- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Saturday, 5 May 2012

சபையில் ஆண் - பெண் நடத்தை பற்றிய சத்தியம் (தீமோத்தேயு 2:8-15)

ஜெபத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பவுல் இப்போது சபையின் ஜெபக் கூடங்கள் யாருடைய தலைமையின் கீழ் நடைபெற வேண்டுமென அறிவுறுத்துகிறார்.

2:8 எல்லா மக்களுக்காகவும் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் (2:1) ஆண்களினாலேயே சபையில் ஏறெடுக்கப்பட வேண்டும். இத்தகைய ஜெபங்கள் பகிரங்க வழிபாடுகள் நடைபெறும் “எல்லா இடங்களிலும்“ ஏறெடுக்கப்பட வேண்டியவை. தேவனுடைய பார்வையில் ஆணும் பெண்ணும் சமம் என்றாலும் ஜெபமானது ஆண்களினாலேயே நடத்தப்பட வேண்டும். “சில சமயங்களில் கள்ளப் போதகங்கள் பெண்களின் தலைமைத்துவத்தை வலியுறுத்தியிருக்கலாம்.

பகிரங்க வழி்பாடுகளில் ஆண்கள் கோபமும் தர்க்கமுமி்ல்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி ஜெபிக்க வேண்டும்.

1. கைகளை உயர்த்தி ஜெபிப்பது யூத ஜெபமுறையாயிருந்தது. (1 இராஜா 8:22; 2 நாளா. 6:13; எஸ்றா 9:5; சங். 28:2இ 14:12; புலம். 2:10) கைகள் பரிசுத்தமாயிருக்க வேண்டும். அவை “அர்ப்பணிக்க்கப்பட்டதாயும் அசுத்தமற்றதாயும் இருக்க வேண்டும்.' இது உள்ளான பரிசுத்தத்தின் வெளிப்பிரகாரமான அடையாளமாகும். (D.L)  அசுத்தமான கைகளுடன்(மன்னிப்பு பெற்று சுத்தமாகாத இதயத்துடன் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் தேவனைப் பிரியப்படுத்தாதவை(சங். 24:3-4; மத். 5:23-24 ; ஏசா 1:15)) கைகளை உயர்த்தி, உள்ளங்கை மேல் பக்கமாயிருக்கும் வண்ணம் ஜெபிப்பது தேவனை முற்றிலுமாய் நம்பி, தாழ்மையுடன் எதிர்ப்பார்த்திருப்பதை விளக்கும் விபரணமாகும். (W.H)

2. கோபமற்றவர்களாயிருக்க வேண்டும். “மனித மனதில் உள்ள கசப்பு, ஜெபம் தேவண்டை சேர்வதைதத் தடுக்கும் தடையாகவுள்ளது. (W.B). 'உடைந்த மானிட உறவுகளும் ஜெபத்திற்கு தடையாகவுள்ளன. (D.L)

3. தர்க்கிப்பில்லாதவர்களாயிருக்க வேண்டும். கிரேக்க பதம் “தர்க்கம்“ என்றும் “சந்தேகம்“ என்றும் பொருள்படும். தர்க்கம் என்று எடுத்தால் கோபத்தை அதாவது முன் சொன்னதை திருப்பிச் சொல்வதாய் அமையும். சகப்பு், சண்டைகளும், வாக்குவாதங்களும், ஜெபத்திற்கும் தடையாக அமையும். “சந்தேகம்“ என்பது சிறந்த மொழிபெயர்ப்பு (W.B) ஜெபம் பதிலளிக்கப்படுவதற்கு முன்பு தேவன் பதிலளிப்பார் எனும் நம்பிக்கை நமக்கிருக்க வேண்டும். “தேவன் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறவர் என்ற நம்பிக்கையோடேயே நாம் ஜெபங்களைத் தேவனுடைய பிரசன்னத்திற்கு கொண்டு வரவேண்டும். (W.B) (யாக். 1:6-7)

“சரியான செயல்முறைகள் மட்டுமல்ல. சரியான மனநிலையும் ஜெபத்தி்ற்கு அவசியம். (D.G) மற்ற மக்களைப்பற்றிய எரிச்சலற்ற தன்மையும் தேவன் மீதான முழுமையான நம்பிக்கையும் ஜெபத்திற்கு அவசியம் தேவை. (G.W)

2:8-9 சபைக்கு வரும் பெண்ணின் நடத்தை எத்தகைய இருக்க வேண்டும் என்றும் பவுல் கூறுகிறார். “அவர்கள் வெளிப்பற அலங்காரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உட்பற அலங்காரத்தைப் பற்றி கரிசனையுடையவர்களாய் இருக்கும்படி கூறுகிறார். (D.L) எளிமையாகவும் அடக்கமாகவும், பண்பாகவும், பெண்களின் அலங்காரம் இருக்க வேண்டும். 9ஆம் வசனத்தில் கூறப்பட்டுள்ளவைகள் பாவமான செயல் முறைகள் அல்ல. மாறாக, அவை பெறுமதியின் அடையாளங்களாக கருதப்படுகையில் ஏற்றதாக்கி விடுகின்றன. “எபேசு பட்டண சபையில் இவைகள் ஆலய விபச்சாரிகளுடன் சம்பந்தப்பட்டவைகளாக இருக்கலாம். உலக நாகரீகம் தங்களுடைய நடை உடைகளில் செல்வாக்குச் செலுத்துவதைக் குறித்து கிறிஸ்தவ பெண்கள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். (D.G) “பெண்களின் உடை அவர்களுடைய மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதை பவுல் கண்டிருந்தார். வெளி்ப்படையான அலங்காரம் ஜெப சிந்தையுடனும் பக்தி வினையத்துடனும் இருப்பதேர்டு ஒததுப்போகாது. (D.G)

ஜெபக்கூட்டங்களுக்கு ஆண்கள் எவ்வாறு தங்கள் தயார்படுத்திக் கொண்டு வரவேண்டுமோ (வச. 8) அதேபோல பெண்களும் தங்கள சரியான நிலையிலேயே ஆயத்தப்படுத்திக் கொண்டு வரவேண்டும். “அவர்களும் தங்களுடைய பரிசுத்தத்திற்கு பக்திக்கும், ஏற்ற அடையாளங்களைக் காட்டுபவர்களாயிருக்க வேண்டும். (W.H) நாகரீக ஆடைகளை அணிவது பாவமல்ல. அலங்காரம் பண்ணுவது பாவமல்ல. ஆனால் அது பெண்மையின் அடக்கத்தையும், பண்பையும் உடைய ஆடையாக அலங்காரமாக இருக்க வேண்டும். “மற்றவருடைய அவதானத்தைத் தங்கள் பக்கம் திருப்பும் வண்ணம் அவர்களுடைய ஆடை அலங்காரங்கள் இருக்க கூடாது. (W.H) அவர்கள் நவீன ஆடைகளை அணியக்கூடாது என்பதில்லை. எவை ஒழுக்கநெறி பிறழ்வதாக, மதிபற்றதாக இருக்கின்றதோ, அவைகளையே அணியக்கூடாது. “ஆடையானது உள்ளான அழகை வெளிபப்படுத்துவதாய் இருக்க வேண்டும். பார்ப்பவர்கள் இவள் ஒரு கிறிஸ்தவ பெண் என்பதை அறிந்து கொள்ளக் கூடிய வண்ணம் இருக்க வேண்டும். (W.H) அலங்காரத்திற்காக அநாவசியமான முறையில் அதிகளவு பணத்தை செலவழிப்பது பிழை என்பதையும் பவுல் இவ்வசனத்தில் சுட்டிக் காட்டுகின்றார்..

உண்மையான அலங்காரம் வெளி்புற அலங்காரமல்ல. நாணம், தெளிந்தபுத்தி, நற்கிரியை, என்பவையே ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு உண்மையான அலங்காரம். (1 பேதுரு 3:3-4) அவளது ஆடை கிறிஸ்தவ குணாதிசயத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். (K.W) உலகம் வெளிப்புற அலெங்காரத்திற்கு அதிக பெறுமதியைக் கொடுக்கையில் கிறிஸ்தவ பெண்கள் உண்மையான பெறுமதி எது என்று கண்டு கொள்ள வேண்டும். (1 சாமு. ள16:7 ஒப்பிடுக.)

2:11-12 பெண்கள் சபையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் பவுல் கூறுகிறார். (1 கொரி.. 14:34-35) “கிறிஸ்துவில் அவர்களுக்கு கிடைத்த விடுதலை, ஆண்களுக்கு மேலாக இருக்கக்கூடிய நிலையை அவர்களுக்கு கொடுத்து விடவில்லை. (D.G) “அமைதல்“ என்பது ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பது என்று அர்த்தமல்ல. அப்படியாயின் பவுல் வேறொரு பதத்தையே உபயோகித்திருக்க வேண்டும். அவர்கள் சபை வழிபாடுகளை குழப்பும் வண்ணம், அல்லது இடையூறு செய்யும் வண்ணம் கதைக்கக்கூடாது. அதாவது அவர்கள் இடையில் குறுக்கிட்டு பேசக்கூடாது.

2:13 இல் ஸ்திரீகள் அமைதியாயிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதற்கான காரணத்தை விளக்குகிறார். இது தேவனுடைய சிருஷ்டிப்பு செயலை அடிப்படையாகக் கொண்டது. தேவன் முதலில் ஆதாமைப் படைத்து அதன் பிறகே ஏவாளைப் படைத்தார். அத்தோடு பெண்ணை ஆணுக்காகவும் அதாவது அவனுக்கு உதவியாகவும் (ஆதி 2:18-25) அவனுடைய மகிமையாகவுமே சிருஷ்டித்தார். (1 கொரி. 11:7-9) எனினும் ஒருவர் இல்லாமல் பூர்த்தியில்லை. (1 கொரி. 11:1) “தேவன் தம்முடைய ஞானத்தின்படி, மானிட வர்க்கத்தை ஆண்-பெண்ணாக சிருஷ்டித்து, அதில் ஆணை, வழிகாட்டியாகவும, பெண்ணை அவன் காட்டும் வழயில் செல்பவளாகவுமே சிருஷ்டித்துள்ளார்“. (W.H) எனவே, சபையில், ஆண் மக்களை வழிநடத்த வேண்டும் வழிபாட்டில் சிருஷ்டிப்பின் செயல்முறைக்கு முரணான விதத்தில், பெண் தன்  தன்மைக்கு எதிராக, ஆண் மீது அதிகாரம் செலுத்தி, அவனுக்கு உபதேசிக்க முயற்சிக்க கூடாது. “பெண்களின் இத்தகு அமைதலான தன்மை தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றதாயிருப்பதனால் (1 பேதுரு 3:4) மானிட வர்க்கத்திற்கு தேவன் ஏற்படுத்திய அமைப்பை புரிந்து, அதை ஏற்றுக் கொண்டு செயற்படல் வேண்டும். (D.L) ஆதாம் முதலில் சிருஷ்டிக்கப்பட்டமை ஆணுக்கு தலைமைத்துவம் கொடுக்கப்படுவதற்கு காரணமாயமைந்துள்ளது. ஏவாள் அவனுக்கு துணையாக சிருஷ்டிக்கப்பட்டமையினால், அவள் அவனைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

2:14 பெண் தன் நிலையை மீற், ஆணை வழிநடத்திச் செல்லும்போது ஏற்படும் விளைவும், பெண்கள் சபையில் அமைதலாக இருந்து கற்றுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. அவர்கள் தலைமைத்துவத்தை ஏற்று ஆண்களுக்கு உபதேசிக்க முயற்சித்தால், ஆண்களையும் தவறான வழியில் இட்டு செல்வார்கள் என்பதை பவுல் இந்த வசனத்தின் மூலம் சுட்டிக் காட்டுகின்றார். பாவம் செய்தபோது ஏவாள் பின்பற்றும் செயலை விட்டுவிட்டு வழிநடத்தும் செயலை ஏற்றாள். “ஆதாம் அவளைப் பின்பற்றினான். அவள் பாவ வழியில் அவனை வழிநடத்தினாள்.(W.H). (அநேக கள்ளப் போதகக் குழுக்களில் பெண்ளின் தலைமைத்தும் இருப்பது இவ்விடத்தில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது) “பெண் பெண்ணாகவே இருக்கட்டும். அவளுடைய பணிகளையே அவள் செய்யட்டும். ஆணுடைய பணிகளை அவள் செய்ய முயற்சிக்க வேண்டாம். அது அவளுக்கு தகுதியாயிராது. மீன் நீரிலேயே வாழ வேண்டும். அது நிலத்திற்கு வர முயற்சிக்க கூடாது. அதுபோல் பெண்களும் தேவன் தம்மை சிருஷ்டித்த நிலையிலேயே இருக்க வேண்டும். அவள் தன்னுடைய தனமைக்கு முரணான காரியங்களை செய்ய முயற்சிக்க கூடாது. (W.H)

ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஏவாளே வஞ்சிக்கப்பட்டாள். ஆனால் ஆதாம் ஏவாளால் வசியப்படுத்தப்பட்டான். எனினும் பாவத்திற்கு ஆதாம் ஏவாளால் வசியப்படுத்தப்பட்டான். எனினும் பாவத்திற்கு ஆதாம் பொறுப்பற்றவன் என கூற முடியாது. (ஆதி. 3:7) (ரோம. 5:12) ஆதாம் ஏவாளைப் பின்பற்றினான். அதனால் அவனும் பாவத்தில் விழுந்தான்.

2:15 பெண் சபையில் போதிக்கும் பணியைச் செய்யாமல், வீட்டில் தன் பணிகளைச் செய்ய வேண்டும் என பவுல் கூறுகின்றார். அவள் தெளிந்த புத்தியுள்ளவளாகவும், விசுவாசமுள்ளவளாகவும், அன்புள்ளவளாகவும், பரிசுத்தமுள்ளவளாகவும், இருக்க வேண்டும். “பிள்ளைப் பேற்றினிலே இரட்சிக்கப்படுவாள்“ என்பது குடும்பத்தில் தன் பங்களிப்பை செய்வதன் மூலமாக, தேவன் தன்னை எதற்காக சிருஷ்டித்தாரோ, அந்நிலையில், இருப்பதனால் வாழ்வின் மெய்யான அர்த்தத்தைக் கண்டடைவாள் என்பதாகும் (W.H). இவ்வசனத்தில் இரட்சிப்பு நம ஆத்தும இரட்சிப்பல்ல. ஏனெனில் சபையில் இருக்கும் பெண் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டவள். அத்தோடு இரட்சிப்புக்கு, அவள் இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் நிலைத்திருப்பது அவசியமானதொன்றல்ல. குடும்பத்தில் ஒரு தாயாக  இருந்து தன் பணியை செய்யவதற்காகவே தேவன் பெண்ணைப் படைத்துள்ளார். இதினாலே அவள் உண்மையான நிறைவை, இரட்சிப்பைக் கண்டமைவாள். அவள் சபையிலுள்ளவர்களுக்கு உபதேசிப்பதன் மூலமாக அல்ல, தன் பிள்ளைகளுக்கு தேவ வார்த்தையை உபதேசிப்பதன் மூலமாக இந்த மனநிறைவை பெற வேண்டும் என்பதே பவுலின் விளக்கமாகும். (தீத்து 2:3-4 ; 2 தீமோ 1:5 ; 3:15 ; 1 தீமோ. 5:14)

References
DG - Donald Guthrie, The Pastoral Epistle: Tyndale New Testament Commentaries, Leicester :Inter - Varsity Press, 1988

DL - A. Duane Litfin, 1 & 2 Timothy: The Bible Knowledge Commentary, Wheaton: Victor Books, 1983

GF- Gordon D. Fee, 1 and 2 Timothy, Titus: New International Biblical Commentary, Wheaton: Peabody: Hendrickson Publisher, 1993

GK : George W. Knight III  The Pastoral Epistle: The New International Greek Testament Commentary. Carlisle: The Paternoster Press, 1992

GW – Geoffrey B Wilson,  The Pastoral Epistle: A Digest of Reformed Comment Edinburgh: The Benner of Truth Trust, 1982

JS – John R.W. Stott, The Message of 2 Timothy, Leicester: Inter-Varsity Press, 1973

PT – Philip H. Towner, 1-2 Timothy & Titus: The IVP New Testament Commentary, Downers Grove: Inter-Varsity Press, 1994

RE-Ralph Earle, 1,2 Timothy: The Expositor’s Bible Commentary:, Grad Rapids: Zondervan Publishing House, 1978

WB-William Barclay, The Letters to Timothy, Titus and Philemon: The Daily Study Bible, Edinburgh: Saint Andrew Press, 1990

WH- William Hendriksen, 1&2 Timothy &Titus, Edinburgh: The Banner of Truth Trust, 1976

WW- Warren W. Warren W. Wiersbe, Be Faithful. Wheaton: Victor Books, 1986 


(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் அவர்கள் எழுதிய தீமோத்தியு நிருபத்திற்கான விளக்கம் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி)
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

2 comments:

  1. கட்டுரையில் இடம்பெற்ற தவறான விடயம் எது? ஏன் என தெரிவித்தால் நலம் சகோதரி. இதே கட்டுரை தமிழ் கிறிஸ்தவ தளத்திலும் இடம்பெற்றுள்ளது. அங்கு தெரிவித்தால் பலரும் கருத்து சொல்ல வாய்ப்பாயிருக்கும்.

    ReplyDelete