- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday, 27 January 2012

திருமணமானவர்களுக்கான சில வழிகாட்டல் குறிப்புகள்- (2)

 இதன் முதல் பகுதியை வாசிக்க இங்கு அழுத்தவும்



12. வேதாகமத்தின்படி தேவன் பாலுறவை நான்கு காரணங்களுக்காகப் படைத்திருக்கின்றார். முதலாவது, உலகத்திற்கு இதனூடாகவே குழந்தைகள் வருகின்றன. (ஆதி. 1:28, 9:1) இவ்விடயம் ஆறாம் நாள் படைக்கப்பட்ட காரியங்களில் மிகவும் நன்றாயிருந்தவற்றுள் அடங்குகிறது. (ஆதி. 1:31) இரண்டாவதாக இருவராக இருந்தவர்கள் திருமணத்தினூடாக ஒன்றாகும்போது ஆழமான, நெருக்கமான உறவு இருவருக்கிடையில் ஏற்பட்ட பாலுறவு உதவி செய்கின்றது. (ஆதி. 2:24, 1 கொரி 6:15-16) மூன்றாவதாக, தம்பதிகள் ஒவ்வொருவருடைய சரீரத்திலிருந்தும் திருப்பதியைப் பெற்றுக் கொள்ளும்போது இன்பத்தைத் தருகின்ற காரணியாக பாலுறவு அமைகின்றது. (நீதி 5:18, உன்னதப்பாட்டு) நான்காவதாக, அது தேவனுடனான எமது உறவை சித்திரிக்கப் பயன்படுகின்றது. (உதாரணம் ஓசியா) ம்பதிகள் பாலுறவை இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, தேவன் அதைப் படைத்த நோக்கத்தின் முழுமையை அவர்கள் அனுபவிக்கத்தக்க சுயாதீனத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

13. பவுல் படிப்பிக்கி்ன்ற விதமாக அடிக்கடி பாலுறவில் ஈடுபட நிச்சியத்துக் கொள்ளுங்கள். தம்பதிகள் அடிக்கடி பாலுறவில் ஈடுபடாவிட்டால் சாத்தான் அந்த நிலைமையைப் பயன்படுத்தி பாவம் செய்யத் தூண்டுவான் என்று பவுல் குறிப்பிடுகின்றார். (1 கொரி. 7:5) தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலங்கள் பாலுறவில் ஈடுபடமுடியவில்லையெனில் சாத்தானைக் கடிந்து கொண்டு, திருமணத்திற்கப்பால் பாலுறவில் ஈடுபட உங்களுக்கு உரித்துண்டு என்ற எண்ணத்திற்கு ஒருபோதும் இடமளிக்காதிருங்கள்.

14. தங்கள் மனைவிமார் தமக்குத் தேவையான நேரத்தில் பாலுறவில் ஈடுபட மறுப்பது ஆண்களின் சுயமதிப்பை உடைப்பதாய் இருக்கும். கணவனது பாலியல் ரீதியான நடவடிக்கைகளைத் தள்ளிவிடுதல் அவர்களது சுயமதிப்பை உடைப்பதாகவும், சாத்தான் தன் சய இஷ்டத்திற்குப் பயன்படுத்த உதவலாம் என்பதையும் மனைவிமார் அறிந்திருப்பது முக்கியமானது. அதுபோலவே இணக்கம் தெரிவிக்காத ஒரு மனைவிமீது கணவன் பலாத்காரம் செய்யவும் கூடாது. தேவனுடைய உதவியுடன் தனது சுயமதிப்பிற்கு ஏற்பட்ட தாக்த்தினை தாங்கிக் கொண்டு, மனைவி இணக்கம் தெரிவிக்காத காரணத்தை விளங்கிக் கொள்ள முயலவேண்டும். மனைவி பாலுறவில் ஈடுபட விரும்பும்போது கணவன் விரும்பாமல் இருப்பாராயினும இந்தக் காரியங்கள் பொருந்தும்.

15. நீங்கள் ஆலோசனை சொல்பவர்களுக்கு, உங்கள் வாழ்க்கையில் முக்கிய நபர் உங்கள் துணைதான் என்பதனை வெளி்ப்படுத்துங்கள். அவர்களுக்கு சௌகரியமான குடும்ப வாழ்க்கைக்குரிய மாதிரிகள் தேவையாயுள்ளது. நீங்கள் உங்கள் துணை உங்களது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபரல்ல என்ற செய்தியை அவர்களுக்கு கொடுத்திருப்பீர்கள் என்றால், நீங்கள் அவர்களுக்குப் பிழையான ஒரு மாதிரியைக் காண்பிப்பதுடன், கிறிஸ்தவதைப் பிழையான விதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்று விளங்கும்.

16. குடும்ப வாழ்க்கையைக் குறித்து நிலவும் பிழையான அபிப்பிராயங்கள் காரணமாக உங்கள் துணைக்கு நீங்கள் அதிக நேரத்தைக் கொடுப்பது கிறிஸ்துவிடம் உங்களுக்கு அர்ப்பணிப்புக் கிடையாது என்பதனை வெளிப்படுத்துவதாக சிலர் கருதலாம். மற்றப் பணிகளிலும் நீங்கள் மிகவும் கருத்தாக பணியாற்றுவதை உங்கள் சக ஊழியர்கள் கண்டார்களெனில், உங்கள் துணைக்கு அதிக நேரம் செலவிடுவதைக் குறித்து அவர்கள் பெரிதுப்படுத்த மாட்டார்கள் என உறுதியாகச் சொல்வேன்.

17. கிறிஸ்துவுக்காக இளைஞர்கள் இயக்கத்திலுள்ள வாலிபர்கள் கிறிஸ்தவ தத்துவங்களை நடைமுறைப்படுத்தாத, கிறிஸ்தவரல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தச் சத்தியங்கள் படிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிடில் அவர்கள் திருமணமான பின்னர் தமது பெற்றோர் நடந்து கொண்ட விதமாகவே நடந்துகொள்வார்கள். உதாரணமாக, தன்னுடைய தாயை தகப்பன் அடிப்பதைக் கண்ட ஒருவன், கோபமடையும்போது மனைவியைக் அடிக்ககூடும். எனினும் இது கிறிஸ்தவர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. வேதாகமத்தின் படிப்பினைகளின்படியான குடும்பங்களைக் குறித்துக் கற்றுக்கொடுத்த பின்னர், நீங்கள் ஊழியத்திலும் குடும்பத்திலும் கடினமாக உழைப்பதைக் காணக்கின்ற அவர்கள் நீங்கள் செய்வது சரியென்பதை இறுதியில் ஏற்றுக்கொள்வார்கள. தலைவர்கள் கடினமாக உழைக்காமல், வேலைகளை ஒழுங்காகச் செய்யாமல் இருக்கும்போது மற்றவர்களால் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

18. குடும்பத்திற்கும் தேவனுடைய ஊழியத்திற்கும், எமக்குக் கிடைக்கும் மற்றைய பொறுப்புகளுக்கும் ஒப்புடையவர்களாய் இருப்பது எளிதான காரியமல்ல. எம்மில் அநேகருடைய சிலுவை ஒரு சமிநிலையான வாழ்க்கையாகும். உங்கள் குடும்பத்தைதக் கவனித்துக் கொண்டு உங்கள் வேலையில் அல்லது படிப்பில் ஈடுபட்டுக்கொண்டு, தேவனுடைய ஊழியத்தையும் செய்வது மிகவும் களைப்பை உண்டுபண்ணுவதாய் இருக்கலாம். ஆனால், வேதாகமம் களைப்படைவதை ஒரு பாவம் என்று ஒருபோதும் சொல்வதில்லை.

19. மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கைக்கான முக்கிய திறவுகோல் ஓய்வுநாள் தத்துவமாகும். வேதாகமத்தின்படி கிழமையில் ஒரு நாள் ஓய்வு எடுக்காமல் விடுவது பாவமாகும். இது “நமக்கல்ல தேவனே பணியாற்றுவார்.“ என்ற சத்தியத்தை உணராத காரணத்தால் வெளிவரும் அமைதியின்மையின் அறிகுறியாகும். தேவனின் கட்டளைகளை நாம் பின்பற்றும்போது நமது நலமான வாழ்க்கைக்குத்  தேவையானவற்றை அவர் சந்திப்பார் என்பதை நாம் நம்புவதில்லை. இதுவே, ஒருநாளை ஓய்வுக்காக வைக்காமல் விடுதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆதாமினதும் ஏவாளினதும் பாவம் இதுவாகவே இருந்தது.

20. எமது ஓய்வுநாள் முழுமையாக தேவனுக்கும் குடும்பத்திற்கும் கொடுக்கப்படலாம். வீட்டில் நேரம் செலவிடாமல் அதிகமாய் வேலை செய்பவர்கள் வேலைத் தளத்தில் உறவுகளை எற்படுத்திக் கொள்வார்கள் என்பதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சராசரி வைத்தியர்களும், கிறிஸ்தவப் பணியாளர்களும் பிழையான உறவகளை அதிகமாக வைத்துக்கொள்வதற்கு இது ஒர் காரணமாகலாம். ஒவ்வொரு ஆரோக்கியமான திருமணமும், கணவனும் மனைவியும் ஒருவரிலொருவர் மகிழ்ந்து கொள்ளு்ம்படியான விசேஷித்த நேரங்களைக் கொண்டிருக்க வேண்டும். இதுவே உன்னதபாடு போன்ற புத்தகங்களில் தரப்பட்டுள்ள மாதிரியாகும். நான் ஒருமுறை எனது மனைவியுடன் ஒரு ஐஸ்கிறீம் நிலையத்திற்குச் சென்றபோது, நாங்கள் இருவரும் ஒரு பிழையான உறவை வைத்திருப்பவர்கள்போல் எம்மை மற்றவர்கள் பார்த்தது எனக்கு ஞாபகம் வருகிறது. வயதான திருமணமான இருவர் தமக்குள்ளே மகிழ்ந்திருக்க நேரம் ஒதுக்குவதைக் குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை எமது வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் எமது மனைவி அல்லது கணவனே தவிர, பிள்ளைகள் அல்ல என்பதை எமது பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அர்ப்பணித்துக்கொண்ட பெற்றோரைக் கொண்டிருப்பது, பிள்ளைகளுக்கு பெரிதான பாதுகாப்பையும் சிறந்ததொரு மாதிரியையும் கொடுக்கின்றதாய் அமையும்.

21. வெளிஉறவுகள் இன்பமான அனுவங்களாக தென்படலாம். வீட்டில் துணையுடன் இல்லாத அளவுக்கு மற்ற மனிதருட்ன சந்தோஷமாய் இருப்பதாக மனிதர் தங்களைத் தாமே நம்ப வைக்கலாம். வீட்டில் சந்தோஷம் இல்லையென்பது வெளியே உறவை வைத்துக்கொள்ள ஒரு காரணமாய் இருக்கமுடியாது. ஆனாலும் எமது குடும்ப வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமெனில், எமது வீடுகள் சந்தோஷத்தின் உறைவிடமாயிருக்குமெனில், கடினமான உழைப்பின் பின்னர் நாம் விரும்பி வரும் இடமாக வீடு இருப்பின், இந்த இன்பமான அனுபவங்களை ஒரு பிழையான உறவின்மூலம் இழந்துவிடும் ஆபத்தைச் சந்திக்க நாம் துணியமாட்டோம்

22. குடும்ப வாழ்க்கையின் முக்கியமான அம்சம் மகிழ்ச்சி, பழைய ஏற்பாட்டில் உள்ள யூதர்கள் குடும்பம் மகிழ்ச்சிக்கென தங்களுடைய வாழ்க்கையில் அநேக காரியங்களை இணைத்திருந்தார்கள். அதற்கு உதாரணம் சாப்பாட்டுவேளை (உபா. 14:26) வேதாகம் கோட்பாட்டில் வெற்றிகளையும் ஆசீர்வாதங்களையும் கொண்டாடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதிகப்படியான கொண்டாட்டங்களை உள்ளடக்கிய வேதாமக விழாக்கள் இந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன. எனவே, உங்கள் குடும்ப அங்கத்தவர்களுக்கு நல்ல காரியம் ஒன்று நடந்தால் எல்லோருமாகச் சேர்ந்து அதனைக் கொண்டாடுங்கள். எங்கள் குடும்பத்தில் ஒருவர் படிப்பில், வெற்றியீட்டினால் அல்லது வேறு துறையில் ஏதாவது வெற்றியீட்டினால், குடும்பமாக வெளியில் உணவருந்தவோ ஐஸ்கிரீம் சாப்பிடவோ நாம் போவதுண்டு். (வளமான சமுதாயங்களில் இருப்பதைப் போன்று இலங்கையில் இப்படியான வழக்கங்கள் சாதாரணமான வழக்கங்கள் அல்ல)

23. நமக்குத் திருமணமான பின்பு எமது வேடிககை விநோத காரியங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அநேக சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும். இதனால், நீங்கள் விரும்பும் ஒரு விநோதத்தை உங்கள் குடும்பத்தார் விரும்பாத காரணத்தால் அதை நீங்கள் விட்டுவிட நேரலாம். எனக்கு விளையாட்டு மிகவும் பிரியமானதொன்று. நான் வாலிப நாட்களில் விளையாடிய றக்பி பந்தாட்டமே எனக்குப் பிடித்தமான விளையாட்டு. ஆனால் எனது மனைவிக்கு இந்த விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாது. என்னுடைய பிள்ளைகளுக்கும் இந்த விளையாட்டில் அவ்வளவாய் விருப்பமில்லை. அவர்கள் எல்லோரும் கிரிக்கட்டையே விரும்புகிறார்கள். எனவே, நாம் குடும்பமாய் பாரக்கவேண்டிய விளையாட்டு கிரிக்கட்டேயன்றி றக்பி அல்ல என்று தீர்மானித்தேன்.

24. விநோதங்கள் நிறைந்த குடும்பம் வெளி உறவுகள் ஏற்படுவதைக் குறைப்பது மட்டுமல்ல. சுத்தமான விநோதமானது நமது பிள்ளைகளின் நண்பர்கள் ஈடுபடும் அசுத்தமான விநோதங்கள் விட சந்தோஷமானவை என்பதனை பிள்ளைகள் உணரச் செய்யும். இது பாவமான விநோதங்களில் ஈடுபட பிள்ளைகளுக்கு ஏற்படும் சோதனைகளின் பலத்தை வெகுவாக குறைத்து விடும்.


25. குடும்ப வாழ்க்கை தேவன் நமக்கு தந்துள்ள அழகான கொடையாகும். மிகவும் கவனமாக ஒருவரையொருவர் அன்புசெய்து, பாதுகாத்து, அநேக ஆண்டுகளாக நமது உறவை வளர்த்துக்கொண்ட ஒரு தம்பதியினரின் சந்தோஷத்தோடு ஒப்பீடு செய்ய உலகத்தில் மிகவும் சொற்பமான வேறு சந்தோஷங்களே உள்ளன. இப்படியான தம்பதியினருக்கு பாலுறவு மிகவும் மதிப்பான காரணமாயிருப்பதுடன் ஆண்டுகள் கழிந்து  போகையில் அதன் மூலம் வரும் இன்பம் இன்னும் ஆழமாகும். அநேக கிறிஸ்தவத் தம்பதிகள் தமது திருமணத்தைக் தற்காத்து வளர்க்காத காரணத்தால் இந்த சந்தோஷத்தை இழந்திருப்பது எவ்வளவு கவலைக்குரிய காரியமாகும். இந்த நிலைமையை மாற்றிக் கொள்வதற்கு இன்னும் காலம் செல்லவில்லை. நீங்கள் திருமணமானவரராகில் உங்களுடைய குடும்ப வாழ்க்கையினூடாக பெறப்படும் மகிழ்ச்சியை உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிதான குறிக்குள்ளாக ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் திருமணம் செய்ய உத்தேசித்திருந்தால். திருமணத்துக்குள்ளாகப் போகும்போது உங்கள் குடும்ப மகிழ்ச்சியைக் காப்பீர்கள் எனவும் அதை வளர்க்கத் தேவையான எல்லாவற்றையும் செய்வீர்கள் எனவும் உறுதியான தீர்மானத்தோடு போங்கள்.

26. நான் சொல்லுகிற காரியங்களின் முக்கியத்துவத்தை மீளவும் உறுதிப்படுத்தத தேவனுடைய உன்னதமான ஊழியக்காரர்கள் இருவரின் வார்த்தைகளை இங்கு குறிப்பிடுகிறேன். ஜோர்ஜ் முல்லர் சொன்னார். “நான் எனது அன்புக்குரிய மனைவியை, நாங்கள் வசித்த பிறிஸ்டல் நகரில் தற்சமயமாக சந்தித்த வேளைகளைக் குறித்து சந்தோஷப்படாமல் இருந்த சந்தர்ப்பங்களே இல்லை. “மார்ட்டின் லூதர் சொன்னார் “ஒரு நல்ல திருமணத்தை விட அன்பான, தோழமையான, கவர்ச்சிமிக்க உறவோ, கூட்டுறவோ உடனிருப்போ கிடையாது, நாம் துணையுடன் இப்படியான உறவையே தேடவேண்டும்.
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment