பிரசங்கி 1:7 இற்கான விளக்கம்
என்ன? எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது;
தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும். என்று
சொல்லப்பட்டுள்ளது. (ஜெரால்ட் ஜோர்ஜ், ஊட்டி, இந்தியா)
பிரசங்கி முதல் அதிகாரத்தில் 4 முதல் 1 வரையிலான வசனங்களில் மனிதன் வாழ்ந்திடும் உலகம் மாயையானது என்பதற்கு மூன்று காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் முதலாவது காரணம் 4 முதல் 7 வரையிலான வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனங்களில் உலகம் மாற்றமடையாமல் எப்போதும்போல, ஒரே விதமாக இயங்கிக் கொண்டிருப்பதனால் உலகம் மாயையானது என்பதை நிரூபிப்பதற்காக 4 உதாரண விடயங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் மூன்றாவது விடயமே 7ம் வசனத்தில் உள்ளது. பிரசங்கி இவ்வசனத்தில் நீரின் சுற்றுவட்டத்தை அறியத் தருகின்றார். இது விஞ்ஞான ரீதியாக இன்று கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது. பூமியிலுள்ள நீரே ஆவியாகி மேலே சென்று பின்னர் பூமியின் மீது மழையாக பொழிகிறது என்பதை நாம் அறிவோம். இதைத்தான் பிரசங்கி 1:7 இல், எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது. தாங்கள் உற்பத்தியான இடத்திற்கு நதிகள் மறுபடியும் திரும்பும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யோபு 36:27 இலும் இதைப் பற்றி நாம் வாசிக்கலாம். “அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.” என அவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நதிகள் கடலிலே தண்ணீரைக் கொட்டினாலும் கடல் ஒருநாளும் நிரம்பாது. கடல் நீர் ஆவியாகச் சென்று நதிகள் உற்பத்தியாகும் இடங்களில் மழையாக பொழிகிறது என்ப பிரசங்கி 1:7இன் விளக்கமாகும்.
தொடர்புடைய பதிவுகள் :

- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment