இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களில் அவர் நியாயமான மானிட முறைகளுக்கு எதிராகப் பேசியுள்ளதாக கருதப்படும் வாக்கியம் முதல் மூன்று சுவிசேஷப் புத்தகங்களிலும் உள்ளது. எனினும் இது முக்கியமான ஒரு கூற்றாக இருப்பதனால் மத்தேயுவிலும் லூக்காவிலும் இரு தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. “உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும். பரிபூரணமும் அடைவான். இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்“ எனும் இயேசுவின் கூற்று மத்தேயு 13:12, 25:29, மாற்கு 4:25 லூக்கா 8:18, 19:26 போன்ற வசனங்களில் உள்ளன. உண்மையில் உள்ளவனுக்கு கொடுப்பதைவிட இல்லாதவனுக்கு கொடுப்பதே நியாயமானது என்பதனால், உள்ளவனுக்கு அதிகமாகக் கொடுப்பதோடு இல்லாதவனிடமிருந்து இருப்பதையும் எடுத்துக் கொள்வது நியாயமற்ற கொடூரமான செயல் என்பதனால், இயேசுவின் கூற்றை மனிதாபிமானமற்றதும் ஏழைகளை ஒடுக்கி பணக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் முதலாளித்துவ வாதம் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், இயேசுவின் கூற்றை இவ்வாறு விமர்சிப்பவர்கள் அனைவருமே, அவர் “உள்ளவன்“ “இல்லாதவன்“ எனும் சொற்களை என்ன அர்த்தத்தோடு உபயோகித்துள்ளார் என்பதை அறியாதவர்களாகவே உள்ளனர். உண்மையில் இயேசுவின் உபதேசம் ஏழைகளை ஒடுக்கும் பணக்காரருக்கு எதிராகவும் ஏழைகளுக்கு ஆதரவானதாகவும் இருப்பதை சுவிசேஷப் புத்தகங்களிலுள்ள அவரது பிரசங்கங்கள் அறியத் தருகின்றன.
இயேசு பொருளாதார ரீதியாக அல்ல. மாறாக ஆவிக்குரிய பிரகாரமாகவே “உள்ளவன்“ “இல்லாதவன்“ எனும் சொற்களை உபயோகித்துள்ளார். என்பதை முதலில் நாம் அறிந்திருக்க வேண்டும். மத்தேயுவின் சுவிஷேசத்தில் இயேசுவின் இக்கூற்றைத் தொடர்ந்து வரும் வசனங்களை வாசிக்கும்போது “தேவனுடைய செய்திக்கு மக்கள் அளிக்கும் உத்தரவாத்ததோடு“ தொடர்புள்ள விதத்தில்லேயே இயேசு “உள்ளவன்“ இல்லாதவன் எனும் சொற்களை உபயோகித்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது (1) ஏசாயா 6:9-10ஐ சுட்டிக் காட்டும் இயேசு, மக்கள் எவ்வாறு தன் உபதேசத்தை விளங்கிக்கொள்ளாமலும் ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்ததோடு (மத். 13:13-15) சீடர்களிடம் தேவ செய்தி இருப்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். (மத். 13:16-17) மேலும் 16ம் வசனத்தில் “காதுக்கள் கேட்கிறதினாலும்“ என இயேசு குறிப்பிட்டுள்ளமை கேட்ட செய்தியைச் சீடர்கள் விளங்கிக் கொண்டதையே அறியத் தருகின்றது. ஏனென்றால், “கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக் கடவான்“ என இயேசு வழமையாக உபயோகித்த சொற்பிரயோகம் (மத். 11:15, 13:9, 13:43, மாற் 4:9, 23, 13:9, லூக். 8:8, 14:35) “புரிந்து கொள்ளும் விதத்தில் கேட்டல்“ எனும் அர்த்தமுடையது(2) இதிலிருந்து “உள்ளவன்“ என்பது தேவனுடைய வாரத்தையை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டவனையும், “இல்லாதவன்“ என்பது தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளாத்தினால் இல்லாமலிருப்பவனையும் குறிக்கின்றது எனபதை அறிந்து கொள்கிறோம். மாற்குவிலும் லூக்காவிலும் இவ்விடயம் நேரடியாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவனுடைய வார்த்தையைக் கேட்பதைப் பற்றிய அறிவுறுத்தலுடனேயே இயேசுவின் இக்கூற்றும் இச்சுவிஷேசங்களில் உள்ளது(மாற். 4:23-25 லூக். 8:18) மத்தேயு 25:29 லும் லூக்கா 19:29 லும், தாலந்து பற்றிய உவமையின் விளக்கமாக இயேசுவின் இக்கூற்று உள்ளது. இவ்வுமையின்படி உள்ளவன் தனக்கு கிடைத்த தாலந்தை உபயோகித்து அதை அதிகரித்துக் கொண்டவன். இல்லாதவன. கிடைத்த தாலந்தை உபயோகிக்காமல் தன்னிடம் இருந்ததையும் இழந்து போனவன். இயேசுவின் கூற்றில் உள்ளவன் இல்லாதவன் எனும் சொற்பிரயோகங்கள் தேவனுடைய வார்த்தையையும் தாலந்துக்களையும் அடிப்படையாகக் கொண்டே சொல்லப்பட்டுள்ளன. “இது தேவனுடைய ஈவுகளுக்கு மாந்தர் அளிக்கும் உத்தரவாத்துடன் தொடர்புற்றுள்ளது(3).தேவ ஈவுகளான அவரது வார்த்தையையும் தாலந்துகளையும் நாம் உபயோகிக்கும் பொழுது அது இன்னும் அதிகமாக பெருகுகின்றது. மறுபுறத்தில் அவற்றை உபயோகிக்காமல் வைத்திருக்கும்போது இருப்பதும் இல்லாமல் போய்விடுகின்றது என்பதையே இயேசு இக்கூற்றின் மூலம் சுட்டிக் காட்டுகின்றார். எனவே, “உள்ளவன்“ தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டவன். “இல்லாதவன்“ அதை நிராகரிப்பவனாக இருக்கின்றான். “தேவ வார்த்தையைக் கவனித்துக் கேட்டு அதனை ஏற்றுக்கொள்ளும்போது நமது ஆவிக்குரிய அறிவு அதிகரிக்கின்றது. தேவ வார்த்தையை அசட்டை செய்யும்போது நம்மிடம் இருக்கும் கொஞ்சமும் இல்லாமல் போய்விடுகின்றது. (4) எனவே, நாம் தேவனுடைய வார்த்தைக்கு சரியான வித்ததில் உத்தரவாதமளிப்பவார்களாகவும், அவர் நமக்குத் தந்துள்ள தாலந்துகளையும் வரங்களையும் சரியான விதத்தில் உபயோகிக்கின்றவர்களாயும் இருக்க வேண்டும்.
குறிப்புகள்
(1) Donald A. Hagner, Word Biblical Commentary: Mathew. P. 373
(2) Ibid p. 308
(3) Leon Morris, The Gospel According to Mathew. P 340
(4) I. Howard Marshall, The Gospel of Luke A Commentary on the Greek Text. P.328
(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் சத்தியவசனம் 2000 எழுதிய சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டது.)
(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் சத்தியவசனம் 2000 எழுதிய சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டது.)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
பொருளாதார ரீதியாக இருந்தாலும் ஆவிக்குரிய செயலாக இருந்தாலும் இல்லாதவனுக்கே கொடுக்கப்பட வேண்டும் இருக்கிறவனுக்கு இன்னும் அதிகமாக கொடுப்பதனால் எந்த பிரயோஜனமும் இல்லை... இல்லாதவனுக்கு பொருளாதார ரீதியாகவோ இல்லை ஆன்மீக ரீதியாகவோ கொடுக்கப்பட்டால் தானே அவன் ஆன்மீகத்திலும் சரி பொருளாதாரத்திலும் சரி முன்னேற முடியும். விளங்கிக்கொள்ளாமலும் ஏற்றுக் கொள்ளாமலும் இருப்பவர்களுக்கே தான் இன்னும் அதிகமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் சரியா நண்பரே...
ReplyDeleteஒருவன் குடிகாரனாக இருக்கிறான் அவனிடத்தில் ஆன்மீகமும் இல்லை, கடவுள் பக்தியும் இல்லை அப்படிப்பட்டவனுக்கு ஆன்மீகத்திலும் சரி பொருளாதாரத்திலும் சரி நிறைவாக கொடுக்கப்பட வேண்டும் இதில் தான் நன்மை இருக்கிறது. ஒருவன் தினமும் மூன்று வேலை கடவுளை தொழுகிறான், தனிமனித ஒழுக்கத்துடன் இருக்கிறான் அனைத்திலும் அவனிடம் நிறைவாகவே காணப்படுகிறது அப்படிப்பட்டவனுக்கு கொடுப்பதனால் என்ன நன்மை?
பொருளாதார ரீதியாக இருந்தாலும் ஆவிக்குரிய செயலாக இருந்தாலும் இல்லாதவனுக்கே கொடுக்கப்பட வேண்டும்//
Deleteஇக்கட்டுரை பொருளாதார ரீதியாக கொடுக்கப்படும் விடயத்தைப் பற்றி பேசவிலலை. சரி நான் ஒன்று உங்களை கேட்கிறேன். நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்
திறமையாக வேலை செய்யும் ஒருவனுக்கு அதிகம் சம்பளம் கொடுப்பீர்களா? அல்லது எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக ஒருவேலைக்காரன் இருக்கிறான். அவனுக்கு அதிக சம்பளம் கொடுப்பீர்களா பல த்டவை அவனுக்கு சொல்லியும் பார்த்து விட்டீர்கள். இனி இவன் விடயத்தில் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள். இவன் எதுவும் இல்லாதவன் இவனுக்கு செய்ய வேண்டும் என சிந்திப்பீர்களா? அவனுக்கு திறமை இருக்கிறது. சோம்பேறியாகவே தொடர்ந்து இருக்கிறான். எந்தனையோ பேர் இப்படி இருக்கின்றனரே.
திறமையானவருக்கு அதிக சம்பள உயர்்வு, பதிவு உயர்வு கொடுப்பதை ஏன் எதிர்க்க வேண்டும்?
\\
ஒருவன் குடிகாரனாக இருக்கிறான் அவனிடத்தில் ஆன்மீகமும் இல்லை, கடவுள் பக்தியும் இல்லை அப்படிப்பட்டவனுக்கு ஆன்மீகத்திலும் சரி பொருளாதாரத்திலும் சரி நிறைவாக கொடுக்கப்பட வேண்டும் \\
அது அவன் திருந்தி நடக்கும் பட்சத்தில் தொட்ர்து குடிப்பேன். திருந்தமாட்டேன் என்றிருப்பவனுக்கு அதிகம் கொடுப்பது அவனை கெடுப்பதாகவே இருக்கும் அல்லாவா? ஒருவேளை அவன் திருந்தி நடந்தால் அதை செய்யலாம்
இக்கட்டுரையும் அதனை தான் சொல்கிறது.
திருந்தாதவனை திருத்துவதற்கு தானே கடவுள் அப்புறம் அவன் திருந்தவில்லை என்றால் எப்படி... அப்புறம் அவன் திருந்தவில்லை என்று இன்னும் அதிகமாக குடிக்க சொல்வதா?
ReplyDeleteஅப்படி இந்த பத்தியில் எங்கே சொல்லப்பட்டுள்ளது. திருந்தவே மாட்டேன் என்று சொல்பவன் உங்கள் வீட்டில் வேலைக்காரனாக இருக்கிறான். பலதடவை வாய்பு, எச்சரிக்கை கொடுத்து சலித்துப் போய்விட்டீர்கள்
Deleteஅவனுக்கு விருந்து கொடுத்தா உபசரித்துக் கொண்டிருப்பீர்கள். என்ன சார் உங்கள் கதை.