர் அவளது தாயை அவனுக்குத் தேவன் மனைவியாக்க் கொடுத்தார் என்பது அர்த்தமற்றதாகும்(02)
2 சாமுவேல் 12:7-8 இல் தேவன் சொல்லும் விடயம் யாதெனில் அவர் சவுலின் வீட்டையும் அங்குள்ளவர்களையும் சவுலின் ராட்சியத்தையும் அதன் குடிமக்கள் அனைவரையும் தாவீதின் பொறுப்பில் விட்டுள்ளார் என்பதேயாகும். அரசன் குதிரைகளையும் மனைவிகளையும் அதிகரித்துக் கொள்ளக் கூடாது என்று தேவன் கட்டளையிட்டுள்ளமையால் (உபா. 17:16-17) அவர் தாவீதுக்கு அதிக மனைவிகளைக் கொடுத்திருக்க மாட்டார். தாவீதுதான் தான் பாலியல் இச்சை காரணமாக பல மனைவிகளை வைத்திருந்தான். தேவன் அவனுக்கு பல மனைவிகளைக் கொடுத்தார் என்று கூறும்போது அவர் தனது திருமணத்திற்கான தனது திட்டத்தை மீறி செயற்பட்டுள்ளார் என அவரை குற்றப்படுத்துபவர்களாக இருப்போம். எனவே, பலதாரண மணம் தேவனால் அனுமதிக்கப்பட்டுள்ளது என தர்க்கித்து தேவனையும் அவரது கட்டளைகளையும் முரண்படுத்தும் பாவத்தைக் குறித்து நாம் கவனமாயிருக்க வேண்டும். ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே மானிட திருமணத்திற்கான தேவ திட்டமாகும். பலதாரமணம் அவரால் தடை செய்யப்பட்டுள்ளதோடு அத்தகைய பாவம் அவரால் தண்டிக்கப்பட்டும் உள்ளது. எனவே, நமது அர்த்தமற்ற தரக்கங்களை விட்டுவிட்டு தேவனுடைய வார்த்தையின்படி திருமண உறவில் இருவருக்கும் மேல் இருக்கமுடியாது எனும் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
References
(01) 1 & 2 Samuel in the Tyndale OT Commentaries by Joyce Baldwin
(02) Towards Old Testament Ethics by Walter Kaiser
(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் எழுதிய திருமறையும் திருமணமும் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு - இலங்கை சத்திய வசனம்)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment