- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday, 5 September 2011

சின்னத் திரையின் தாக்கங்களை தாக்குப்பிடிப்பது எப்படி?



தொலைக்காட்சி மூலம் நல்ல காரியங்களையும் அதேசமயம் தவறான சீர்கேடான காரியங்களையும் நாம் அறிந்துகொள்கிறோம். அதன் பலாபலன்களைத் தீர்மானிப்பது நமது கையில்தான் உள்ளது.

இயேசுவானவர் வனாந்தரத்தில் பிசாசின் சூழ்ச்சியான மூன்று சோதனைகளினால் சோதிக்கப்பட்டார். முதலாவது சோதனை சகல ஞானமும் அறிவும் நிறைந்த அவருடைய அறிவாற்றலையும், இரண்டாவது சோதனை, ஆண்டவருடைய மனவலிமையையும் சார்ந்திருந்தது. அறிவு சம்பந்தப்பட்ட காரியத்திலும் அவருடைய மனவலிமை திறனைச் சார்ந்த காரியத்திலும் இயேசுவை வீழ்த்த நினைத்து தோற்றுப்போன பிசாசு, கடைசியாக கற்பனை வளம் மூலம் இயேசுவை சோதித்தான். உலகத்தின் அத்தனை அழகையும் அவருக்கு இமைப்பொழுதில் காண்பித்து என்னை வணங்கினால் இந்த உலகையே உமக்குப் பரிசாக அளிப்பேன் என்று, எத்தனை அழகாய்க் கூறினான் தெரியுமா? சோதனையின் நாடித்துடிப்பு இதில்தான் வெளிப்படுகிறது. 


ஒருவன் என்னுடைய சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொள்ளக்கூடுமானால் அவன் என்னையே சிறைபிடித்துவிட்டான் என்று பொருள். கற்பனைத் திறனானது, மனிதனின் அறிவுத்திறனையும் மன வலிமையையும் ஒதுக்கிவிட்டு பலவித சிந்தனைகளால் மனிதனை அலைக்கழித்து சிறைப்படுத்தி ஆட்சிசெய்கிறது. எனவே இசையும் தொலைக்காட்சியும் எளிதாக மனித உள்ளங்களை ஆக்கிரமித்து அவற்றைத் தங்கள் ஆட்சிப் பீடமாக மாற்றி விடுகின்றன. 


“கண்வழியாக அல்ல. கண்காணும் காட்சிகள் மூலமாய் நாம் அதிகம் சோதிக்கப்படுகிறோம்“ என்று வில்லியம் பிளேக் கூறுகிறார். புகைப்படக்கருவி காட்சிகளை விழுங்கி படமாக்குகிறது. பின்பு அது தான் படமாக்கிய காரியங்களை (அதாவது போரைப் பற்றிய சூடான காட்சிகள், தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்புகள், ஆபாசத்தை அள்ளித்தூவும் திரை வசனங்கள், கதாநாயகன், கதாநாயகிகளின் காதல் லீலைகள், சொகுசான வாழ்க்கை, அழகான கார். குளிர்சாதனப் பெட்டி என இவற்றை மிகத் தேவையானதாக விளம்பரப்படுத்தும் காட்சிகள் ஆகியவை) துர்இச்சைக்கும் பொருளாசைக்கும் சொகுசான வாழ்வுக்கு் நேராக ஓட நம்மைத் தூண்டுகிறது. இதைப் பார்க்கும்பொழுது, காட்சிகளாக காண்பவைதான் மனிதனுக்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்

“தொலைக்காட்சிப் பெட்டிக்கருகில் செல்வதற்கு கூட என் பிள்ளைகளை அனுமதிக்க மாட்டேன்“ என தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த உலசேர் சூசன் தன்னு்டய 92ம் பிறந்தநாளில் கூறினார். அது ஒருபுறம் இருக்க, தொலைக்காட்சியின் பலவீனத்தை விபரித்துக் கூறும்பொழுது சைமன்வியல் என்பவர் தொலைக்காட்சி பிரபல்யம் அடைவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு கூறினார். “எப்போதுமே நல்ல காரியங்களை கற்பனை ஏற்றிக் கூறும்பொழுது அது சுவாரசியமற்றதாகவே தோன்றும். ஆனால் கற்பனையாக உருவாக்கப்பட்ட கெட்ட காரியங்கள் எப்போதும் கவர்ச்சிமிக்கதாயும் பலரை தன்வசம் கவர்ந்து ஈர்க்கும் தன்மையுடையதாயும் இருக்கும்“ என குறிப்பிடுகிறார்.


தொலைக்காட்சியின் தீமைதான் என்ன?
தொலைக்காட்சி மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சியற்ற மந்தநிலைக்குத் தள்ளுகிறது. தினமும் வாடிக்கையாக தொலைக்காட்சிக் காண்போரின் நியாயமான மன எழுச்சிகளைத் தணியச் செய்து கருணையற்றவராககுகிறது. இதனால், எவ்வளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்க்கிறாரோ அவ்வளவுக்கு அதிகம் அவர் உணர்ச்சியற்றவராகிறார். கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றப்படும் குளிர்ந்த தண்ணீரில் விடப்பட்ட தவளை மரிக்கும்வரை உணர்வற்றதாக பழகி விடுவதுபோல் தினம் தொலைக்காட்சியை தொடர்ந்து பார்க்கும்பொழுது மனிதனும் சமுதாயத்தில் நிகழும் அவலநிலையை ஓயாமல் பார்த்து உணர்ச்சியற்ற பிண்டமாக மாறிவிடுகிறான். 


தொலைக்காட்சி ஒருவர் ஆழ்ந்த கவனிக்க வேண்டிய காரியங்களில் கவனம் செலுத்தாதபடி தடுத்து விடுகிறது. விறுவிறுப்பான காட்சிகளையும் கார்ட்டூன் படங்களையும் சதா பார்க்கும் ஒரு குழந்தைக்கு, தன் பள்ளிப்பாடங்கள் கசக்கும். ஆசிரியர் கற்றுத் தரும் முறை, தான் காணும் காட்சியைப் போல கவர்ச்சியாக இல்லை என எண்ணத் தோன்றும். எனவே பாடத்தை கவனிப்பது சலிப்பு நிறைந்த ஒன்றாகவே தோன்றும். விறுவிறுப்பான திரைப்படக்காட்சிக்கு இணையாக நமது குழந்தைகள் வாலிபர்களுக்கு அவர்கள் சிந்தனையை சென்றடையும் வண்ணம் நல்ல செய்திகளை கூற முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 

தொலைக்காட்சி கதாநாயகனையும் கதாநாயகிகளும் உடலை மெருகேற்றி காட்சியளிக்கும் விளம்பர மாதிரிகளையும் உருவாக்குகிறது. இத்தகைய நபர்களினால் இளம் தலைமுறையினர் அதிகம் கவரப்பட்டு அவர்களது அடிசசுவடுகளைப் பின்பற்றத் துணிகின்றனர். அவர்களைப் போல மாற இவர்களும் செய்படுகின்றனர். இதனால் இளைஞர் மத்தியில் சிற்றின்பத்தை புகழையும் குறியாகக் கொண்ட வறட்டுக் கொள்கைவாதிகள் நாள்தோறும் உருவாகி பெருகி வருகின்றனர். மேலும், ஏட்டுச் சுரைக்காய்கூட கறிக்கு உதவும் என்ற நிலையை உருவாக்க தொலைக்காட்சிப் பெட்டிகள் முயலுகின்றன.. தொலைக்காட்சியில் அனுபவம் இல்லாத மனிதர்களும் தங்களது பிரபல்யத்தினால் சில அனுபவங்களையும் ஆழ்ந்த கருத்துக்களையும் மக்களுக்கு சொல்லிடத் துணிகின்றனர். 

அத்துடன், தொலைக்காட்சி நல் நடத்தை இல்லாமை, சோம்பேறித்தனமான வாழ்வு, மற்றவர்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற பலவித பக்கவிளைவுகளை மனிதன் சந்திக்கின்றான். இருட்டறையில் உட்கார்ந்து பலவண்ண ஒளியூட்டும் இச்சதுர பெட்டிமுன் கிடக்கும் மானிடரின் அவல நிலைமை மாறிட மனரீதியான தீர்வுகளை நாம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 

நல்லதையும் கெட்டதையும் பகுத்தறியும் தன்மை உடைய நாம் தொலைக்காட்சி மூலம் விளையும் நன்மை, தீமைகளை பகுத்தறிவது மிக முக்கியமானதாகு்ம். தனிநபராகவும். குடும்பமாகவும் தொலைக்காட்சியின் நன்மை, தீமைகளைக் கலந்து ஆலோசித்து சில விதிமுறைகளை கட்டுப்பாடுகளை நமத குடும்பங்களில் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

1) உணவருந்தும் நேரத்தில் தொலைக்காட்சி காணாதீர்கள். உணவருந்தும் நேரம் குடும்பத்தின் உறவுகளை பலப்படுத்தும் சிறந்த நேரம். அது சம்பாஷனைக்குரிய நேரம். 

2) தீவிரவாதத்தைப் பற்றிய முழு விபரங்களையும் சண்டைக்காட்சிகளையும் காண்பது கிறிஸ்தவ குடும்பங்களுக்குத் தகாது. ஏனெனில் அது கலக குணத்திற்கே வித்திடும். 

3) காலங்கள் கர்த்தரின் வெகுமதி. பொன்னான நேரத்தை தொலைகாட்சி பெட்டியின் முன்னாலேயே கழித்துவிடாமல் நல்ல காரியங்களுக்கு ஞானமாய் பயன்படுத்துவோம்

4) குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சிகளை நாம் உன்னிப்பாக கவனிப்பது நல்லது, அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் அவர்களுக்கு உண்மையிலேயே பயன் உள்ளதா என்பதை அவர்கள் மூலமாகவே கண்டறிய வேண்டும். 

5) குழந்தைகள் தொலைக்காட்சிப் பார்ப்பதை குருட்டுததனமாக தடைசெய்யாமல், அதேநேரத்தில் அவர்கள் கவனத்தை வேறொரு பொழுது போக்கிலோ அல்லது வேறு நல்ல காரியத்திலோ திசைதிருப்ப நாம் முயற்சி செய்ய வேண்டும். 

6) தொலைக்காட்சிகளை விட புத்தகங்கள், செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கத்தை நாம் அன்றாடம் கடைபிடிக்க வேண்டும். அதனால் வளமான ஞானத்தையும் நல்ல பழக்கங்களையும் ஆழமான கற்பனை வளத்தையும் நாம் அறுவடை செய்திட முடியும். 

7) தனி ஜெப நேரங்களையோ குழு ஜெபநேரத்தையோ தொலைக்காட்சியின் காட்சிகள் திருடிவிட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். தேவனுக்குரிய நேரத்தை தேவனுக்கு கொடுப்பத்தில் எப்பொழுதும் கண்டிப்பாகவே இருங்கள். 

8) ந்ம்முடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் கர்த்தருடைய வார்த்தைகளால் நிரப்பும்போது கெட்ட காரியங்கள் நம்முடைய சிந்தனையை விட்டு தானே அக்ன்றுவிடுவதை யாவரும் மறுக்க இயலாது. முறையாகக் கடைபிடிக்கும் கிறிஸ்தவ காலை தியான நேரங்கள் ஆண்டவருடைய சிந்தனைகளையும் சாயலையும் நம்மில் பிரதிபலிக்க உதவும்.

9) தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் கடிதங்கள் எழுதி தரமான நிகழ்சசிகளை ஒளிபரப்பிட அடிக்கடி குரல் எழுப்புங்கள். தகாதவைகளை ஒளிபரப்புவதாக அறிய வந்தால் கண்டனம் செய்து எழுதுங்கள். 

நன்றி : சத்தியவசனம் - Oct-Dec 2006
(Riseup & Build) - ரவி சக்கரியாஸ்
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment