- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday, 25 September 2011

நட்பின் படிகள்




ஒவ்வொரு கற்களின் மீதும் மெதுவாக அடிவைத்து கவனமாக ஒரு ஆற்றினை கடந்த அனுபவம் உங்களுக்குண்டா? ஒரு சிறுவனாக நான் இதைச் செயதுள்ளேன். சில நேரங்களில் இது மிகவும் இலகுவானது. ஆனால் அநேக தடவைகளில், கற்களின் இடைவெளி தூரமாக இருக்கு்போது, அல்லது ஆற்றினைக் கடக்க முடியாதபடி தண்ணீர் வெள்ளமாக வழிந்தோடும் போது அந்த ஆற்றினைக் க்டப்பது மிகவும் கடினமானது. 

அத்தகைய தருணங்களில், ஒரு ஆற்றின் நடுவே நான் தத்தளிக்த்துக் கொண்டிருக்கும்போது, எங்கே செல்வது என வழிதெரியாமல் ஒரு சிறிய கல்லின் நடுவே தடுமாறிக் கொண்டிருக்கும்போது வாழ்க்கையில் மிகவும் விலைமதிப்பு மிக்கவர்கள் நண்பர்களே என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். 

பாருங்கள். ஒரு சிறந்த பாதையை தெரிவு செய்யும்படி நண்பர்கள் நமக்கு தைரியத்தை அளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் நாம் நிலைதடுமாறாது நிற்பதற்கும் நண்பர்களே எமது கைகளைப் பற்றிப் பிடித்து எம்மை நிலைநிறுத்துபவர்களாக இருக்கிறார்கள். ஆற்றினைக் கடந்து முடிக்கும்வரை நானும் எனது நண்பனுக்கு அவ்வாறே உதவிகளைச் செய்யக் கூடியவனாக இருப்பேன். 

உங்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் நண்பர்களைக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியமானது, உங்கள் நலனுக்காக பாடுபடுபவர்களும், நீங்கள் நெறிதவறி நடக்கும்போது நல்வழிப்படுத்துபவர்களாகவும் நண்பர்கள் இருக்கும்பொழுதுதான் கால்கள் தடுமாறாமல் வாழ்க்கையெனும் ஆற்றினை கடந்து செல்லக்கூடியதாக இருக்கும். 

ஞானமாக நண்பர்களைத் தெரிவு செய்யுங்கள்
நான் வளரும்போது, வாழ்க்கையில் மிகவும் சிறப்பாக இருக்கவேண்டுமானால், சிறப்பான நண்பர்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதைக் கண்டு கொண்டேன். ஆகவே இக்கட்டுரையின் ஊடாக, சிறந்த நண்பர்களை வைத்திருப்பதற்கு தேவையான நட்பின் நான்கு முக்கிய படிகற்களைக் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

முதலாவது நான் கூறவிரும்பும் காரியமானது, சிறந்த நண்பர்களைக் கொண்டிருக்க வேண்டுமானால், சிறப்பான நண்பராக நீ மாற வேண்டும். வேதாகமம் கூறுகின்றபடி, நீதிமொழிகள் 18:24 இல் “சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு“. ஆகவே, இந்த அளவுகோலின் அடிப்படையில் உங்கள் நண்பர்களை நோக்கிப் பார்க்கும் அதேவேளையில் அவர்களுக்கு நீங்கள் யார் என்பதைக் குறித்தும் நினைவில் வைத்திருங்கள். 

நல்ல நண்பர்கள் எல்லா நேரத்திலும் நேசிப்பார்கள்
1 பேதுரு 4:8 இல் “ அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள், இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்“ ஒருவர் செய்கின்ற காரியத்தை வைத்து அவர் உங்களுடன் நண்பராகவோ உங்களை நேசிக்கவோ முடியாது. நண்பர் இல்லாத நேரத்திலும் அவரை நேசிக்கக்கூடியவராகவே நல்ல நண்பர்கள் இருப்பார்கள். சூழ்நிலைகள் எவ்வாறாக இருந்தபோதிலும் உண்மையான நண்பர்கள் எப்பொழுதும் எல்லா நேரத்திலும் நேசிக்கக்கூடியவர்களாகவே இருப்பார்கள். 

நல்ல நண்பர்கள் எப்பொழுதும் உற்சாகப்படுத்துவார்கள் 
ஒரு சிலருக்கு எதிலாகிலும் அதிர்ஷ்டம் அடித்தவுடன் அவர்களைச் சூழ அநேக “நண்பர்கள்“ மொய்த்து விடுவார்கள் அதற்கு முன்னர் அவர்கள் நண்பர்களாக பழகியிருந்திருக்கவே மாட்டார்கள். இதனைத்தான் நீதிமொழிகள் 19 : 6 ஆம் வசனம் கூறுகிறது. “பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்“ எனினும் நல்ல நண்பர்கள் தங்கள் நண்பர்களால் இலாபம் அடையலாம் என்ற நோக்கத்துடன் பழகமாட்டார்கள். அவர்கள் உங்களுடைய நட்பினை எதிர்பார்ப்பதற்குக் காரணம், ஏதேனும் இலாபம் பெறும் நோக்கமாக இருக்குமாயின், அல்லது ஏதேனும் தீய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இருக்குமாயின் அவர்கள் ஒருபோதும் நல்ல நணர்களாக இருக்க முடியாது. ஆகவே, உங்கள் நட்பினை பெறுவதற்காக பிறர் காத்திருக்கும்படி நடந்து கொள்ளாமல், நட்பு தேவைப்படும் ஒரு சிலரை உங்களுடைய சிறந்த நண்பர்களாகத் தெரிந்தெடுத்துக் கொளளுங்கள். ஏதேனும் ஒரு வழிமுறையில் அவர்களுக்குச் சேவை செய்ய முற்படுங்கள். சுயநலத்துடனான வாஞ்சையிலும் பேராசையிலும் பார்க்க, சுயநலமற்ற சேவை மனப்பான்மையுள்ளவராக மற்றவர்களால் நல்ல நண்பராக தேர்ந்தெடுக்கப்படத்தக்கவராக உங்களை மாற்றிக் கொள்ளுஙகள். 

நல்ல நண்பர்கள் நேர்மையுள்ளவர்களாக இருப்பார்கள்
நீதிமொழிகள் 27:6 கூறுகிறது  “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்“ ஒரு சிறந்த நண்பனாக இருக்க விரும்புகின்றவன் தன்னுடைய சிநேகிதனுடைய வாழ்க்கையில் தேவையிலலாமல் தலையிட மாட்டான். நண்பத்துவத்தின் சிறந்த தன்மையானது ஒருவருக்கொருவர் நேர்மையுள்ளவர்களாக இருப்பதேயாகும். இதைச்செய்வதற்கு உரிய எல்லா முயற்சிகளையும் எடுப்பவனே சிறந்த நண்பனாக இருக்க முடியும். ஒரு தலைசிறந்த மருத்துவர் தனது நோயாளியைக் குணமாக்கும்படியாக வருத்தம் தந்தாலும் உரிய மருத்துவச் சிகிச்சையை செய்வார். அவ்வாறே சிறந்த நண்பரும் தன்னுடைய நண்பரின் நலனுக்காக வேதனையான அணுகுமுறையையும் கையாளுவார். 

நல்ல நண்பர்கள் சிறப்பானதை நம்புவார்கள்
உங்கள் நண்பர்களைக் குறித்து எதிர்மறையான தீயக் காரியத்தை நீங்கள் கேள்விபடுவீர்களாயின், நீங்கள் சொல்லவேண்டிய முதலாவது காரியம். “அது உண்மையாக இருக்க முடியாது“ என்பதே. உண்மை இன்னதென்பதை அறியும்வரை நல்ல நணபன் ஒருபோதும் தீய எதிர்மறையான காரியத்தை நம்பப்போவதில்லை. 1 கொரிந்தியர் 13: 6 ம் வசனம் கூறுகிறது “அன்பு அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்“ 

நல்ல நண்பர்களைத் தெரிந்தெடு
இக்கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு அநேக சிறந்த நல்ல நண்பர்கள் இல்லாவிட்டாலும், இன்றே உங்களுக்கென நண்பர்களைச் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்! நீங்கள் அறிந்துள்ள நபர்களைக் குறித்து சிந்தியுங்கள். அவர்களில் யாருடனாவது நீங்கள் அறிந்துள்ள நபர்களைக் குறித்து சிந்தியுங்கள். அவர்களில் யாருடனாவது நீங்கள் நண்பர்களாக இருக்கக்கூடுமா? அவர்களை போய்ச் சந்தியுங்கள். இதைச் செய்யும்போது, சகோதரனைக் காட்டிலும் நெருக்கமாக உங்களைச் சிநேகிப்பவர்களை நீங்கள் கண்டுகொள்வீர்கள். உங்கள் நட்பு வட்டாரத்தைச் சுருக்காதீர்கள். 

நீங்கள் பற்றிப் பிடித்திருக்கத்தக்க நல்ல நண்பர் இயேசு ஒருவரே. சிறந்த நட்புக்கான முன உதாரணம் அவர் ஒருவரே. அந்த மேலான நட்பினை நீங்களும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 


(நன்றி சத்தியவசனம் - September - November 2011, கட்டுரையாசிரியர் வுட்ரோ குரோல்)











தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment