- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday, 29 May 2012

ஆபத்துக்காலத்தில் அடைக்கலமளிக்கும் ஆண்டவர்

2:1வேதப் பகுதி: யோனா 2:1-10


2:1அ. யோனா மீனின் வயிற்றிலிருந்து ஏறெடுத்த விண்ணப்பம். நாம் எவ்விடத்தில் இருந்தும் தேவனை நோக்கி மன்றாடலாம் என்பதை இது அறியத்தருகின்றது. தேவன் குறிப்பிட்ட சிறப்பான இடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டவர் அல்ல (யோவான் 4:21). கடலில் தூக்கிப்போடப்பட்ட யோனா (1:15), இனிமேல் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை அறிந்தவனாக தேவனிடம் சரணடைந்தான் (2:6-7). கப்பலில் இருந்தபொழுது மற்றவர்கள் ஜெபிக்கச் சொல்லியும் பேசாமல் இருந்த அவன் (1:6), இப்பொழுது நெருக்கடியான சூழ்நிலையில் தேவனிடம் மன்றாடுகிறான். நெருக்கடியான சூழ்நிலையில் நாம் தேவனைவிட்டு ஓடிப்போகாமல், யோனாவைப் போல அவரிடம் தஞ்சமடைய வேண்டும். துயரங்களும் நெருக்கடிகளும் வரும்போது தேவனைவிட்டு வழிவிலகிச் செல்வது அர்ததமற்றதும் ; அறிவீனமானதும், ஆபத்தானதுமான செயல் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.


யோனவின் ஜெபம் கிறிஸ்தவர்களாகிய இப்பிரசங்கத்தில் நமக்கு கற்பிக்கும் சத்தியங்களை இப்பிரசங்கத்தில் பார்ப்போம்.

(1). யோனா தேவனை அறிந்திருந்தான்.
2:1ஆ. “கர்ததர்’’ என்பது தேவன் இஸ்ரவேல் மக்களுடன் செய்துகொண்ட  உடன்படிக்கையின் பெயராகும். யோனா, தான் அறியாத தெய்வங்களிடம் முறையிடவில்லை. மெய்யான தேவனை இயேசுகிறிஸ்துவின் மூலமாக நாம் தனிப்பட்ட ரீதியாக அறிந்திருக்கின்றோமா? அப்பொழுது மட்டுமே நம்மால் தேவனிடம் நம் ஜெபங்களை ஏறெடுக்கமுடியும் (யோவான் 16:23). இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே மனிதர்கள் தேவனிடம் செல்லும் சிலாக்கியத்தைப் பெற்றுள்ளனர் (எபே.2:13-18, எபி.10:19-22). இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் நாம் தேவனுடைய பிள்ளைகளாகி, அவரை அப்பா, பிதாவே என்று உரிமையோடு அழைக்கக்கூடிய ஆசீhவாதம் ; கிடைக்கின்றது (யோவா.1:12, கலா.3:26, 4:6). 2:2-3. “பாதாளத்தின் வயிறு’’ என்பது மீனின் வயிறு அல்ல. 3ம் வசனம் அவன் கடலின் அடியில் இருப்பதைப் பற்றிய விவரணமாகவே உள்ளது. பாதாளம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “ஷியொல்’’ என்னும் எபிரேயப் பதம் கல்லறை, குழி, பள்ளம், என்னும் அர்ததங்களையுடையது. இது மரித்தவர்களின் ; சரிரங்கள் செல்லுமிடத்தைக் குறிக்கின்றது (ஆதி.37:35, 42:38, 44:29, 44:31, எண்.16:30, யோபு.17:13-16, 21:13, 24:19, சங்.31:17, ஏசா.38:10). எனினும் யோனா மரித்த பின்னர் ஜெபித்ததாக அல்ல, மரணத்தருவாயில் இருக்கும்போது மன்றாடியதைப் பற்றியே குறிப்பிட்டுள்ளான்.

(2) யோனா தேவசெயலை அறிந்திருந்தான்.
2:3 கடலில் போடப்பட்ட யோனா, தேவன் தன்னைக் காப்பாற்றியுள்ளதை அறிந்திருந்தான். கப்பலிலிருந்தவர்கள் தன்னைக் கடலில் போட்டது மட்டுமே யோனாவுக்குத் தெரியும். மீனின் வயிற்றுக்குள் இருப்பது தெரியாது. கடலில் போடப்பட்ட யோனா, தான் இன்னும் உயிரோடு இருப்பதனால், கடலில் போடப்பட்ட போது தான் ஏறெடுத்த ஜெபத்திற்குத் தேவன் பதிலளித்து, தன்னைக் காப்பாற்றியதற் காகத் தேவனை ஸ்தோத்தரித்தான். இதனால்தான், 2 முதல் 7 வரையிலான வசனங்களின் வினைச்சொற்கள் இறந்தகாலத்தில் உள்ளன. கடலில் போடப்பட்ட யோனா, தான் மரிக்கும் நிலையில் இருந்தபோது ஏறெடுத்த ஜெபத்தைக் கேட்டுத் தன்னை உயிரோடு காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி செலுத்தினான். நிகழ்காலத் தேவைக்காக ஜெபிக்கும்போது, கடந்த காலத்தில் தேவன் நம்முடைய வாழ்வில் செய்த நன்மைகளை நினைவுகூர்நது அவற்றுக்குத் தேவனுக்கு நன்றி செலுத்தி ஜெபிக்கவேண்டும் (1தெச.5:18, சங்.100:4, 150:6, 117:1, 145:3, 96:4, 106:48, 147:1). 2:4. யோனா தேவன் தன் வாழ்வில் செய்ததை அறிந்திருந்தமையால் அவரை இன்னும் அதிகமாக விசுவாசித்தான். கடலில் போடப்பட்ட தன்னைத் தேவன் மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியமையால், அவர் நிச்சயம் தன்னைக் கரைசேர்பபார் என்னும் நம்பிக்கையுடன் அவன் இருந்தான். தேவசமுகத்திலிருந்து  தள்ளப்பட்ட தான் மறுபடியும் தேவசமுகத்தில் இருப்பேன் என்னும் நம்பிக்கை அவனுக்கு இருந்தது. தேவன் முழுமையான விடுதலையைக் கொடுக்காத போதிலும், அவர் தன்னுடைய ஜெபத்திற்குப் பகுதியளவில் பதிலளித்து தன்னை இன்னும் உயிரோடு வைத்திருப்ப தனால், அவர் நிச்சயமாகத் தன்னை முழுமையாக விடுவிப்பார் என்னும் விசுவாசம் யோனவுக்கு ஏற்பட்டிருந்தது. எத்தகைய சூழ்நிலையிலும் தேவன் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் தளர்நது போகக்கூடாது  (யாக்.1:6, எபி.11:6). 2:4-6. கடலில் போடப்பட்டு மரிக்கும் நிலையை அடைந்த யோனாவைத் தேவன் ஒரு மீனின் வயிற்றுக்குள் அனுப்பி அவனை உயிரோடு காப்பாற்றினார் (1:17).


(3). யோனா தேவவசனங்களை அறிந்திருந்தான்
யோனாவின் ஜெபம் சங்கதப் புத்தகத்தின் வசனங்களாகவே உள்ளன. அவன்  தன்னுடைய அனுபவத்தையும் விண்ணப்பத்தையும் வேத வசனங்களில் வெளிப்படுத்தியுள்ளான் (சங்.120:1, 3:4, 18:4-5, 88:6-7, 42:7, 31:22, 5:7, 69:1-2, 49:15, 56:13, 103:4, 107:5, 31:6,50:14, 69:30, 107:22, 3:8, 37:39). சங்கதக்காரனின் அனுபவங்களில் தன்னை இனங்காணும் யோனா, சங்கதக்காரனின் வார்ததைகளிலேயே தன்னுடைய ஜெபத்தை ஏறெடுத்துள்ளான். கிறிஸ்தவர்களாகிய நாமும் வேத வசனங்களை அறிந்திருக்கவேண்டும். அனுதினமும் வேதத்தை வாசித்து, தியானித்து, வேதவசனங்களை மனதில் பதித்துக்கொள்ள வேண்டும் (சங்.1:2, நீதி.3:3, 7:3, கொலோ.3:16). ஜெபத்தின் வெற்றிக்கு தேவவசனம் நம்மில் நிலைத்திருக்கவேண்டும் (யோவா.15:7). வேதவசனங்களை உபயோகித்து ஜெபத்தை ஏறெடுக்கும்போது, தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்கக்கூடியதாகவும் இருக்கும். 2:7-8. யோனாவின் ஜெபம் தேவனிடம் சென்றது. நமது ஜெபங்கள் எதுவும் வீணாய்பபோவதில்லை. அவற்றைத் தேவன் கவனித்துக் கேட்டு ஏற்றகாலத்தில் பதில் ; தருவார். ஆனால், மெய்யான தெய்வத்தை அறியாமல், பொய்யான தெய்வங்களை நம்புகிறவர்கள் தங்கள் வாழ்வுக்கு வரும் தேவனுடைய கிருபையைப் போக்கடிக்கிறவர்களாக இருக்கின்றனர். 2:9. யோனா பொருத்தனை செய்து ஜெபித்தான். எனினும் இது தேவனுடன் பேரம் பேசுகிற விதமாக மாறிவிடக்கூடாது. அதாவது, தேவனே நீர் இதைச் செய்யும் இதற்குப் பதிலாக நான் இதைச் செய்கிறேன் என்னும் எண்ணத்துடன் நாம் பொருத்தனை செய்யக்கூடாது. பொருத்தனையானது, தேவன் நமக்கு செய்யப்போகிற காரியத்திற்கு நன்றிசெலுத்துவதற்காகவே செய்யப்படவேண்டும். யோனா தான் செய்த பொருத்தனையை நிறைவேற்றுவதைப் பற்றிய சிந்தனையில் இருந்தானே தவிர, தேவன் செய்யவேண்டிய காரியத்தை மட்டும் சிந்தித்தவனாக இருக்கவில்லை. வேதாகமத்தில் பொருத்தனைகள் கட்டளைகளாகக் கொடுக்கப்படவில்லை. இது மனிதர் தாமாகவே விரும்பி செய்யும் காரியமாக இருந்தது (எண்.21:2, 1சாமு.1:11, சங்.22:25-26, யோனா.2:9, ஆதி.28:20-21). இதனால் இதற்கான வழிமுறைகள் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பொருத்தனைகள் செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் (உபா.23:21-22, பிர.5:4-6). 2:10. தேவன் யோனாவின் ஜெபத்தைக் கேட்டு, அவனை மீனின் வயிற்றிலிருந்து விடுவித்தார். அவர் நம்முடைய ஜெபத்தையும் கேட்டு நம்மையும் நிச்சயம் விடுவிப்பார்.

கட்ரையாசிரியர் : Dr. M.S. வசந்தகுமார்.  (தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம். )
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment