சங்கீதம் 75:8 இல் கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். என்றுள்ளது இதன் அர்த்தம் என்ன? (கே. ராமலிங்கம், செங்கல்பட்டு, இந்தியா)
தேவனுடைய கடுமையான நியாத்தீர்ப்புக்கான உருவகமாக மதுப்பானப் பாத்திரம் வேதாகமத்தின் சில வசனங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தல் 14:10 இல் இவ்விரணம் நமக்கு புரியும்படியாக எழுதப்பட்டுள்ளது. அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். என்று அவ்வசனத்தில் விளக்கப்பட்டுள்ளது. துன்மார்க்கர் தேவனுடைய தண்டனையாகிய உக்கிரமான மதுவைக் குடித்து அதினால் வாதிக்கப்படுவார்கள் என்பதே சங்கீதம் 75:8 இன் விளக்கமாகும். இத்தகைய விபரணத்தை யோபு 21:20 ஏசாயா 51:17 எரேமியா 25:15போன்ற வசனங்களிலும் நாம் அவதானிக்கலாம்.
அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்.
எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு,
தொடர்புடைய பதிவுகள் :
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment