- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday, 30 December 2011

பாலியலின் வல்லமை


அறிமுகவுரை
எங்கள் சமுதாயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையிலான உறவுகளில் அநேக சிக்கலான பிரச்சினைகளை காணக்கூடியதாக காலமாகவிருக்கிறது. திருமறை நியதிகளுக்கு இசைவாக எதிர்பாலாருடன் எவ்வாறு தொடர்புகளை வைத்திருக்க வேண்டும் என்பதைக் குறித்து குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கிறிஸ்தவர்களால் அங்கீகரிக்க முடியாத சமுதாயத்தின் போக்கை  இலகுவாக பின்பற்றுபவர்களாகிவிடுவார்கள். 

பாலியலின் வல்லமை

........மகி்ழ்ச்சியான திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஆண்கள் அநேகர் தமது பாலியல் தன்மையை குறைத்து கணிப்பிட்டதால் வேறு பெண்களுடன் மிகப் பெரிய தவறுகள் செய்ததை நான் அறிந்திருக்கிறேன்



நாம் ஒருபோதும் பாலியல் தன்மைக்கு இருக்கும் வல்லமையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. உலகத்தில் உயிர்கள் தொடர்ந்து இருப்பதற்காக தேவனால் படைக்கப்படட ஒரு அற்புத வல்லமை இது. ஒரு ஆணின் பாலியல் தூண்டுகை விசேஷித்த வல்லமையுள்ளது. நீதிமொழிகள் 7ம் அதிகாரம், பாலியல் கவர்ச்சியின் காரணமாக பாலியல் பாவத்துக்குள் இழுப்புண்டு போகும் ஒருவன், ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வது போல(நீதி. 7:22) போகிறான் என்று விளக்குகின்றது. தங்களது கணவன்மாரின் பாலியல் தன்மையைக் குறித்து மனைவிமார் அறியாமையுடன் இருப்பது குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். தங்கள் கணவன்மார் சோதனையில் விழுந்துவிடத்தக்க சூழ்நிலைகளிலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய இந்த மனைவிமார் அனுமதிக்கிறார்கள். வீட்டிலுள்ள இளம் பணிப்பெண்களுடன் தமது கணவன்மாரை அநேக நாட்களுக்கு தனியே விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் தேவபிள்ளைகள் என்பதால் அவர்களை நம்ப வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் உணர்வுகளையும் , தூண்டுதல்களையும் இது இல்லாமல் செய்யாது. ஏனெனில் இது அவர்களுக்குள் இருக்கும் தன்மையாகும். திருமணமான ஆண்கள் தமது மனைவியுடன் திருமணத்திற்குள் வலிமையான பாலியல் தூண்டுதல் உள்ளவர்களாக படைத்துள்ளார். ஆகவே திருமண பந்தத்துக்குள் பாலியலை அனுபவிக்கலாம். பாலியல் தூண்டுதல் தேவனுடைய கொடையெனில், தேவபக்தி அதனைக் குறைத்துவிடக்கூடாது. 


ஆகவே, ஒரு ஆண் பாலியல் காரியங்களை பரீட்சை பார்க்கத் துணியக்கூடாது. இது மிகவும் வல்லமையுள்ளதாய் இருப்பதால் இதைக் குறித்து அசட்டையாகவும் இருக்க முடியாது. திரும்பவும் நான் சொல்வது என்னவெனில். இந்தப் பகுதியில் “பின்னர் கவலைப்படுவதைவிட மு்ன்னர் கவனமாயிருத்தல்“ நல்லது. இதற்கான முக்கிய பங்களிப்பு மனைவிடமே உள்ளது. வேறொரு பெண்ணுடன் தன் கணவர் ஈடுபடும் காரியம் தனக்கு விருப்பமில்லையென்பதை எப்பொழுது சொல்லவேண்டும் என்று அவள் அறிந்திருக்க வேண்டும். கணவன் செய்யும் ஒரு காரியம் மனைவிக்கு பிடிக்கவில்லையெனில் அவள் அவனை குற்றம் சாட்டும்படியாக அதனைச் சொல்லக்கூடாது. சொன்னால் அவன் தன்னைத் தற்காக்கும் விதமாக நடந்துகொண்டு பிரச்சினையை இன்னும் பெரிதாக்க ஏதுவாகி விடும். மகிழ்ச்சியான திருமண வாழ்வில் ஈடுபட்டிருந்த ஆண்கள் அநேகர் தமது பாலியல் தன்மையைக் குறைத்துக் கணி்ப்பிட்டதால் வேறு பெண்களுடன் பெரிய தவறுகளைச் செய்ததை நான் அறிந்திருக்கிறேன். 

சில கிழமைக்கு முன் எனக்குள் உண்டான ஒரு உண்மை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வேதாகமம், நாம் பாலியல் இன்பத்தை திருமணத்துக்குள்ளாக மட்டுமே அனுபவிக்க வேண்டுமென்று சொல்லுகிறது. ஆனால், சமுதாயமோ நாம் பாலியல் இன்பத்தை எப்பொழுது வேண்டுமானாலும், யாரோடு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையைத் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எம்மை அறியாமலேயே கிறிஸ்தவர்களாகிய நாமும் இந்த சிந்தனையினால் பாதிக்கப்பட்டுள்ளோம். 

உலகில் பாலியல் ரீதியாக மிகவும் கவர்ச்சியுள்ள ஆண்கள் பெண்கள் என்று பட்டியல் போடப்படுகின்றது. இந்த காரியத்திற்கான நியாய விளக்கம் என்னவெனில் இந்த அழகான மனிதர்களின் பாலியல் கவர்ச்சி முழு உலகத்திலுள்ளவர்களுக்கும் சந்தோஷம்படியாக கிடைக்கவேண்டு மென்பதாகும். அவர்களுடைய பால் தன்மையில் சந்தோஷப்பட எமக்கு உரிமையுண்டு என்று கருதப்படுகின்றது. எனவே, ஞாயிறு பத்திரிகைகள், சஞ்சிகைள் பாலியல் உணர்வுகளைத் தூண்டுத்தக்க விதத்திலான பெண்களின் படங்களைப் பிரசுரிக்கிறார்கள். ஆண்கள் அவற்றைப் பார்த்து திருப்பதியைப் பெற்றுக்கொள்வது எளிதாயிருக்கின்றது. 

நவீன ஆடைகளை வடிவமைப்பவர்கள் பெண்களின் உடலை கவர்ச்சிகரமானதாக்கி தமது வியாபாரத்தை முன்னேற்றுகிறார்கள். விளம்பரத்தின் வெற்றிக்கு பாலியல் பெரிதான செயல்விளைவைக் கொடுக்கின்றது என்பதை எமது நகரங்களில் காணப்டும் விளம்பரப் பலகைகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பாடல்களின் வரிகளும், கதை, திரைப்படம் போன்றவற்றின் கருத்துக்களும் திருமணத்திற்கு அப்பாலான பாலுறவு சாதாரணமானதொன்று எனவும் சிலசமயம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு அம்சம் எனவும் அர்த்தப்படும்படியாக அமைத்துள்ளன. பிலிப் ரயிக்கன் என்பவர் சில ஆராய்ச்சியின் அடிப்படையில், ஒரு சராசரி அமெரிக்கன் எல்லாவிதமான சந்திப்புக்களினூடாகவும் சிலேடை மொழியினூடாகவும் பாலியல் தொடர்பாக பத்தாயிரத்திற்குமதிகமான துணுக்குகளைக் காண்கிறான் என்று சொல்லுகிறார். மேலும், தொலைக்காட்சியில் காட்டப்படும் சோடிகளில் பத்தில் ஒருவருக்கு மேலாக திருமணத்திற்கப்பாலான பாலுறவைக் கொண்டவர்கள் என்றும் ரயிக்கன் கூறுகிறார். வேதாகமத்தின்படி இவை அனைத்தும் பாவங்கள். ஒரு பெண்ணை நாம் இச்சையுடன் பார்த்தாலே அது விபச்சாரம் என்று இயேசு சொல்கிறார். (மத். 5:28)


மிகவும் நெருங்கிப் பழகும் இருவர் தம் திருமணத்தைக் குறித்து சிந்திக்கும் முன்னரே ஒன்றாய் சேர்ந்து கணவன் மனைவி போல் வாழ்வது  இப்போது சாதாரணமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு பிரபலமான நடிகை பிரபல்யமான நடிகனொருவருடன் சேர்ந்து வாழச் சென்றுவிட்டாள் என்று கேள்விப்படும்போது நாம் அதனைக் குறித்து பெரிதுப்படுத்துவது கிடையாது. இவர்களே, வாழ்க்கையில் வெற்றியீட்டியவர்கள் என்று நமது வாலிபர்களால் கருதப்படுபவர்கள். ஆனாலும், வேதாகமத்தின்படி விபச்சாரம் எம்மை நரகத்திற்கு இட்டுச் செல்லும் (1 கொரி. 6:8-10) நரகமோ மிகவும் மோசமான இடம். இது மிகவும் பயங்கரமானதொன்று. ஒரு சுனாமியினால் ஆயிரக்கணக்கானோர் மடிந்து போவதைக் குறித்து நாம் கவலைப்படுகிறோம். ஆனால் பிரபல்யமான மனிதர்கள் தம்மைத் தாமே  நரகத்திற்குள்ளானவர்களாக்கி, இன்னும்  அநேகரை அதே வழியில் செல்லத் தூண்டுவதை இட்டு எந்தவித சிந்தனையுமில்லாதவர்களாய் நாம் இருக்கிறோம். 

எமது சிந்தனையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று அடிக்கடி வேதாகமம் சொல்வதில் எவ்வித விருப்பமில்லை. (எபே. 4:22-24, 1 தெச. 4:3-8, 2தீமோ 2:21-22, யாக். 4:6) நாம் தொடர்ந்து அருவருப்பின் அசுத்தங்களுக்கு முகங்கொடுக்கிறோம். ஆனால், அது எமக்கு அசுத்தமாக தெரிவதில்லை. அதுமட்டுமல்ல, அசுத்தமானது கணக்கெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்ற மனப்பாங்கிற்கு சென்றுவிட்டோம். இப்படியான ஒரு சூழலில் சோதனைளில் விழுந்து விடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாயுள்ளன. விபரச்சாரத்திற்கு எம்மை இட்டுச் செல்லும் வழுக்கலான பாதையில் நாம் முதலாவது அடியை எடுத்து வைத்துள்ளோம். இன்றைய உலகில் வாழும் மக்கள் மத்தியில் காணப்படும் பொதுவான தவறான வாதமாகிய. பாலியல் இன்பத்தை பொருத்தனையுடனான அன்பு இல்லாமலே பெற்றுக்கொள்ளலாம் என்ற தற்கால கொள்கையை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். இப்படியான இறையியல் கொள்கை மாற்றம் எமது சிந்தனையில் ஏற்பட்ட பின்னர் உக்கிரமான சோதனையை எம்மால் மேற்கொள்ள முடியாது. எம்மைச் சுற்றிலும் எப்பொழுதும் காணப்படும் அசுத்தங்கள் எமது சிந்தனைக்குள் போய்விடாமலிருக்க எம்மைச் சுத்தப்படுத்தும்படியாக தேவனிடம் விண்ணப்பிப்பது எவ்வளவு முக்கியமானதாயிருக்கிறது. 


எதிர்பாலரைத் தொடுவது நாம் கவனமாயிருக்க வேண்டிய இன்னுமொரு அம்சமாகும். எதிர்பாலரைக் கட்டித் தழுவுவது இன்றைய நாட்களில் சபையில் சாதாரணமாகிவிட்டது. சில கலாசாரங்களில் இது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாய் இருக்கலாம். ஆனால். இது சில நேரங்களில் கட்டுக்கடங்காமல் போகலாம். இப்படி நடந்த சம்பவங்கள் அநேகம் உள்ளன. ஜெரி ஜென்கின்ஸ் என்பவர் நாம் யாரைக் கட்டி அணைக்கிறோம் என்பதனைக் குறித்துக் கவனமாயிருக்க வேண்டுமென்றும்., அதனை நாம் செய்யும்போது எம்மைச் சூழ மற்றவர்கள் இருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறார். 

நாம் தவிர்க்க வேண்டிய மற்றுமொரு காரியம் நீண்ட கட்டித் தழுவல் ஆகும். அன்புக்குரிய தழுவலானது, மிகக் குறைந்த நேரத்தில் பாலியல் தொடர்பானதாக மாறிவிடலாம். நீங்கள் இப்படியான நீண்ட தழுவலினூடாக ஒருவரை ஆறுதல்படுத்தலாம். ஆனால் அதிலுள்ள ஆபத்துக்கள் அதிகமானது சோகத்திலுள்ள ஒருவருக்குத் தேவைப்படும் கடைசிக் காரியம், தான் மிகவும் விரும்பும் நபரிடமிருந்து வரும் குழப்பகரமான பாலியல் ரீதியான உறவாகும்.

ஜெபிக்கும்போது ஒருவரின் தலையில் கைகளை வைப்பது இந்நாட்களில் சாதாரணமானமொன்றாகும். இந்தப் பழக்கம் இலங்கையில் சில குழப்பங்களை ஏற்படுத்தியிருப்பதனால், நான் இதனை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். நாம் ஒருவருக்காக ஜெபிக்கும்போது அவரை எங்கே தொடுகிறோம் என்பதைக் குறி்த்து கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாலைச் சேர்ந்த ஒருவரது விடயத்தில் அவரது தலையை மாத்திரமே நான் தொடுவேன். அதுவும் நான் அவருடன் தனியாக இருந்தால் அதனைச் செய்ய மாட்டேன். ஆனால் இலங்கையிலுள்ள சில கிறிஸ்தவ தலைவர்கள் பொருத்தமற்ற இடங்களில் கைகளை வைத்து ஜெபித்து கிறிஸ்துவிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளனர். 

பாலியலின் வல்லமை காரணமாக நாம் இந்தப் பகுதியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இலங்கையிலுள்ள மிகவும் சிறந்த கிறிஸ்தவத் தலைவர்களில் ஒருவரான கலாநிதி கோல்டன் விக்ரமரட்ன அவர்கள், உலகளாவிய ரீதியில் பெந்தகோஸ்தே இயக்கத்தைச் சேர்ந்தவரும் எண்பது வயதைக் கடந்த முதிர்ந்த தலைவருமான டேவிட் பிலோசிஸ் என்பரைச் சந்தித்த அனுபவத்தைச் சொல்கிறார். எப்பொழுது ஒரு மனிதன் தன் பாலியல் சோதனையிலிருந்து விடுபட்டுவிட்டதாகக் கருதலாம் என்று கலாநிதி கோல்டன் அவர்கள் டேவிட் அவரிகளிடம் கேட்டாராம். அதற்கு அந்த வயோதிப கிறிஸ்தவ வீரன் “என்னைக் கேட்கவேண்டாம். இந்ததக் கேள்விக்குப் பதிலளிக்க நான் மிகவும் இளமையானவன்“ என்று பதிலளித்தாராம். 

இவ்வாக்கமானது கலாநிதி அஜித் பெர்ணான்டோ (Director, Youth for Christ(Sri Lanka)) அவர்கள் எழுதிய “உணர்வு பூர்வமான நடத்தை : முன்யோசனையின்றி ஏற்படக்கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி?“ எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு  Youth for Christ Publication தமிழில் மொழிபெயர்த்தவர் கலாநிதி அன்பழகன் அரியதுரை)
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

4 comments:

  1. மிக்க நன்ட்ரி மிகவும் பயனுஅலதக இருந்தது.....

    ReplyDelete
  2. Thanks for u r comment Bro. God Bless You

    ReplyDelete
  3. Thank you for this wonderful and needy Article. God bless you

    ReplyDelete
  4. An article which is must both for today's younger generation and especially for married people.

    ReplyDelete