- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday, 22 December 2013

இயேசுவின் பிறப்பைக் குறித்துக் கேள்விபட்டு வந்த வானசாஸ்திரிகளைப் பற்றி விளக்குவீர்களா?



இவர்கள் பாலஸ்தீனாவுக்கு கிழக்குப் பகுதியிலிருந்த பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் என நம்பப்படுகின்றது. சாஸ்திரிகள் என்பதறகு மூலமொழியில் உள்ள பதம் ஆரம்பகாலத்தில் மேதியாவிலிருந்து ஆசாரியர்களைக் குறிக்கவே உபயோகிக்கப்பட்டது. கனவுகளுக்கு விளக்கமளிக்கும் ஆற்றல் மிக்க இத்தகைய சாஸ்திரிகள் பாபிலோனிலும் இருந்துள்ளதை தானியேல் 1:202:24:75:7 வசனங்களின் மூலமாக அறிந்திடலாம்.
 
புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ஜோதிடர், மந்திரவாதிகள், வான சாஸ்திரிகள் என்போரும் இப்பதத்தின் மூலமாக அழைக்கப்பட்டனர். இயேசுகிறிஸ்துவை பார்க்க வந்த சாஸ்திரிகள் கிழக்கிலே அவருடைய நட்சத்ரத்தைக் கண்டு வந்தமையினால், அவர்கள் வானசாஸ்திரிகளாகவே இருந்திருக்க வேண்டும். இவர்கள்இயேசுகிறிஸ்துவிற்கு மூன்று பரிசில்களைக் கொண்டு வந்தமையால் (மத். 2:11) சாஸ்திரிகள் மூவர் வந்திருக்க வேண்டும் என பாரம்பரியம் கூறுகின்றது. அத்தோடு சங்கீதம் 68:29,31 ; 72:10-1, ஏசா 49:7; 60:1-6 என்னும் வசனங்கள் ராஜாக்கள் வந்து மேசியாவை வழிபடுவாடுவார்கள் என அறியத் தருவதால் கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் ராஜாக்களாகவும் இருந்திருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது. இந்த சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தின் மூலமே யூதருக்கு ராஜா பிறந்திருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டனர். (மத். 2:2)
 
வேதாகமம் வானசாஸ்திரம் உட்பட சகல விதமான ஜோதிட சாஸ்திரங்களையும் வன்மையாக கண்டிப்பதனால் (ஏசா. 47:13-15, தானி. 1:20; 2:37; 5:7, எரே. 10:1-2) தேவன் வானசாஸ்திரத்தின் மூலம் இயேசுவின் பிறப்பினை அறிவித்திருக்க  மாட்டார். தான் தடைசெய்த சாஸ்திரத்தினூடாக தேவன் செயல்பட்டால் அவர் முரண்பாடுடையவராகி விடுவார். இயேசுவின் பிறப்பை முன்னிட்டு வானத்தில் ஒரு சிறப்பான நட்சத்திரத்தைத் தோன்றப் பண்ணியதுமட்டுமே தேவனுடைய செயலாகும். அந்நட்சத்திரத்தைக் கண்ட சாஸ்திரிகள் தமது ஆராய்ச்சியின் மூலம் யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டுள்ளனர். “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம்” (மத். 2:2) இதையே அறியத் தருகின்றது. தேவன் வானசாஸ்திரத்தின் மூலம் செயல்படவில்லையாயின் வானில் தாம் கண்ட நட்சரத்தித்தின் மூலம் யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறார் என்பதை சாஸ்திரிகள் எப்படி அறிந்துகொண்டனர் ன நாம் வினவலாம். அக்காலத்தில் பாரசீகப் பகுதிகளில் யூதர்களும் குடியிருந்தமையினால் அவர்களுடைய மார்க்க நூலின் மூலம் யூதருக்கு ராஜா பிறந்திருப்பதை சாஸ்திரிகள் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக எண்ணாகமம் 24:17இலுள்ள தீர்க்கதரிசனப் பகுதியின் மூலமே சாஸ்திரிகள் யூதருக்கு ராஜா பிறந்திருப்பதை அறிந்திருப்பர். அத்தீர்க்கதரிசனத்தில் ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. தாம் கண்ட நட்சத்திரத்தைப் பற்றி ஆராய்ந்த சாஸ்திரிகள், இத்தீர்க்த்தரிசனப் வார்த்தைகளை அடிப்படையாக்க் கொண்டே யூதரின் ராஜாவைத் தேடி எருசலேமுக்கு வந்திருக்க வேண்டும். 
 
தானியேல் 1:20
20. ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான். 
 
தானியேல் 2:2 
2. அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச்சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.
 
தானியேல் 4:7 
7. அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள். 
 
 தானியேல் 5:7 
7. ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான். 
 
 மத்தேயு. 2:11
 11. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
 
சங்கீதம் 68:29,31
29. எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.

31. பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும்.
 
 சங்கீதம் 72
10. தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.

11. சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.
 
 
மத்தேயு. 2:2
2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள். 
 
 
 ஏசா. 47:13-15
 13. உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.

14. இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல.

15. உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.
 
 எண்ணாகமம் 24:17 
17. அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
 

Tuesday, 17 December 2013

உள்ளான மாற்றத்தின் அவசியம்


இந்தியாவில் பணியாற்றிய ஒரு மிஷனரி இஸ்லாமிய மனிதனொருவனைத் தன் சமையற்காரனாக வைத்திருந்தார். ஒருநாள் அவன் மிஷனரியிடம் “நான் கிறிஸ்தவனாக விரும்புகிறேன். எனவே எனக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்.” என்றான். எனவே, மிஷனரியும் ஒருநாள் அவனது தலையில் சிறிது தண்ணீரை ஊற்றி, “இனிமேல் நீ அப்துல்லா அல்ல, இன்றிலிருந்து நீ தாவீது” என்றார். 

ஞானஸ்நானம் முடிவடைந்த பின்னர் மிஷனரி தன் சயைற்காரனிடம் ”நீ ஒரு காரணத்தை மறந்துவிடக்கூடாது. கிறிஸ்தவனான நீ வெள்ளிக்கிழமைகளில் ஆட்டிறைச்ச்சி சாப்பிடக்கூடாது. மீன் மட்டுமே சாப்பிட வேண்டும்.” என்று கூறினார்.

சில வாரங்களின் பின்னர் ஒருநாள், சமையற்காரின் உறவினர்கள் அவனைப் பார்க்க வந்தனர். அத்தினம் ஒரு வெள்ளிக்கிழமையாக இருந்தது. எனினும், தன் உறினர்களைச் சிறப்பான முறையில் உபசரிக்க விரும்பிய அம்மனிதன், மிஷனரியின் அறிவுறுத்தலையும் மீற ஆட்டிறைச்சிக் கறி சமைக்கத் தொடங்கினான்.

ஆட்டிறைச்சிக் கறி மணப்பதை அறிந்து கொண்ட மிஷனரி, சமையற்காரனைக் கூப்பிட்டு, “தாவீது வெள்ளிக்கிழமையில் ஆட்டிறைச்சி சமையக்கூடாது. மீன் மட்டுமே சமைக்கலாம் என்று சொல்லியிருக்கிறேன தானே” என்று கேட்டார். சமையற்காரனும், “நான் ஆட்டிறைச்சியல்ல மீன் தான் சமைக்கிறேன்” என்றான். 

மிஷனரியோ “தாவீது, உன்னால் என்னை ஏமாற்ற முடியாது. நீ ஆட்டிறைச்சிதான் சமைக்கிறாய்” என்றார். ஆனால் சமையற்காரனோ மறுபடியுமாக, “நான் ஆட்டிறைச்சி சமைக்கவில்லை மீன் கறியே சமைக்கிறேன்” என்றான். 

இருவருக்கும் இதுபற்றி வாக்குவாதம் உண்டாயிற்று. கடைசியாக சமையற்காரன் “நீங்கள் மட்டுமே ஞானி என நினைக்கவேண்டாம். சில வாரங்களுக்கு முன்னர் நீங்கள் என் தலையில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிவிட்டு, நீ இனி மேல் அப்துல்லா அல்ல தாவீது என்று கூறினீர்கள். அதே விதமாக, நானும் ஆட்டிறைச்சியின் மீது சிறிது தண்ணீரை ஊற்றிவிட்டு நீ இனிமேல் ஆட்டிறைச்சியல்ல, மீன்” என்று கூறினேன் எனத் தெரிவித்தான்.

வெளிப்படையான பெயர் மாற்றம் வெறும் சடங்காச்சார செயல் என்பன மனிதனில் உண்மையான மாற்றத்தினை ஏற்பாடுத்தாது. மனிதன் தன் பாங்களிலிருந்து மனந்திரும்பி, தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். உள்ளான மாற்றமே ஒருவனை உண்மையான கிறிஸ்தவனாக்கும என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. 


நன்றி - சில சம்பவங்களில் சில சத்தியங்கள். 




Monday, 9 December 2013

திருமறையை விளக்கும் முறை–அத். 10–தீர்க்கதரிசனம் - II(இறுதிப்பகுதி)


1. தீர்க்கதரிசனப் பகுதிகளை விளக்க சில விதிகள்

(அ) இறைவாக்கினர் தங்கள் தீரக்கதரிசன தூதுகளை அறிவித்த சூழ்நிலைகளை ஆராய்ந்தறிய வேண்டும்

(ஆ) பொதுவாக தீர்க்கதரிகள் பயன்படுத்துகின்ற உருவகங்ள் ஒப்பனைகள் ஆகிய இவைகளின் கருத்து விளக்கம் ஆகியவை என்னதென்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.

(இ) ஒரு தீர்க்கதரிசி கூறும் செய்தியை அதற்கு ஒத்த தீர்க்கதரிசன பகுதிகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
உதாரணம்
கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையாயுமாயிருக்கும். (ஏசா. 4:2)
ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து ஒரு கிளை (ஏசா. 11:1)
தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளை (எரே. 23:6; 33:15,16)
இதோ கிளை எனப்பட்ட என் தாசன் (சக. 3:8)
இதோ ஒரு புருஷன், அவருடைய நாம்ம் (சக. 6:12)

(ஈ) புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனப் பகுதிகள் நிறைவேறிய சூழ்நிலைகளைக் கவனிக்க வேண்டும்.

(உ) புதிய ஏற்பாட்டுப் பணியாளர்கள் (இயேசு கிறிஸ்து, பேதுரு, யாக்கோபு, பவுல்) பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசன பகுதிகளைப் பயன்படுத்திய முறைகளைக் கவனிக்க் வேண்டும். 

இக்கடைசி விதி மிகவும் முக்கியமானது. புதிய ஏற்பாட்டு அடியாளர்கள் (தேவாவியின் ஏவுதலால் பேசியவர்கள் என்பதை மறவாதீர்கள்) பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனப் பகுதிகளை மேற்கோளாகப் பயன்படுத்யபோது அந்தத் தீர்க்கதரிசனங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவச் திருச்சபையிலும் அந்தத் திருச்சபையின் வரலாற்றிலும் அனுபவத்திலும் நிறைவேறி வருகின்றதாகக் கூறினர் என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். 

உதாரணமாக
யோவேல் 2:28-29 பெந்தகோஸ்தே நாளில் நிறைவேறியதாகப் பேதுரு கூறுகின்றார். (அப். 2:16-17)
ஆமோஸ் 8:11,12 விழுந்துபோன தாவீதின் கூடாரம் எங்கும் நிறுவப்பட்டு வருகின்ற திருச்சபையின் மூலம் மறுபடியும்…. செவ்வாயாக நிறுத்தப்பட்டு வருகிறதாக யாக்கோபு கூறினார். (அப். 15:16,17)
யாத். 19:5,6) இறைமக்களாகிய “இஸ்ரவேலரைப் பற்றிக் கூறப்பட்டதெல்லாம் பேதுரு 2:9 இறைமக்களாகிய திருச்பைக்கு பொருத்தமானது என்று பேதுரு கூறப்பட்டுள்ளன. (ரோமர் 9:25)


2. தீர்க்கதரிசனப் பகுதிகளை விளக்கும் முறைகள்

(அ) ஆன்மீகப் பொருள் காணும்முறை (Spiritualizing Method)
(i) சொல்லுக்கு சொல் அப்படியே பொருள் படுத்துவது சரியான முறையன்று என்பர் சிலர். மேலே நாம் கண்ட இக்கருத்தை உறுதிப்படுத்துகின்ற சில எடுத்துக்காட்டுக்களை முன்பே பார்த்தோம் யாக்கோபு, பேதுரு, பவுல் முதலிய அருளுரைத் தொண்டர்கள் தீர்க்கதரிசனப் பகுதிகளைப் பயன்படுத்திய முறைகளும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றது. 

(ii) யூத இனத்தைப் பொறுத்தவரை நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்கள் இனி எதுவும் கிடையாதாம். அவர்களுடைய காலம் முடிந்துவிட்டதாம்.! எனவே இஸ்ரவேலரைக் குறித்த தீர்க்கதரிசனங்களுக்கு ஆன்மீக விளக்கம் அளிப்பதே சரி என்று சிலர் எண்ணுகின்றனர். 1947 ஆம் ஆண்டு முதல் புத்துயர் பெற்றுப் பகைவரின் நடுவில் செழித்து ஓங்கியிருப்பது இக்கருத்துக்கு எதிராக அமைந்துள்ளது. 

(iii) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள வளம் நிறைந்த ஆட்சியைப் பற்றிய தீர்க்கதரிசனப்ப பகுதிகள் இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு அரசாட்சியையும் அப்பொழுது திருச்சபை அனுபவிக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையுமே குறிக்கின்றன. என்று சிலர் கருதுகின்றனர். 


(ஆ) சொல்லுக்குச் சொல் பொருள்காணும் முறை (Literalist Method) 

(i) கூடுமானவரை எங்குமே சொல்லுக்குச் சொல் சரியாய் அல்லது எழுத்துப்படி விளக்கஞ் செய்வதே சரி என்பர் சிலர். 
தேவாலாயம் மீண்டும் எருசலேம் நகரத்தில் (எசேக்கியேலின் சிற்பத் திட்டப்படி 40-49 அதிகாரங்கள்) கட்டப்படுமாம். மீண்டும் அவ்வாலயத்தில் பலிகள் செலுத்தப்படுமாம். (எசே. 45-46 அதி) ஆனால் பலிகள் மீண்டும் செலுத்தப்படுவது எபிரேயர் நிருபத்தின் கருத்துரைக்கு முற்றிலும் மாறுப்பட்டது. எனவே இவ்வதிகங்களைச் சொல்லுக்குச் சொல் விளங்கஞ் செய்யக்கூடாது. 

(ii) திருச்சபை உயர எடுத்துக் கொள்ளப்பட்டபின் ஆண்டவர் மீண்டும் யூத இனத்தை மேலும் மேலும் ஆசீர்வதித்து இந்த இனத்தைக் கொண்டு முழு உலகையும் ஆயிரம் ஆண்டுகளாக அரசாள்வாராம்
ஆயிரம் ஆண்டு ஆண்டவர் அரசாட்சி இல்லை என்று சாதிக்கும் சிலர். உலகத்தின் முடிவு காலத்தில் ஏராளமான யூதர்கள் குணப்படுவார்கள் என்றும் (ரோமர் 11:26) நற்செய்தியின் பயனாக உலகெங்கும் ஒரு பெரிய அசைவு ஏற்படும் என்றும், திருச்சபை மிகவும் வளரும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மத். 24:12; 2 தீமோ. 3:1 ஆகிய வசனங்கள்  இந்தக் கருத்துகளுக்கு ஆதரவு அளக்கின்றனவா?

மேற்கொண்ட விளக்கங்களை நாம் முன்னரே கற்றுக் கொண்ட திருமுறை விளக்க விதிமுறைகளைக் கொண்டு ஆராய்ந்து முடிவுசெய்ய வேண்டும். 

ஒன்றுமட்டும் திண்ணம்: தந்தை தம்முடைய ஆதீனத்தில் வைத்திருக்கின்ற காலங்களையும் வேளைகளையும் அறிக்கிற உங்களுக்கு அடுத்தல்ல (அப். 1:7) ஆகவே கிறிஸ்து வரும் நாளையோ காலத்தையோ குறிப்பிட்டுத் தீர்க்கதரிசனம் உரைக்கின்ற எல்லாக் கள்ளப் போதகர்களிடமும் எச்சரிக்கையாயிரப்பார்களாக. 


3. தீர்க்கதரிசனத்தின் முடிவு கிறிஸ்துவே

கிறிஸ்து நியாயப்பிரமாணங்களை எல்லாம் தமக்குள் நிறைவேற்றி முடித்த்துபோலவே தீர்க்க தரிசனங்கள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்துவிட்டார். 
இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியே தீர்க்தரிசனத்தின் ஆவியாயிருக்கின்றது. (வெளி. 19:10) அதாவது தீர்க்கதரசனத்தின் மையப்பொருள்கிறிஸ்துவை முன்னறிவிப்பதாயாகும். “ மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.(லூக். 24:25-27) தீர்க்கதரிசிகள் … தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். (1பேதுரு 1:10,11) என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிளஷறவைகளும் அவைகளே (யோவான். 5:39, அப். 3:18,24; 10:43; ரோமர் 1:4; ரோமர் 3:2) 

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (மத். 5:17)

ஆமென்

(முற்றிற்று)

Tuesday, 3 December 2013

திருமறையை விளக்கும் முறை–அத். 9–தீர்க்கதரிசனம் - I

 

1. தீர்க்கதரிசனத்தின் தன்மை

தீர்க்கதரிசனம் என்ற சொல் தீர்க்கதரிசியின் முழு ஊழியத்தையும் குறிக்கின்ற ஒரு சொல்லன்று. தீர்க்கதரிசனமாய் தரிசிக்கின்றவன் அல்லது வருவதை உணரும் ஞானி ஒரு தீர்க்கதரியாவான். ஆயினும் இச்சொல் எபிரேய மூலமொழியில் “நபி” என்பதற்கோ கிரேக்க மொழி மூலமொழியில் Prophet என்பதற்கோ சனமான சொல்லுமன்று. தேவனிடமிருந்து செய்திகளைக் கேட்டு அறிந்து மக்களுக்குத் தூது கொடுப்பவன் என்பதுதான் மூலமொழியின் சரியான பொருளாகும். எனவே, தீர்க்கதரிசியின் ஊழியம் இருவகைப்படும்.

 

(அ) இறைவாக்குறைத்தல் (forth-telling)

தீர்க்கதரிசிகள் இறைவனின் தூதுவராக அவரிடமிருந்து செய்திகளை மக்களுக்கு அறிவிப்பவர்கள். ஆரோன் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்டான். (யாத். 7:1) எப்படி? அவன் மோசேயின் சார்பில் மக்களுக்கு தேவதூதை அறிவித்தவன். மோசே திக்கித் திக்கி பேசுகிறவாயிருந்தபடியால் கடவுள் அவன் சகோதரனாகிய ஆரோனை அவனுக்குத் தீர்க்கதரியாகக் கொடுத்தார். ஆரோன் தன் சொந்த வார்த்தைகளைக் கூறாமல் மோசேயின் மூலம் தனக்குக் கற்பிக்கப்பட்ட தேவ தூதுகளை மட்டும் உரைக்க வேண்டும். உண்மையான இறைவாக்கினர் இறைவன் கூறுவதைக் கேட்டு அப்படியே மக்களுக்கு அறிவிப்பார்கள்.

சாமுவேலின் காலம் முதற்கொண்டு இறைவாக்கினர் பலர் எழும்பலாயினர். இளம் வயதிலேயே சாமுவேலை இப்பணிக்கு அழைத்த இறைவன் அவரை ஏலிக்கும் தனது வாக்கை அறிவிக்கப் பயன்படுத்தினார். (1 சாமு. 3:11-14) பின்பு சாமுவேல் இறைவாக்கினர் குழு ஒன்றை ஏற்படுத்தி அதற்குத் தலைவராக இருந்தார். (1 சாமு. 19:20) தீர்க்கதரிசியின் புத்திரர்கள் என்றழைக்கப்பட்ட இவர்கள் மறைநூற் பள்ளி போன்ற ஒரு கூட்டமைப்பை நிறுவி, தங்கள் ஆசிரியருடன் ஒரே குடும்பமாக வாழ்ந்தனர் என்று தெரிகின்றது. (2 இராஜா 4:1,38; 6:12)

இறைபயமுடைய அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் இறைவாக்கினர் பெரிதும் மதிக்கப்பட்டனர். தேவ சித்தம் இன்னதென்று அறிந்து தங்களுக்கு அறிவிக்கும்படி அரசர்கள் இறைவாக்கினர்களிடம் கேட்டு வந்தார்கள். இதற்கு மாறாக இறைபயமற்ற தீய அரசகர்கள், மெய்யான இறைவாக்கினரைச் சற்றும் பொருட்டபடுத்தாமல் பொய்த் தீர்க்கதரிசிகளை அழைத்து அவர்களுடைய பொய் வாக்குகளால் தங்களைத் தேற்றிக் கொண்டிருந்தனர். (1 இரா. 22:8; எரே. 14:14; 23:21) இறைவாக்கினருள் சிலர் இறைவனிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த செய்திகளை எழுதி வைத்தனர். அவை பழைய ஏற்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

சிலவேளைகளில் தேவன் தமது செய்தியை இறைவாக்கினருக்கு நேராக வெளிப்ப்டுதுவார் வேறு சில வேளைகளில் கனவுகளின் மூலமாயும் காட்சிகளின் மூலமாயும் வெளிப்படுத்துவார். உண்மையான இறைவாக்கினர் தெய்வீக அதிகாரம் பெற்றவர்களாய் “கர்த்தர் சொல்கிறார்” எனத் தூதுரைப்பார்கள். ஆசாரியர் அரசர் மட்டுமல்ல. இறைவாக்கினரும் தைலத்தால் அபிஷேகம் பண்ணப்படுவார்கள். (1 இரா. 19:16) கடவுள் பணிக்கெனப் பிரித்தெடுக்கப்பட்டதற்கு இந்த அபிஷேகம் அடையாளமாகும்.

(ஆ) வரும் பொருளுரைத்தல்

இறைவாக்கினருடைய பணி இரு வகைப்படும். தேவ தூதுரைப்பது அல்லது இறைவாக்கைக் கூறுவது ஒன்றாகும். இந்த இரண்டாவது பணிக்கு மட்டுமே தீரக்கதரிசி என்ற சொல் பொருந்தும் இறைவாக்கினர் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைக் கடிந்துரைத்து, மக்கள் மனந்திரும்பி கடவுளுக்குக் கீழ்ப்படிய அறைகூவி அழைப்பர். மிகத் துணிவோடு இப்பணிகளை ஆற்றியதன் காரணமாகச் சில வேளைகளில் இன்னல்களையும் அவர்கள் அனுபவித்தனர். (எரே. 38:4-6) வருவன உரைக்கும்போது இறைமக்கள் நாடு கடத்தப்படுதல், சிறையிருப்புக்குத் தப்பித் தாயகம் திரும்புதல், யூதமக்கள் உலகெங்கும் சிதறியிருத்தல், மீண்டும் தாயகம் திரும்புதல், கிறிஸ்துவின் பாடுகள், மரணம், முடிவில்லா அரசு ஆகிய இவைகளைப்பற்றி முக்கியமாகத் தூதுரைத்தார்கள்.

 

2. தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்

ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் ஒரே ஒரு பொருள்தான் உண்டு என்றோ அல்லது அது ஒரே ஒருமுறை தான் நிறைவேறும் என்றோ நாம் எண்ண வேண்டியதில்லை. பல தீர்க்கதரிசனப் பகுதிகளில் இரண்டு உட்கருத்துக்களும் உண்டு. அவையாவன

(1) உடனடி நிகழ்ச்சி (Immediate Referece)

(2) வெகுகாலத்திற்குப் பின் நடக்கும் நிகழ்ச்சி (Ultimate Reference)

ஆகியவையாகும்.

எனவே இத்தகைய தீர்க்கதரிசனங்கள் பகுதி பகுதியாகவோ (Partial Fulfilmet) முழுவதுமாகவோ (Complete fulfillment) ஆகிய இரு நிலைகளில் நிறைவேறும்.

எடுத்துக்காட்டுகள்

(அ) “உன் சந்ததி இவ்வண்ணமாயிருக்கும்” (ஆதி. 15:5)

(i) அண்மையில் நிகழ்ந்த பகுதி நிறைவேறுதல் யாதெனில் யூத ஜாதி பெருகினது (யாத். 32:13; உபா. 1:10,1)

(ii) இனிமேல் நிகழவிருக்கும் நிறைவான நிறைவேறுதல் விசுவாசிகளின் கூட்டம்.

நம்மெல்லோருக்கும் தகப்பனானான். (ரொமர். 4:16-17)

“தேவனுடைய இஸ்ரவேலருக்கும்” (உண்மையான இஸ்ரவேலராகிய இறை மக்கள் மேலும் ((R.C.V) கலா. 6:16; 3:8-9

(ஆ) “ சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை. (ஆதி. 49:9-12)

(i) அண்மையில் நிகழ்ந்த பகுதி நிறைவேறுதல். தாவீதரசன் முதல் சிகேத்திய அரசன் முடிய “ ராஜாதிபத்தியம் அவன் சந்ததியிலுண்டானது;” (1 நாளா. 5:2)

(ii) இனிமேல் நிகழவிருக்கும் முழுநிறைவேறுதல் யாதெனில் “அவர் (இயேசு கிறிஸ்து) யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; (லூக். 1:32, 33)

(இ) “அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். (2 சாமு. 7:13-15)

(i) உடனடியாக நிகழ்ந்த பகுதி நிறைவேறுதல். – சாலமோனும் அவன் வழிவந்த அரசரும்

(ii) இனிமேல் நிகழவிருக்கும் நிறைவான நிறைவேறுதல். ; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் … அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது (லூக். 1:32,33)

‘நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். (2 சாமு. 7:14) இது ஓரளவுக்கு மட்டுமே சாலமோனுக்குப் பொருந்தும் ஆனால் இயேசுவுக்கோ பொருந்தாது.

 

(ஈ) மத்தேயு 24ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன வசனங்கள் சில எருசலேம் நகரின் அழிவையும் (கி.பி. 70ஆம் ஆண்டு) சில உலகின் முடிவையும் காட்டுகின்றன. சில வார்த்தைகள் இரண்டையும் குறிப்பிக்கலாம்

(i) அண்மையில் நிகழ்ந்த பகுதிகள் நிறைவேறுதல். கி.பி. 70 ஆம் ஆண்டின் நிகழ்ச்சி

(ii) இனிமேல் நிகழவிருக்கும் முழுநிறைவேறுதல். உலகத்தின் முடிவு. மத். 24:34 அண்மையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தும் மத். 24:28 பிணம் எங்கேயோ…”

உயிரற்று பிணம் போன்ற யூத மதம் கிடந்த எருசலேமைச் சுற்றி கழுகுகள் போன்ற ரோமப் படைகள் கூடின. (ரோமப் படையின் அடையாளச் சின்னம் ஒரு குழுகுதான்)

இப்போது உயிரற்றுப் பிணம்போன்று கிடக்கும் கிறிஸ்தவ சபைகளை விழுங்கக் கழுகுகள் (உலக ஆசை கொண்ட பெயர்க் கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்துவை எதிர்க்கும் அரசுக்கள்) வரக்கூடும்

முடிவில் உயிரற்றுப் பிணம்போன்று கிடக்கும் அரசுகளையும் சமுதாயப் பண்பாடுகளையும் மதங்களையும் விழுங்க்க் கழுகுகள் (சங்கார் தூதர்கள்) வரக்கூடும்.

3. தீர்க்கதரிசன உருவகச் சொற்கள்

(6 ஆம் அதிகாரம் “அடையாளச் சொற்கள்” என்ற 2ஆம் பிரிவைப் பார்க்க)

 

உருவகச் சொற்கள்

கருத்து

சூரியன் (யோவான் 2:10,31) சந்திரன் நட்சத்திரங்கள் லீபனோன் கேதுருக்கள் (ஏசா 2:13, எசேக். 3:13)

 

வல்லரசுக்கள்

தர்ஷீன் கப்பல்கள் (ஏசா. 2:16)

செல்வம் மிக்க வணிகர்கள்

 

நில நடுக்கம், சூரியன், சந்திரன், இருளடைதல், நட்சத்திரம் விழுதல்

 

அரசியல் புரட்சி, உலக முடிவு

பனி, தூறல், மழை, தண்ணீர், ஆறுகள் (ஏசா. 44:3, ஓசியா 14:5, யோவான் 4:10, 7:38)

 

தூய ஆவியினால் வரும் ஆசீர்வாதங்கள்

மோவாப், அம்மோன் ஏதோம், பாபிலோன்

 

இறைமக்களை (திருச்சபையைச் சூழ்ந்திருக்கும் பகைவர்கள்)

தாவீதின் கொம்பு(சங். 135:17, லூக். 1:75)

நற்செய்தியினால் வரும் இரட்சிப்பு அல்லது கர்த்தராகிய இயேசு

 

தாவீதரசன் (எரே. 30:9; எசே. 34:24; ஓசே. 3:35; அப். 13:34)

 

மேசியா இயேசு கிறிஸ்து

எருசலேம் (சீயோன் (ஏசா 52:1-9); 60:1-14;கலா. 4:26; எபி. 12:22

 

திருச்சபை அல்லது கடவுளின் அருள் நிறை ஆட்சி

தாவீது சாலொமோன் வளமிக்க ஆட்சி (1 இரா. 4:25; மீகா. 4:4; சகரியா 3:10

 

மேசியாவின் ஆட்சி (ஆயிரமாண்டு அரசாட்சி எனப் பலர் கூறுவர்)

 

தீர்க்கதரிசிகளின் மொழிநடை:

(அ) வெகு கலாத்திற்குப் பின் நிகழவிருப்பனவற்றை தங்கள் காலத்தில் ஏற்கனவே நிகழந்திருப்பதாக நினைத்து எழுதுகிறார்கள்
உதாரணமாக “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் (ஏசா. 9:6) ‘அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், … பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்’ (ஏசா. 53:3,4) முதலியன இந்த இறந்தகால வினைச் சொற்கள் எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் நடைபெறவிருப்பனவற்றைக் குறிக்கின்றன.


(ஆ) காலத்தால்  ஒன்றுக்கொன்று வெகு தொலைவிலிருக்கும் ஒரே நிகழ்ச்சிகள் ஒரே வசனத்தில் அல்லது ஒரே பகுதியில் சேர்த்துக் கூறப்பட்டுள்ளன.
உதாரணமாக “கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் ..” (ஏசா. 61:2)
அனுகிரக ஆண்டின் துவத்கத்திற்கும் நீதியைச் சரிக்கட்டும் நாளுக்குமிடையில் ஒருவேளை இரண்டாயிரம் ஆண்டுகள் இருக்கலாம். ஆனால் தீர்க்தரிசியோ இண்டையும் ஒரே வசனத்தில் கூறியிருக்கிறார். இயேசு நாசரேத்து ஜெபாலயத்தில் இந்தப் பகுதியை மேற்கோளாகப் பயன்படுத்தியபோது நாம் அனுக்கரக ஆண்டை வெளிப்படுத்த அனுப்பப்பட்டதாக மட்டும் கூறிவிட்டு நீதியைச் சரிகட்டும் நாளைக் கூறாமல் விட்டுவிட்டார். ஏனெனில் அது பின்னால் நடக்கப் போகிற ஒரு செயலாக இருந்ததினால்தான்

(இ) சில இடங்களில் வருங்கால நிகழ்ச்சிகளை தீர்க்கதரிசனமாக ஒரே பகுதியில் சேர்த்துக் கூறப்பட்டுள்ளன.
நான் மனுமக்கள் யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் (யோவேல் 2:30,31) இந்த வசனங்கள் 2,000 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேறவில்லை.
தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார். (சக. 9:9) என்பது கிறிஸ்துவின் தாழ்மையும் “யுத்தவில்லும் இல்லாமற் போகும்”. என்பது அவருடைய அளுகையும் “பூமியின் எல்லைகள் பரியந்தமும் செல்லும்” (சக. 9:10) என்பது கிறிஸ்துவின் உயர்வையும் குறிக்கின்றது. கிறிஸ்துவின் தாழ்வும் உயர்வும் மரணப்பாடுகளும் இரண்டாம் வருகையும் முடிவில்லா ஆட்சியும் ஒரே பகுதியில் சேர்த்துக் கூறப்பட்டுள்ளன.

(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)

Sunday, 24 November 2013

பிள்ளைகளின் அப்பத்தை நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” (மத். 15:25-26) (மாற்கு 7:24-30)




இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே யூத இனவாதத்தை வலியுறுத்தும் ஒரு வாக்கியமாக இன்று அநேகரால் விமர்சிக்கப்படும் பிசாசினால் கொடிய வேதனைப்படும் தன் மகளைக் குணப்படுத்தும்படி மன்றாடிய ஒரு கனானியப் பெண்ணுக்கு அவர் கொடுத்த பதிலாகும். அந்தக் கானானியப் பெண்(1) “ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும்“ என்று இயேசுவைப் பணிந்துகொண்டபோது அவர் “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்று அவளுக்கு கூறினார். (மத். 15:25-26) மாற்கு எழுதிய சுவிஷேசத்திலும் இச்சம்பவத்தை நாம் வாசிக்கலாம். (மாற்கு 7:24-30). (2)இஸ்ரவேலர் பாலஸ்தீனாவை ஆக்கிரமிப்பதற்கு முன்பு அப்பிரதேசத்தில் கானானியர்களே குடியிருந்தமையால் அப்பெண் யூதர்களுடைய ஆரம்பகால எதிரியின் பரம்பரையில் வந்தவளாக இருந்தாள். (3) இயேசுவினுடைய காலத்தில் தீரு சீதோன் பகுதிகளில் வாழ்ந்த கானானியர்கள், யூதர்களுடன் பகைமை கொண்டவர்களாகவே இருந்தனர்.(4) யூதப் போதகர்கள் யூதரல்லாதவர்ககளைக கானானியர் என்றே அழைத்தனர்(5) இதனால் அக்காலத்தைய யூத இனவாதிகளைப் போல இயேசுவும் கானானியப் பெண்ணுக்கு உதவி செய மறுத்துள்ளார் என்பது அநேகரது தர்க்கமாகவுள்ளது.(6)

உண்மையில் இயேசு கானானியப் பெண்ணோடு நடந்து கொண்ட முறை நமக்கு அதிக குழப்பத்தையே ஏற்படுத்துகின்றது. இயேசு தன் ஊழிய காலத்தில் யூத எல்லையைத் தாண்டி புறஜாதி நாட்டுக்குப் போகவில்லை என்பதையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் அவதானிக்கலாம். அவர் தீரு சீதோன் பட்டணங்கள் இருந்த திசையில் சென்றதாகவே மத்தேயு குறிப்பிட்டுள்ளார். (மத். 15:21) இயேசு தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளுக்குப் போனதாகக் கூறும் மாற்கு (7:24) இச்சம்பவத்தின் பின், அப்பட்டணங்களின் எல்லைகளைவிட்டுப் புறப்பட்டாகவே அறியத்தருகின்றார். (மாற். 7:31) இதிலிருந்து இயேசு தீரு சீதோன் பகுதியில் யூதேய எல்லை வரையிலுமே சென்றுள்ளார் என்பதும் “கானானியப் பெண் இயேசுவை யூத மண்ணிலேயே சந்தித்துள்ளாள்.(7). என்பதும் தெளிவாகின்றது. இது இயேசு புறஜாதி மண்ணை மிதிப்பதற்கும் விரும்பாத கடுமையாக இனவாதியாக இருந்துள்ளதைக் காண்பிக்கின்றது என்பது வேதவிமசகர்களது கருத்தாகும்(8). மேலும் இயேசு ஆரம்பத்தில் அப்பெண்ணுக்கு பதிலொன்றும் கூறாமல் அவளை அசட்டை செய்துள்ளார். ““ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்“  என அவள் மன்றாடிய போதும் (10) அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.(மத்.15:22-23) “ இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே“ எனும் சீடர்களின் வார்த்தைகள் (மத். 15:23) மூலமொழியில் “அவளது வேண்டுதலை அருளச் செய்த விண்ணப்பமாகவே உள்ளது.(12) ஆனாலும் இயேசுவோ, கானானியப் பெண்ணுக்கு உதவி செய்யாமல் தன் சீடர்களிடம் 'காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்(மத். 15:24) (13) இதனால், இயேசு புறஜாதியாருக்கு உதவி செய்ய மனமற்றவராக இருந்துள்ளதாகப் பலர் கருதுகின்றனர். (14)

இயேசுவின் வார்த்தைகள் அதாவது தான் இஸ்ரவேல் மக்களிடத்திற்கே அனுப்பப்பட்டேன்“ எனும் அறிவிப்பு, கானானியப் பெண்ணுக்கல்ல  மாறாக சீடர்களுக்கே சொல்லப்பட்டது(15) என்பதை நாம் அவதானிக்க வேண்டும். இயேசு ஏற்கனவே அவர்களை ஊழியத்திற்கு அனுப்பும்பொழுது இஸ்ரவேல் மக்களிடத்திற்கே போகும்படி அறிவுறுத்தியிருந்தார். (மத். 5-6) இதற்குக் காரணம் வேததிட்டத்தின்படி முதலில் இஸ்ரவேல் மக்களுக்கே சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டியிருநத்து. (16) தேவனுடைய திட்டத்தின் இந்தக் காலக்கிரம ஒழுங்கு முறையை அடிப்படையாகக் கொண்டே இயேசுவின் இக்கூற்றை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எனினும், இயேசு இஸ்ரவேல் மக்களுக்காக மட்டுமே உலகிற்கு வந்தார் எனக் கருதுவது தவறாகும். அவர் முழு உலகினருக்காகவும் வந்துள்ள போதிலும் சரீரப்பிரகாரமான அவரது ஊழியம் இஸ்ரவேலுக்கு மட்டுமானதாகவே இருந்தது. “இஸ்ரவேல் மக்களிடத்திற்கே தான் பிதாவினால் அனுப்பப்பட்டதை அறிந்திருந்த இயேசு அதைப் பற்றி இங்கு தெரிவித்துள்ளார். (17) இதனால், புறஜாதியாருக்குச் சுவிஷேசத்தை அறிவிக்க தன் அப்போஸ்தலர்களை நியமித்த இயேசு தனது ஊழியகாலத்தில் தன் பணியை இஸ்ரவேலில் மாத்திரமே செய்து வந்தார். 

சீடர்களுக்கு சொல்லப்பட்ட இயேசுவின் வார்த்தைகள் கானானியப் பெண்ணின் மனதைத் தளர்த்து விடவில்லை. இயேசுவால் தன் மகளைக் குணப்படுத்த முடியும் என்பதை நன்கறிந்திருந்த அவள்(18) ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள். (மத். 15:25) ஆனால் இயேசுவோ மறுபடியும் அவளது வேண்டுகோளை நிராகரித்ததுடன் “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல (மத். 15:25-26) மாற்குவின் சுவிஷேசத்தில் இக்கூற்றானது “முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; எனும் வாக்கியத்தையும் உள்ளடக்கியுள்ளது. (மாற். 7:27) உண்மையில் ஒருவனை நாய் எனக் கூறுவது அவனை நிந்தித்து இழிவுபடுத்தி அழைக்கும் முறையாகும். யூதர்கள் புறஜாதியாரை நாய்கள் என்றே அழைத்தனர். (19) இயேசுவும் இனவாத யூதர்களைப் போல தம் இனத்தவர்களை பிள்ளைகளாகவும் புறஜாதியாரை நாய்களாகவும் குறிப்பிட்டுள்ளதாக வேத விமர்சகர்கள் அவர்மீது குற்றம் சாட்டுகின்றனர்(20) எனினும் இயேசு குறிப்பிட்டது “தெருநாய்களை” அல்ல. மாறாக வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் நாய்க்குட்டிகளையே. என்பதையே மூலமொழியில் நாம் அவதானிக்கலாம். (21). மூலமொழியில் 7:6 இல் நாயைக் குறிக்க உபயோகிக்கப்பட்ட பதம் இவ்விடத்தில் உபயோகிக்கப்படவில்லை. இதனால் நாம் தமிழ் மொழிபெயர்ப்பிலும் “நாய்கள்” என்றல்ல “நாய்க்குட்டிகள்” என்றே இப்பதம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “தெருநாய்களை, வீட்டில்  பிள்ளைகள் சாப்பிடும் இடத்திற்கு அக்காலத்தில் எவரும் கொண்டுவர மாட்டார்கள்.” (22). எனவே அசுத்தமானவையாகக் கருதப்பட்ட தெருநாய்களை வீடுகளில் பிள்ளைகள் சாப்பிடும் மேசையின் கீழ் இருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது. (23) மேலும் இயேசுவின் வார்த்தைகள் கடுமையான முறையில் சொல்லப்படவில்லை. அவர் நாய்களை எனும் பதத்தை உபயோகித்தாலும் இந்த உதாரணத்தின் மூலம் தான் சொல்ல முற்படுவதை அறிவத்துள்ளாரே தவிர அதைக் கடுமையான முறையில் புறஜாதியரை  இழிவுபடுத்தும் முறையில் அவர் கூறவில்லை. (24)

இயேசுவின் கூற்றில் பிள்ளைகள் இஸ்ரவேலரையும் நாய்கள் புறஜாதியாரையுமே குறிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் நாய்கள் எனும் பதத்தால் இயேசு புறஜாதியாரை இழிவுபடுத்திக் கூறவில்லை. தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் கொடுக்கப்பட்டுள்ள இடத்தைச் சுட்டிக்காட்டுவதற்காக அக்கால வீடுகளில் சாப்பாட்டு வேளையின்போது காணக்கூடிய ஒரு காட்சியை உதாரணமாகக் காண்பித்துள்ளார். 

தன்னுடைய ஊழியம் இஸ்ரவேல் மக்களுக்கானது என்பதை பழமொழி போன்ற ஒரு உதாரணத்தின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார். தேவனுடைய திட்டத்தின்படி சுவிஷேசம் முதலாவது இஸ்ரவேல் மக்களுக்கே அறிவிக்கப்பட வேண்டியதாயிருந்த்து. (ரோமர். 1:16, 2:9, அப். 3:26, 13:46) பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் அவர்களையே தன் பிள்ளைகளாகத் தெரிந்தெடுத்திருந்தார். (யாத். 4:22, உபா. 14:1, 32:6, ஏசா. 1:2, எரே. 31:9, ஓசி. 11:1, ரோமர் 9:5)மேசியாவை பற்றிய வாக்குத்தத்தங்களும் அவர்களுக்கே கொடுக்கப்பட்டிருந்தன. (26) இதனால் அவர்களிடத்தே மெசியா அனுப்பப்பட்டிருந்தார். (யோவான் 1:1, ரோமர் 15:8) இஸ்ரவேல் மக்களுக்கான இயேசுவின் ஊழியம், தேவன் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அவர்களுடைய பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை உறுதிப்படுத்தும் பணியாய் இருந்ததை ரோமர் 15:8 அறியத் தருகின்றது. இதனால் தேவனுடைய ராட்சியத்தின் சுவிஷேசம் முதலில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதையே இயேசு பிள்ளைகளின் அப்பம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு முதலிடம் கொடுக்கப்ப்பட்டுள்ள போதிலும். அதில் புறஜாதியினருக்கு இடமில்லை எனக் கருதலாகாது. இயேசு சுட்டிக்காட்டியதை.அதாவது இஸ்ரவேல் மக்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொண்ட கானானியப் பெண். அச்சந்தர்ப்பத்திரலேயே புறஜாதிகளும் மேசிய யுகத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டினாள். இது ”நோவாவின் மூலம் தேவன் சகல மக்களோடும் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலான நம்பிக்கை” என்பதே சில தேவ ஆராய்ச்சியாளர்களின் விளக்கமாகும். (27) தேவன் ஆபிரகாமுடன் செய்து கொண்ட உடன்படிக்கை இஸ்ரவேல் மக்களுடனான அவரது செயல்பாடுகளை உள்ளடக்கிய தாயிருக்கையில், அவர் நோவாவின் மூலம் செய்து கொண்ட உடன்படிக்கை சகல இனமக்களையும் உள்ளடக்கியுள்ளது. (28). எனினும் இத்தகைய இறையியல் கருத்துக்களை அக்கால கானானியப் பெண் அறிந்திருந்தாள் எனக் கூறமுடியாது. அவள் இயேசுக் கிறிஸ்துவின் உதாரணத்திலிருந்தே புறஜாதியான தனக்கும் தேவ ஆசீர்வாதம் கிடைக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டினாள். கானானியப் பெண்ணின் இத்தகைய விசுவாசத்தைப் பாராட்டிய இயேசு, அவளது வேண்டுகோளின்படியே அவளது மகளைக் குணப்படுத்தினார். 


குறிப்புகள்
(1) மாற்குவின் சுவிஷேசத்தில் இவர் “சீரோபேனிக்கியா தேசத்தவனாகிய கிரேக்க ஸ்திரி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளாள்(மாற். 7:26) புதிய ஏற்பட்டுக்காலத்தில் “பேனிக்கியா” என்பது சிசிலிய மற்றும் ரோம அரசாட்சியத்தின் மாகாணங்களின் பகுதியாகும். இதில் சிகிரியாவையும் தீரு சீதோன் பட்டணங்களையும் உள்ளடக்கிய பகுதி சீரோபேனிக்கியா என அழைக்கப்பட்டது. காத்தேஜ் எனும் பிரதேசத்தில் வாழ்ந்த பேனிக்கியர்கள் லிபோனிக்கேயர்கள் என அழைக்கப்பட்டனர். (John J. Bimson, Ed, Illustrated Encyclopedia of Bible Places p. 292) மத்தேயுவின் சுவிஷேசத்தில் பேனிக்கியானர்களின் பழைய பெயரான கானானியர் என்பது உபயோகிக்கப்பட்டுள்ளது. மேலும் இவள் கிரேக்கப் பெண் (மாற். 7:26) எனக் குறிப்பிடப்பட்டுள்ளதற்குக் காரணம் அவள் கிரேக்க கலாசாரத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டவளாய் இருந்தமையாகும். 

(2) மாற்குவில் கானானியப் பெண்ணின் மகளில் இருந்த பிசாசைத் துரத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கையில் மத்தேயுவில் இத்தகைய முக்கியத்துவத்தை நாம் அவதானிப்பதில்லை. மாறாக இயேசு யூதர்களுக்கு முதலில் சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டும் எனும் இயேசுவின் கூற்றுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

(3) எனினும் கானானியர்கள் கி.மு 3000 வரை பழமை வாய்ந்த ஜாதியினராக இருந்ததோடு அவர்களது கலாச்சாரம் மிக உயர்வானதாக இருந்தது. உலகிலேயே மிக பழைமை வாயந்த முதலாவது அறியப்பட்டுள்ள)அரிச்சுவடி கானானியருடையதாகவே உள்ளது. (Leon Morris, p 401)

(4) William Barclay ‘The Daily Study Bible : Mathew Vol II p. 121

(5)  யூதமதநூலான மிஷ்னாவில்  Qiddusin 1:3 லும் பாபிலேனியத் தல்மூட் சோட்டா 35லும் இத்தகைய குறிப்புகளை நாம் அவதானிக்கலாம்

(6) F.W. Bearer, The Gospel According to Matthew: A Commentary. P. 432

(7) Donald A . Hagner : World Biblical Commentary: Mathew p. 441

(8) சில வேத ஆராய்ச்சியாளர்கள் இயேசு இந்த ஒரு சந்தர்ப்பத்தில் யூத எல்லையைத் தாண்டி புறஜாதி நாட்டக்சகுச் சென்று வந்தார் எனக் கருதுகின்றனர். (William Barclay, The Daily Study Bible: Mathew Vol II p. 120 W.F. Albright & C.S. Mann, The Anchor Bible Commentary: Mathew p. 187, D.A. Carson, The Expositor’s Bible Commentary: Mathew p. 354) எனினும் மூலமொழியில் மத்தேயு 15:22 இவ்வாறு  கூறவில்லை. எனினும் அவர் யோவான் 4ம் அதிகாரத்தில் சமாரியப் பட்டணங்களுக்குச் சென்றதை அவதானிக்கலாம். திருமணத்தில் இணைந்த்தன் மூலம் உருவான கலப்பினத்தவராக இருந்தனர். சமாரியர்கள் அக்காலத்தில் முழுமையான புறஜாதியராக அல்ல மாறாக பாதி இஸ்ரவேலராகக் கருதப்பட்டனர்.   

(9) இயேசு தாவீதின் வம்சத்தில் வந்த யூதர்களுடைய மேசியா என்பதே இதன் அர்த்தமாகும். 

(10) 22ம் வசனத்தில் கூப்பிட்டாள் எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் “கத்தினாள்” “அழுதாள்” “சத்தமாக ”கதைத்தாள்” எனும் அர்த்தங்களைக் கொண்டது. அவள் தனக்கு உதவி செய்யும்படி கதறியுள்ளாள். 

(11) சீடர்களுக்கு தொந்தரவாயிருக்குமளவிற்கு அவள் மன்றாயுள்ளாள். Donald A. Hangner, Word Biblical Commentary: Mathew p. 441

(12) Ibid p. 441

(13) இயேசுவின் இக்கூற்றில் அவர் அனுப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யோவானின் சுவிஷேசத்தில் இடம்பெறும் கூற்றுக்களில் அதாவது இயேசுதான் பிதாவினால் அனுப்பபட்டதாக்க கூறும் வாக்கியங்களின் செல்வாக்கிற்குட்பட்டுள்ளதாகக் சில இறையியியலாளர்கள் மத்தேயுவில் இடம்பெறும் இக்கூற்றை இயேசுவால் சொல்லப்பட்டதாக ஏற்றுக் கொள்வதில்லை. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட வாக்கியம் எனும் கருத்துடையவர்களாக இருக்கின்றனர். (Rudolf Bultmann, The History of Synoptic Tradition. Oxford: Blackwell, 1963, p. 155) எனினும் இவ்விளக்கம் யோவானினுள்ள இயேசுவின் கூற்றுக்களையும் அவரால் சொல்லப்பட்டவைகள் அல்ல எனும் எண்ணத்தை தோற்றுவிப்பதாயுள்ளது. மேலும் “கிறிஸ்தவ சபையானது பவுலினுடைய ஊழியக் காலத்திற்கும் முன்பே புறஜாதியினருக்கு சுவிஷேசத்தை அறிவிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையால் இயேசு தான் இஸ்ரவேல் மக்களுக்கு வந்ததைப் பற்றிய இக்கூற்றை சபை உருவாக்கியிருக்க முடியாது. (J. Jeremias Jesus : Jesus Promise to the Nation London: SCM Press, 1962, p. 26-28) எனவே இது இயேசுவினால் சொல்லப்பட்ட கூற்றாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. 

(14) F.W. Beare, The Gospel According to Mathew : A Commentary. P. 432

(15) Donald A. Hagner, Word Biblical Commentary : Mathew p. 441

(16) மாற்கு இக்கூற்றைக் குறிப்பிடவில்லை. மேசியா இஸ்ரவேல் மக்களிடத்தில் அனுப்பப்பட்டார் என்பதை யூதர்கள் புரிந்து கொண்டாலும் போதியளவு விளக்கம் இன்றி இக்கூற்றை புறஜாதியினரால் கிரகிக்க முடியாதென்பதனால் மாற்கு இதைத் தவிர்த்திருக்கலாம்  

(17) D.A. Carson, The Expositor’s Bible Commentary: Mathew. P. 355

(18) இயேசு கலிலேயா நாடுகளில் செய்த அற்புதங்களை இவள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். இதனால்தான் தன் மகளைக் குணப்படுத்தும்படி அவள் அவரிடம் மன்றாடினாள். 

(19) William Barclay, Mathew Volume 2. P. 122

(20) F.W. Beare, The Gospel According to Mathew: A Commentary p. 342

(21) William L. Lane. The New International Commentary on the NT: Mark p. 261 E. Schweizer, The Good News According to Mark : Richmond: John Knox Press 1970, p 386

(22) Leon Morris : The Gospel According the Mathew p 404

(23) R.C.H. Lenski, The Interpretation of S. Mathews Gospel p. 598

(24)  William Barclay

(25) Robert H. Mounce, The New International Commentary: Mathew 442

(26) இது பற்றி மேலதிக விபரங்களுக்கு யோவான் 5:39 இற்கான விளக்கத்தைப் பார்க்கவும்

(27) Donald A. Hanger: World Biblical Commentary: Mathew p. 442

(28) W.J. Covenant and Creation p. 11


கட்டுரையாசிரியர் Dr. M.S. வசந்தகுமார்
நன்றி - சத்திய வசனம்



   





  

  

Tuesday, 19 November 2013

திருமறையை விளக்கும் முறை அத்தியாயம் 8- முன்னடையாளங்கள்


பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட்டிருக்கும் மனிதர்கள், பண்டிகைகள், பணிகள், நிகழ்ச்சிகள், பொருட்கள் ஆகிய இவைகளுள் சில முன்னடையாளங்களாக இருக்கின்றன. (Types) இவைகள் புதிய ஏற்பாட்டு மெய்ப்பொருளை நிழலாட்டமாக காட்டுகின்றன. 

1. முன்னடையாளமான மனிதர்கள்

(அ) ஆதாம் – மனித இனத்திற்குத் தலைமையானவன். கிறிஸ்து (இரண்டாம் ஆதாம்) மீட்கப்பட்ட மக்களுக்குத் தலைமையானவர். (ரோமர். 5:14; 1 கொரி. 15:22, 45)

(ஆ) யோசேப்பு – தன் சகோதர்களால் பகைக்கப்பட்டவன். பின்னால் தம் இனத்திற்கும் நாட்டிற்கும் அதிகாரியானான். (அப். 7:9-13) அது போல கிறிஸ்து யூத இனத்தாரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. (யோவான். 1:11) என்றாலும் அவர் யூதருக்கும் உலக மக்கள் அனைருக்கும் இரட்சகரானார்.

(இ) மோசே – இயேசுவைப் போன்ற ஒரு தீரக்கதரிசி. இயேசுவைப் போன்ற ஒரு தலைவனாகவும், மீட்பனாகவும் ஏற்படுத்தப்பட்டான் (உபா. 18:15-18; அப். 3:22,23 7:35) 

(ஈ)ஆரோன்– பிரதான ஆசாரியராகிய இயேசுவிற்கு  முன்னடையாளமானவன்

(உ) மெல்கிசேதேக்கு – என்றென்றைக்கும் உயிரோடிருக்கின்ற பிரதான ஆசாரியரான இயேசுவிற்கு முன்னடையாளமானவர். (எபி. 7:15) அரசரும் ஆசாரியருமாகிய இயேசுவிற்கு முன்னடையாளமானர்

(ஊ) யோசுவா – மோசே செய்ய இயலாத ஒரு வேலையைச் செய்து இறை மக்களை கானான் நாட்டில் குடியேற்றினார். அதுபோல் நியாயப்பிரமாணம் செய்ய முடியாத ஒன்றை (ரோமர் 8:3, யோவான் 1:17) இயேசு செய்து முடித்து நம்மைப் பரம கானானிற்குள் குடியேற்ற தகுதியுடைவராக்கினார்)

(எ) தாவீது அரசன் – தம்மைச் சூழ்ந்திருந்த எல்லாப் பகைவர்களையும் வென்ற தாவீது மிகச் சிறந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு முன்னடையாளம் – (1 கொரி. 15:25, வெளி. 19:11-19)

(ஏ) சாலமோன் – சமாதானப் பிரபுவாகிய இயேசுவிற்கு முன்னடையாளம். தேவாலயத்தைக் கட்டின சாலமோன் திருச்சபையைப் பரிசுத்த ஆலயமாகக் கட்டுகின்ற இயேசுவிற்கு முன்னடையாளம். (மத். 16:18, எபே. 2:20-22)

கவனிக்க- மேற்சொல்லப்பட்ட மனிதர்கள் ஒரு சிலவற்றில் மட்டுமே இயேசுவிற்கு முன்னோடிகள். இவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளும் இயேசுவிற்கு முன்னடையாளமானவைகள் எனக் கருதுவது தவறாகும். ஆதாம் மனித இனத்திற்கு தலைவனாயிருந்தபடியால் அந்த அளவில் அவன் இயேசுவைக் காட்டின முன்னடையாளமாயிருந்தான். ஆனால் விளக்கப்பட்ட கனியைப் புசித்தபோதோ அவன் இயேசுவிற்கு முன்னடையாளமாயிருக்கவில்லை. 

மோசே மிகச் சிறந்த தீரக்கதரிசியும் இறைமக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப்பண்ணினவருமாயிருந்தபடியால் இவைகளில் அவன் இயேசுவிற்கு முன்னடையாளமாயிருந்தான். பதற்றமாய் பேசியபோதோ அவன் இயேசுவிற்கு முன்னடையாளமாயிருக்கவில்லை. ஆகவே முன்னடையாளங்களை விளக்கஞ் செய்யும்போது ஒரு சில செயல்களில் மட்டும் ஒற்றுமையைக் காணலாம். எல்லாற்றிலும் ஒற்றுமையைக் காண முற்பட்டால் சரியான உண்மையை விட்டு விலகிவிடுவோம். அத்துடன் இம்முறையை நாம் அளவிற்கு மீற கையாண்டால் பழைய ஏற்பாட்டின் மையக் கருத்துக்களையும் வரலாற்றுத் தன்மைகளையும் காணத் தவறிவிடுவோம். 


2. முன்னடையாளமான பண்டிகைகள்

(அ) ஓய்வுநாள் – விசுவாசத்தினால் வரும் இரட்சிப்பென்னும் இளைப்பாறுதலுக்கும் முடிவில்லா வாழ்விற்கும் அடையாளமாயிருக்கும். 
பாஸ்கா பண்டிகை- மீட்பிற்கு அடையாளமாகும்

(இ) பழைய ஏற்பாட்டுப் பலிகள் – வரப்போகின்ற நன்மைகளின் பொருளாயிராமல் அவைகளின் நிழலாய் இருக்கின்றன. (எபி. 10:1)


3. பணிகள்

பழைய ஏற்பாட்டு காலத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட மூவகைப் பணியாட்கள் இருந்தனர். தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், அரசர்கள் ஆகிய இம் மூன்று பணியாட்களும் இயேசுவின் மூவகையான வேலைகளைக் காட்டுகின்றன. ஆகவே கிறிஸ்து

(அ) தீர்க்கதரிசி, போதகர், ஆசிரியர்

(ஆ) ஆசாரியர், மீட்பர், பரிந்துரைப்பவர்

(இ) அரசர், ஆண்டவர்

நாம் நற்செய்திப் பணியாற்றும்போது கிறிஸ்துவின் மூன்று பணிகளையும் சரிசமமாய் எடுத்துக் கூற வேண்டும். புதுவிசுவாசிகள் அவரை இரட்சகராக மாத்திரம் ஏற்றுக் கொள்வது போதாது. அவரை ஆசரியராகவும், அரசராகவும் தீர்க்கதரிசியாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 


4. நிகழ்ச்சிகள்

(அ) வெண்கலப் பாம்பு- கம்பத்தில் உயர்த்தப்பட்ட பாம்பை நோக்கி பார்த்தவர்கள் பிழைத்ததுபோல சிலுவை மரத்தில் உயர்த்தப்பட்ட இயேசுவைப் நோக்கிப் பார்ப்பவர்கள் யாவரும் பிழைப்பார்கள். (ஏசா. 45:22, யோவான் 3:14,15)

(ஆ) இஸ்ரவேல் எகிப்தைவிட்டு புறப்பட்டு வனாந்திரவழியாகப் பயணஞ்செய்தபோது மன்னா உணவாக்க் கிடைத்தது முதல் பாறையிலிருந்து சுரந்த தண்ணீரை அருந்தி கானான் நாட்டில் வந்து சேர்ந்ததுவரை நிகழ்ந்த பல செயல்கள் மீட்கப்பட்ட திருச்சபையின் மோட்சப் பயணத்திற்கு முன்னடையாளமான ஒரு வரலாறாகும். (1 கொரி. 10:1-1)


5. பொருட்கள்

ஆசரிப்புக் கூடாரத்தின் சின்னஞ் சிறு வளையங்கள் கொக்கிகள் முளைகள் ஆகிய ஒவ்வொன்றிற்கும் அர்த்தம் கூறுவதைவிட அதன் முக்கியமான கருத்தினை உணர்ந்து கொள்வதே நன்று. “முதலாம் கூடாரம் நிற்குமளவு பரித்த ஸ்தலத்திற்குப் போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவி தெரியப்படுத்தியிருக்கின்றார். (எபி. 9:8) யாரும் அதன் அருகில் செல்லக்கூடாது என்பது எச்சரிக்கையாகும். திரைச்சீலை போன்ற கிறிஸ்துவின் மாம்சம் கிழிக்கப்பட்டபேது தேவலாயத்தின் சீலையும் இரண்டாக்க் கிழிந்த்து. யாரும் நெருங்கக் கூடாது என்பதற்கு மாறாக, எவரும் அருகில் வரலாம். என்பவே நற்செய்தியின் கருத்தாகும். ”தூயகம் நுழைய அவருடைய இரத்ததின் ஆற்றலால் நமக்குத் துணிவு உண்டு. உண்மையுள்ள உள்ளத்தோடும் உள்ளத்தோடும் முழு விசுவாச உறுதியோடும் நாம் அவரை அணுகிச் செல்வோமாக. (எபி. 10:19-22)

(அத்தியாயம் 8 முற்றிற்று)
(வளரும்)

Sunday, 10 November 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 7-உவமைகள்(2)

2. ஓர் உவமை பெரும்பாலும் முக்கியமான உண்மை ஒன்றையே போதிக்கும் என்று முன்பு பார்த்தோம். அந்த முக்கியமான கருத்தைக் கூறுவதே போதும். உவமையின் விபரங்கள் ஒவ்வொன்றிற்கும் பொருள் காண முயற்சிப்பது தவறாகும். 
உதாரணமாக கெட்ட குமாரனைப் பற்றிய உவமையில் கூறப்பட்டுள்ள மோதிரத்திற்கும் மதியடிகளுக்கும், கொழுத்த கன்றுக்கும் கருத்துக்கூறுவது அவசியமில்லை. உவமைகள் சொல்வதில் நம் ஆண்டவராகிய இயேசு திறமைவாய்ந்தவர். உவமைகளைக் கூறும்போது சுருக்கமாகவோ அல்லது வர்ணித்தோ பொதுமக்களுடைய கவனத்தைக் கவருவார். ஆகவே வர்ணித்துக் கூறப்ப்ட்டகைளுக்கு கருத்துக் கூறதேவையில்லை. 

ஆனால் உயர்ந்த ஆடைக்கு ஆவிக்குரிய கருத்து கூறுவது பொருந்தும் என்பதே என் எண்ணம் இந்த உயர்ந்த ஆடை திருமண ஆடைக்கும் (மத் 22: 1-14) நீதியின் சால்வைக்கும் (ஏசா 61:10) ஒப்பாயிருக்கலாம். 

நல்ல சமாரியனைப் பற்றிய உவமையைக் எடுத்துக் கொள்வோம். இனம், மதம், நிறம் ஆகிய வேற்றுமைகளைப் பாராமல் அவதிப்படுபவர் யாருக்கும் உதவி செய்தல் வேண்டும் என்பது இந்த உவமையின் குறிக்கோள். “நீயும் அப்படியே செய்”(லூக். 10:37) இந்த அறைகூவலுக்கு தப்பும்படி சிலர் இதை நற்செய்திப் பகுதியாகப் பயன்படுத்துவர். சிலர் இவ்வுவமையின் ஒவ்வொரு அங்கத்தையும் எடுத்து கருதுக் கூறுவர். சத்திரத்தைத் திருச்சபை என்றும் இரண்டு பணத்தை இரண்டு சாக்கிரமந்துக்கள் என்றும் மிகைப்படுத்திக் கூறுவர். இது போன்ற முறையைக் கையாளுவது வேதத்தை திரித்துக் கூறுவதாகும். 


3. உதாரணமாக மொத்த கருத்திற்கு மாறான உபதேசங்களை நாம் உவமைகளின் மூலம் நிலைநாட்ட முயல்வது தவறு. 
உதாரணமாக லூக்கா 10:24 ஐசுவரியான் ஆபிரகாமை நோக்கித் தனக்கு ஓரரு உதவிசெய்யும்படி கேட்டுக் கொண்டதினால் நாம் இறந்த புனிதர்களை நோக்கி மன்றாடலாம் எனப் போதிப்பது வேதத்தின் மொத்தக் கருத்திற்கு மாறானது. 

லூக்கா. 15:11-32 கெட்ட குமாரன் மனந்திருந்தி வந்ததும் ஏற்றுக் கொள்ளப்பட்டான். இங்கு பாவத்தைப் போக்கும் பலியாய் மரிக்கவில்லை என்றும் நமக்கு நல்ல மாதிரியைக் காண்பிக்கும் தியாகியாய் இருந்தார் என்றும் நாம் புத்தி தெளிந்து தந்தையிடம் திரும்பிச் சென்றால் மன்னிப்பைப் பெறுவோம் என்றும், பாவப் பலியைப் பற்றிய பேச்சே கிடையாது என்றும், பாவத்தைப் போக்க கிறிஸ்து இயேசு இரத்தத்தை சிந்தினார் என்று நாம் கருதவும் கூறவும் தேவையில்லை என்றும் சிலர் கூறுவர். இந்தத் தவறான போதனை வேதாகமத்தின் முழுக் கருத்திற்கும் எதிரானதாகும். இப்பேர்ப்பட்ட போதனை கண்டிக்கத்தக்கது. ஓர் உவமை இரட்சிப்பின் முறையில் அடங்கியிருக்கும் சில முறைகளை மட்டுமே விளக்கும். இரட்சிப்பின் வழி முழுவதையும் ஒரே சுருக்கமான உவமையில் விளக்கக கூடிய உவமை எதுவும் கிடையாது. 


4. உவமையில் ஏதாவதொரு அங்கத்தை மட்டும் முக்கியமான போதனைக்கு தோரமாகக் கூறுவதும் தவறு.
உதாரணமாக பத்து கன்னிகைகளுள் பாதிபேர் இரட்சிக்கப்பட்டனர். பாதிபேர் இரட்சிக்கபடவில்லை. ஆகவே கிறிஸ்தவர்களில் பாதிபேர் சேர்க்கப்படுவர். பாதிபேர் புறம்பே தள்ளப்படுவர் என்பது அர்த்தமாகுமா?
அல்லது நான்கு வகையான நிலங்களில் விதைக்கப்பட்ட விதை உவமையில் ஒரு நிலத்தின் விதை மட்டுமே நல்ல பலனைத் தந்தபடியால் கூறப்பட்டு வரும் நற்செய்தி தூதுகளில் நான்கில் ஒரு பாகம்தான் பயன்பெறும் என்பது பொருளாகுமா?
அல்லது நூற்றில் ஒன்பது மட்ட்டும் இரட்சிக்கப்படும் என்பது பொருளா? (லூக். 15:1-7)
அல்லது பத்துக்கு ஒன்றுமட்டும் இரட்சிக்கப்படும் என்பது பொருளா? (லூக். 15:8-10)


5. உவமையில்லாதிருந்தும் ஓரளவு வமைகளைப் போன்ற ஒப்பனைகள் யோவான் நற்செய் நூலில் உள்ளன. (யோவான் நற்செய்தி நூலில் உவமைகள் இல்லை என்பதையும் அடையாள அற்புதங்கள் எட்டு மட்டுமே உள்ளன என்பதையும் மனதில் கொள்க)

இந்த ஒப்பனைகள்(Alleaories) 10ஆம், 15ஆம் அதிகாரங்களில் காணப்படுகின்றன.

10ஆம் அதிகாரம்

1. நல்ல மேயப்பன் – இயேசு “நானே“ என்றார். 10:11,14

2. ஆடுகள் 3. வாசைலைக் காக்கிறவன்

4. தொழுவம் – இயேசு 10:7,9

5. வாசல் – “எனக்கு முன் வந்தவர்” 10:8

6. திருடர். 

7. அந்நியர். 

8. ஓநாய். 

9. கூலிக்காரன்

மேற்கூறிய ஒன்பது குறிப்புகளில் வாசல், மேய்ப்பன், ஆகிய இரண்டிற்கும் மட்டுமே தம்மை உவமித்து இயேசு கூறியுள்ளார். 

15ம் அதிகாரம்

திராட்சைச் செடி – நானே 15:1 (இயேசு)

பயிடுகிறவர் – தந்தை

கொடிகள் – நீங்கள் 15:5

உவமையில்லாத ஒப்பனைத் தொடர்கள் பழைய ஏற்பாட்டிலும் உள்ளன. (உதாரணமாக சங். 80:8-15. நீதி. 5:15, பிர. 12:3-7)

(அத்தியாயம் 7 முற்றிற்று)
(வளரும்)

Monday, 4 November 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 7-உவமைகள்(1)

உவமைகள் சிறு பிள்ளைகளும் எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்க நல்ல கதைகள் எனக் கருதுவது தவறாகும். உவமைகள் நல்ல கதைகள் தான் ஆனாலும் அதற்குச் சரியான ஆவிக்குரிய விளக்கம் கூறுவது எளிதன்று. 

உவமை என்பது தெரிந்த ஒன்றைக் காட்டி தெரியாத ஒன்றை விளக்குவதாம். அதாவது ஒன்றைப் போல் மற்றொன்று அமைந்திருகின்றது என்று கூறுவதாம். 

இயேசு கிறிஸ்து உவமைகள் பயன்படுத்தியக் காரணத்தைக் கவனிக்கவும். (மத். 13:11-17) விண்ணுலக அரசின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது.அவர்களுக்கோ அருளப்படவில்லை. 

1. ஓர் உவமை முக்கியமான உண்மை ஒன்றையே கற்பிக்கும். ஒரு சில உவமைகள்(விதைக்கின்றவன், களைகள்) மட்டும் ஒன்றுக்கும் அதிகமான கருத்துக்களைக் கூறலாம். ஆனால் பெரும்பாலும்  உவமைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஆவிக்குரிய கருத்துத்தான் உண்டு.
இந்த ஒரே கருத்து என்ன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?


(அ) உவமையின் துவக்கத்தில்
லூக்கா 18:1-8; சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பது (18:1) இவ் உவமையின் நோக்கம்

லூக்கா 18:9-14 தங்களை நீதிமான்கள் என்று நம்புவோரைக் (18:9) கடிந்து கொள்வதே இந்த உவமையின் நோக்கம்.
(ஆனால் இவ்வுவமையின் இறுதி (14ஆம்) வசனத்திலும் போதனையுண்டு.

லூக்கா 19:11-27 தேவனுடைய ராஜ்யம் உடனே வராது (வச 11) என்பதுதான் இவ் உவமையின் முக்கியமான கருத்து 


(ஆ) உவமையின் இறுதியில்
மத்தேயு 22:1-14 கடைசி வசனத்தில் இந்த உவமையின் முக்கியமான ஆவிக்குரிய கருத்தைக் காணலாம். “அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்” ஆகையால் “உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள். (2 பேதுரு 1:110) என்பதே பொருள்

மத்தேயு 25:11-13 கடைசி (13ம் ) வசனத்தைப் பார்க்கவும். ….“விழித்திருங்கள்

லூக்கா 16:1-9 மற்றெல்லா உவமைகளைக் காட்டிலும் விளங்கிக் கொள்வதற்கு சற்று கடினமான இந்த உவமையின் முக்கிய கருத்தைக் கடைசி வசனத்தில்(9ம் வசனத்தில்) காணலாம். “அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.“ 
ஆண்டவருடைய சீடர்களில் சிலர் சகேயு, மத்தேயு என்பவர்களைக் போன்று அநியாயமான முறையில் செல்வதைத்த் திரட்டியிருந்தனர். (15:1) தங்கள் ஊழலின் பயனாகத் திரட்டிய செல்வதை எவ்வாறு செலவிடுவது என்ற கேள்வி எழுந்தபோது ஆண்டவர் இவ் உவமைமையைக் கூறினார். 

(i) கூடுமானால் யாரை வஞ்சித்தோமோ அவர்களுக்குத் திரும்ப செலுத்தவும். (நாலாந்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்- 19:8)

(ii) அவ்விதம் திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால் ஏழைகளுக்குக் கொடுக்கவும். (லூக். 1:22; 19:18) அதாவது அநீதியான உலகப் பொருளால் உங்களுக்கு நண்பரைச் சம்பாதியுங்கள். என்று ஆண்டவர் கூறியிருக்கின்றார். நீதியற்ற கண்காணிப்பாளன் தன் தலைவனிடம் கடன்பட்டவர்களை ஒவ்வாருவனாக அழைத்துக் கடன் பத்திரத்தைக் குறைத்து எழுதும்படி சொல்லியபோது தன் முதலாளியை வஞ்சிக்கவில்லை. தான் ஏற்கனவே அநியாயமாய்த் திரட்டிய செல்வத்தைப் பயன்படுத்திக் கடன்பட்டவர்கள் ஒவ்வாருவனுக்கும் தன் சொந்த செலவில் தயவு பாராட்டி இவ்விதம் அவர்களைத் தனக்கு நண்பர்களாக்கிக் கொண்டான். முதலாளியின் பணத்தை மீண்டும் அபகரித்துக் கடன் பத்திரங்களைக் மாற்றியிருப்பானேயானால் முதலாளி அவனை மெச்சிப் பேசியிருப்பானோ? 

எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் குணப்பாடாதற்கு முன் பரிசு சீட்டுக்களை வாங்கி ஒரு பெரிய இலட்சாதிபதியாகிறான் என்று வைத்துக் கொள்வோம். குணபட்டபின் தான் அந்த முறையில் பரிசு பெறது தவறு என்று உணர்கின்றான். என்ன செய்வது? ஒன்றுதான் சம்பாதித்த பணத்தை அரசுக்கு திருப்பிக் கொடுக்கலாம். அல்லது பொதுநலத்திற்கென நிறுவப்பட்ட ஏதாவது சில கல்வி நிலையங்களுக்கோ அல்லது மருத்துவ மனைகளுகக்கோ கொடுக்கலாம். கர்த்தருடைய பணிக்கென திருச்சபை அநீதியான உலகப் பொருட்களை வாங்கலாமா? வாங்கலாகாதா? என்பதைப் பற்றி கருத்து வேறுபாடுகள் உள்ளன. 

சென்ற நூற்றாண்டின் எப். என். சரிங்டன் (F.N. Charringdon) என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பத்தினர் மதுபானங்கள் மூலமாய் ஏராளமான செல்வத்தைத் திரட்டியவர்கள். சரிங்கடன் குணப்பட்ட பின்னும் தான் அனுபவித்து வருகின்ற செல்வங்கள் அநீதியான முறையில் வந்தவை என்பதை உணரவில்லை. ஒருநாள் இரவு லண்டன் மாநகரின் கீழ்ப்பகுதியில் (பரம ஏழைகள் வசித்த பகுதி) சென்ற போது சாராயக் கடைக்கு முன் நடந்த பயங்கரமான சண்டையையும் குடித்து வெறித்தவர்கள் தங்கள் மனைவிகளைத் துன்புறுத்தும் காட்சியையும் கண்டு மனவேதனை யடைந்தார். அப்போது அந்த சாராயக்கடையின் உரிமையாளரின் பெயர் தம் குடும்பப் பெயர் சரிங்டன் என அறிந்து அதிர்ச்சியுற்றார். அந்நாளே சரிங்கடன் அக்கம்பனியில் தனக்கருந்த பங்கை விற்றுவிட்டு தான் சம்பாதித்த ஏராளமான பணத்தை லண்டன் நகரின் கீழ்ப் பகுதி ஏழை மக்களின் நலத்திற்கெனச் செலவிட்டார். 

மேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் மூலம் முதலில் ஆண்டவருடைய சித்தத்தை அறியாதவர்கள் அறிந்தபின் நன்மையான செயல்கள் செய்தனர் என்பதை அறிகிறோம். ஆனால் தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் அதன்படி செய்யாமல் திருச்சபையின் பணத்தையோ, சொதுக்களையோ அநியாயமான முறையில் செலவிடுகின்ற ஊழியக்காரன் அநேக அடிக்கள் அடிக்கப்படுவான். (லூக். 12:47)


(இ) சில வேளைகளில் உவமையின் முக்கிய கருத்து உவமையின் துவக்கத்திலும் இறுதியிலுமாக இருமுறை கூறப்பட்டிருக்கும். 
(i)  மத். 18:21,22,35 ‘அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் உன் சகோதரனுக்கு மன்னிக்க வேண்டும்” என்று சொல்கிறேன். 
நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். (18:35)

(ii)  பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்;(12:15) தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் (12:21)


(ஈ) சிலவேளைகளில் உவமை கூறப்பட்ட சூழ்நிலையைக் கொண்டு அதற்கு முன்னுள்ள வரலாறுகளைக் கொண்டு உவமையின் கருத்து இன்னதென்பதைத் தெரிந்து கொள்ளலாம்
(i) லூக் 13:6-9 உவமைக்கு முன்னுள்ள வசனங்களைப் பார்க்கவும். மனமாற்றமடையாத யூத மக்கள் அழிதல் நிச்சியம் என்று வலியுறுத்திப் போதித்தபின் கனி கொடாத அத்திமரத்தின் உவமையைக் கூறினார். 

அத்திமரம் – யூத இனம்
முதலாளி – கடவுளின் நீதி (வெட்டுவதற்கு எத்தனித்தல்)
தோட்டக்காரன் – கடவுளின் நீடிய சாந்தம்

இப்பொழுது அத்தி மரத்தைச் சில சபைகளுக்கோ தனிப்பட்ட சில நபர்களுக்கோ ஒப்பிட்டு இந்த உவமையைப் பயன்படுத்தலாம். 

அடிக்கடி சுற்றிலும் கொத்தி எரு போடப்படும் கனி கொடாத அத்தி மரம் இரக்கமின்றிப் பிடுங்கப்படும. (நீதி. 29:1)

கவனிக்க. முதலாளியைக் கடவுள் என்றும் தோட்டக்காரனைக் கிறிஸ்து என்றும் கூறலாகாது. அவ்வாறு விளக்கஞ் செய்வது தவறான கருத்துக்களுக்கேதுவாகும். 

(ii)  லூக்கா 15:12-32 உவமைக்கு முன்னுள்ள 15:1,2 வசனங்களைப் பார்க்கவும். ஆயக்கார், பாவிகள்” ஆகிய எல்லோரும் அவர் சொல்வதைக் கேட்க அவரிடம் வந்த வண்ணமிருந்தனர். அதனால் பரிசேயரும், வேத அறிஞரும், இவன் பாவிகளைச் சேர்த்துக் கொண்டு அவர்களோடு சாப்பிடவுஞ் செய்கிறானே என்று சொல்லி முறுமுறுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர் இந்த உவமையை (அல்லது மூன்று உவமைகளை) அவர்களுக்குச் சொன்னார்.

இளைய மகன் – ஆயக்காரர், பாவிகள்
மூத்த மகன் – பரிசேயர், தேவ அறிஞர். 

(வளரும்)

Sunday, 27 October 2013

திருமறையை விளக்கும் முறை. அத்தியாயம் 6- உருவக மொழி


கடந்த ஐந்து அத்தியாயங்களில் வேதத்தை விளக்கஞ் செய்வதற்கு நாம் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை விதிகளைப்பற்றி ஆராய்ந்தோம். அவை திருமறை முழுவதற்கும் பொருந்தக்கூடிய பொதுவான விதிகளே. ஆனால் திருமறையின் சில பகுதிகள் சாதாரண மொழியில் அமையாமல் உருவகங்கள், உவமைகள், தீர்க்கதரிசனங்கள் போன்ற சிறப்பு வடிவில் அமைந்துள்ளன. இப்பகுதிகளை விளக்கஞ் செய்யும்போது நாம் சில உண்மைகளை மனதில் கொள்ள வேண்டும். இந்நூலின் எஞ்சிய பகுதியில் இவ்வுண்மைகளைக் குறித்து சிந்திப்போம்.

1. உருவகச் சொற்கள் (Metaphors)
உருவகம் என்பதைவிட உவமை (simile) என்பதே பொருளுக்கும் விளக்கத்திற்கும் பொருத்தமாயுள்ளது ஆனால் ஏழாம் அத்தியாயத்தில் உவமை வேறுவகையில் விளக்கப்பட்டுள்ளது. ஒன்றைப்போல ஒன்று இருக்கின்றது என்பது உவமை. ஆனால் ஒன்றை ஒன்றாகச் சொல்வது உருவகம். கர்த்தர் சூரியனைப் போல இருக்கிறார் என்பது உவமை. சூரியனாயிருக்கிறார் என்பது உருவகம்.

(அ) தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; (சங். 84:11) கர்த்தர் சூரியனைப் போன்று நமக்கு ஒளியாயிருக்கின்றார். வேறு வகையில்  அவர் கேடகத்தைப் போன்று நம்மைக் காப்பாற்றுகிறார்.

(ஆ) கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.(சங். 18:2)

(இ) அவர் சிங்கக் குட்டியைப் போன்றவர். – வெளி. 5:5

(ஈ) இயேசு தம்மை அப்பத்திற்கும் ஒளிக்கும் வாசலுக்கும் மேய்ப்பனுக்கும் திராட்சைச் செடிக்கும் ஒப்பிட்டுப் பேசினார்.

(உ) “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும். லூக். 9:60 நிலைபேறு வாழ்வைப் பெறாதவர். –மரித்தோர். (எபே.2:1)

(ஊ) முள்ளில் (தாற்றுக் கோலுக்கு எதிர்த்து) உதைப்பது கடினம். என்றும் பொருள்படும். அப். 26:14. முள்போன்ற மனசாட்சியை எதிர்த்து உதைப்பது கடினம் என்றும் பொருள்படும்.

(எ) இது என் சரீரம். இது என் இரத்தம் (மாற்கு 14:2,24) அவர் இந்த வார்த்தைகளை சொல்லிய போது அவருடைய சரீரம் பிட்கப்படவுமில்லை. அவருடைய இரத்தம் சிந்தப்படவுமில்லை. ஆகவே இந்த வசனங்கள் உருவகச் சொற்களாகும். அவற்றை சொல்லுக்குச் சொல் சரியாய் விளக்கஞ் செய்வது தவறு. இந்த அப்பம் என் உடலைப் போன்றது. இந்த ரசம் என் இரத்த்த்தைப் போன்றது என்பது அர்த்தமாகும்

அடையாளச் சொற்கள்
கருத்து
வசனங்கள்
நிலடுக்கம், புயல், கிரகணம் அரசியல் புரட்சிகள் யோவேல் 3:15 ஏசா. 13:10-13; எரே. 4:23,28; மத். 24:29
பனி, தூறல், நீர்க்கால்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள், ஏசா.25:6; எரே. 4:23,28; ஓசி. 14:5
கோல் தண்டனை ஏசா 10:5, 14:29
விவாகம் தேவன் தன் மக்களோடு செய்யும் உடன்படிக்கை ஓசி. 2:19,20
விபச்சாரம், சோரம் சிலைவணக்கம், உடன்டிக்கையை மீறுதல் ஓசி. 2:2,5
காட்டு விலங்குகள் அல்லது பறவைகள் வல்லரசுக்கள் தானி. 7; சகரியா 1:18,19

சில அடையாளச் சொற்களுக்கு இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். முன் பின்னுள்ள தொடர் வாக்கியங்களைக் கவனித்து சரியான கருத்தை அறிய வேண்டும்.


(அ) அறுப்பு – விசுவாசிகளைப் பரம களஞ்சியத்தில் சேர்ப்பதைக் குறிக்கும். மத். 13 அல்லது
அக்கிரமக்கார்ரை விசாரித்து நியாந் தீர்ப்பதைக் குறிக்கும். வெளி. 14:14,20

(ஆ) அக்கினி - தீமைகளைப் பட்சித்து எரிப்பதைக் குறிக்கும். நியாயத்தீர்ப்பு நரகம், இவைகளைக் குறிக்கும். (அல்லது
விசுவாசிகளைப் புடமிட்டுச் சுத்திகரிப்பதைக் குறிக்கும். 1 பேதுரு 1:7
(அல்லது)
பரிசுத்த ஆவியையும், ஆவியின் செயலையும் குறிக்கும். அப். 2:3

(இ) புளித்தமா – மறைமுகமாய்ப் பரவும் தீமையைக் குறிக்கலாம். மாற்கு 8:15, 1 கொரி. 5:8
மறைமுகமாகப் பரவும் நன்மையைக் குறிக்கலாம். மத். 13:33
ஆனால் புளித்தமா வேதமெங்கும் தீமையைத்தான் குறிக்கின்றது என சிலர் சாதிக்கின்றனர்.


3.    மனிதப் பண்பிலும் கடவுளை வர்ணித்தல்(Anthropomorphism)
கடவுளுக்கு உருவம் இல்லை என்றாலும் நமக்கு எளிதில் விளங்கத்தக்கதாக கடவுளுக்கு மனிதப் பண்புகளும் இருக்கிறதுபோல அடிக்டிப் பேசுவதுண்டு
(அ)  இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப் போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை ஏசா. 59:1
(ஆ) உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங். 32:8
(இ) இவர்கள் என் நாசிக்கு அரோசகமான புகை (பு.தி)
(ஈ) உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது. (சங். 89:13)


(உ) மனிதப் பண்புகள்
அ) தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. (ஆதி 6:6)

ஆ) என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; (யாத். 32.10)

இ) அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார். யாத். 32.14)

உ) சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். (1 சாமு 15.35)
ஆனால் இவ்வசனங்களைக் கீழ்காணும் வசனத்தோடு ஒப்பிட்டு வேதத்தின் மொத்த கருத்துக்கேற்ப விளக்கஞ் செய்யவும்.

ஊ) இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல 1 சாமு 15:23 (எண். 23.19 ஐயும் பார்க்க)
(அத்தியாயம 6 முற்றிற்று)
(வளரும்)

Thursday, 24 October 2013

கர்த்தருக்குப் பரிசுத்தம்



உலக நாடுகள் முழுவதையும் ஒரே ஆட்சியின் கீழ்கொண்டு வர வேண்டும் என்ற பெரும் வைராக்கியத்துடன் செயல்பட்டு ஒவ்வொரு நாடாக பிடித்து வெற்றி வாகை சூடியவர் கிரேக்க சாம்ராஜ்யத்தின் மகா அலெக்சாண்டர். மத்திய கிழக்குக்குள் படையுடன் சென்று பல நாடுகளை தம் வசமாக்கினான். காசா நகரைப்பிடித்து விட்டு எருசலேமைப் பிடிக்கும் நோக்குடன் எருசலேம் நோக்கி தன்னுடைய படையுடன முன்னேறினான். மகா அலெக்சாண்டர் எருசலேமை நோக்கி வந்து கொண்டிருக்கின்றான் என்ற தகவல் எருசலேமுக்கு எட்டியது. ஆனால் மகா அலெக்சாண்டரை எதிர்கொள்ளும் திறன் எருசலேமுக்கு இல்லை. எங்கும் அச்சமும் பீதியுமே நிலவியது.

ஆனால் இந்த சூழ்நிலைகளுக்கும் மத்தியில் அப்போது பிரதான ஆசாரியனாயிருந்த ஹெட்குவா எந்தவித அச்சமோ பதற்றமோ இன்றி எருசலேம் நகரிலும் சுற்றுவட்டாரத்திலிருந்த எல்லா ஆசாரியர்களையும் குறுகிய கால அவகாசத்திற்குள் ஆசாரிய உடையில் வரும்படி கூறி ஒன்று திரட்டினான். பிரதான ஆசாரியன் தலைமையின் கீழ் எல்லா ஆசாரியர்களும் மகா அலெக்சாண்டரை எதிர்கொண்டு சென்றனர். எவ்வித ஆயுதமுமின்றி வெள்ளங்கியில் ஆசாரிய உடையில் இராணுவத்தினரைப் போலவே சீராக நடந்து வருவதை தூரத்தில் வரும்போதே மகா அலெக்சாண்டர் கண்டான். அவர்கள் மார்ப்பிலிருநது 12 வகையான விலையேற்றப் பெற்ற வெவ்வேறு நிறத்தினால் கற்கள் சூரிய ஒளியில் பளிச்சிடுவதைக் கண்டான். இப்போது அருகில் வந்துவி்ட்டான். இருதரத்தாரும் நெருங்கிவிட்டனர். ஆயுதமின்றி வரும் ஆசாரியர்களைத் தாக்கும் எண்ணம் மகா அலெக்சாண்டருக்குத் தோன்றவில்லை. மகா அலெக்சாண்டரும் பிரதான ஆசாரியனும் நேருக்கு நேர் நின்றனர். குதிரைகள் குளம்பொலிகளோ இராணுவத்தினரின் சப்தமோ, போர்வாள்களின் குலுங்கல் சம்பமோயில்லை. எங்கும் நிசப்பதம் நிலவியது. 

மகா அலெக்சாண்டர் அவர்களை உற்று நோக்கினான். ஆசாரியர்கள் யாவரும் தங்கள் நெற்றியில் பசும்பொன்னினாலான ஒரு பட்டத்தை அணிந்திருந்தனர். அதில் முத்திரை வெட்டாக வெட்டி எழுதப்பட்டிப்பதை கூர்ந்து கவனித்தான். கர்த்தருக்குப் பரிசுத்தம். (Holiness to the Lord) என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டான். (யாத். 28:36) அந்த வார்த்தை அவனது இருதயத்தை வெகுவாய் அசைத்திருக்க வேண்டும். ஆசாரியர்கள் கர்த்தக்குப் பரிசுத்தமானால் அவர்கள் சார்த்திருக்கும் எருசலேம் நகரமும் கர்த்தருக்குப் பரிசுத்த நகரமாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே அந்த பரிசுத்த நகரத்தை நான் பரிசுத்த குலைச்சலாக்க விரும்பவில்லை என்று அவன் நினைத்திருக்க வேண்டும். ஆசாரியர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு எருசலேம் நகருக்கு நான் வரவில்லை. நான் என் படையுடன் திரும்புகிறேன். நீங்கன் சமாதானத்தோடு நகருக்குச் செல்லுங்கள் எனக் கூறி வந்த வழியே திரும்பிப் போனான். ஆசாரியர்கள் கரங்களை உயர்த்தி தேவனை துதித்து மகிமைப்படுத்தினார்கள். 

“கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள். (யாத். 14 

நன்றி: தேவனுடைய வார்த்தை, 2002 டிசம்பர்

Tuesday, 15 October 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 5 -முழுக்கருத்தையும் மறவாதீர்(2)

 

3.    ஒத்த வாக்கியங்களைக் கவனிப்பது தெளிவாய் விளக்கஞ் செய்வதற்கு ஏதுவாகும். (ஒத்த வாக்கிய அகராதியின் பயனை அறிந்து கொள்ளுதல் நன்று)


(அ) சொல் ஒற்றுமை

(i)   ’கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி (1 சாமு. 13:14) தாவீது என் இருதயத்திற்கு ஏற்றவனாக்க் கண்டேன். (அப். 13:22) கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதன் என்பதற்கு பொருள் என்ன? ஒத்த வாக்கியமாகிய 1 சாமு. 2:25 ஐப் பார்த்தால் நன்கு விளங்கும் “நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணுவேன்”.


(ii)   “கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.” கலா. 6:17
இந்த அச்சடையாளரங்கள் என்ன? சிலுவை ஆணிகளால் உண்டான தழும்புகள் என்று சிலர் வாதிக்கின்றனர். அது உண்மையான கருத்தன்று. ஒத்த வாக்கியத்தைப் பார்க்கவும். “ இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.” (2 கொரி. 4:10) அதாவது அதிகமாய் அடிப்பட்டவன். (2 கொரி. 11:23-27)


(iii)   என் மேன்மை (ஆதி. 49:6) என் மகிமை (சங். 7:5) என்ற வார்த்தைகளுக்கு என் ஆத்துமா என்று பொருள் கூறலாம். எப்படியெனில் சங். 16:9, 30:11, 108:1 ஆகிய வசனங்களை அடிப்படையாகக் கொண்டு.. ஆனால் செப்டுவஜின்ட் (Septugint) என்ற பழைய கிரேக்க மொழி பெயர்ப்பைப் பயன்படுத்தி பேதுரு சங்கீதம் 16:9ஐ மேற்கோள் கூறியபோது “என் நாவு களிகூர்ந்தது” எனக் கூறியிருக்கின்றார். ஆகவே சங்கீதம் 16:9, 57:8, 108:1 இந்த நான்கு வசனங்களிலும் “என் மகிமை” என்பதற்கு “நாவு” என்பது பொருளாயிருக்கலாம். ஆத்துமாவே மனிதருடைய மிக உன்னதமான மகிமையாகும். ஏனெனில் நாவுமூலம் நாம் கடவுளைப் புகழ்ந்து பாடலாமன்றோ.

 

(ஆ) பொருள் ஒற்றுமை


(I) நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; (மத்தேயு 26:27)
அப்போஸ்தலர்கள் அல்லது குருமார்கள் மட்டும்தான் பாத்திரத்தில் பானம் பண்ணவேண்டுமா? மேல் மாடியில் குழுமியவர்கள் அப்போஸ்தலர் மாத்திரமே ரோமன் கத்தோலிக்க சபையின் பழக்கம் சரிதானா? ஒத்த வாக்கியத்தைப் பாருங்கள்.
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் (1 கொரி. 11:26) “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். (1 கொரி. 11:28)

(ii)  நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; (மத். 16:18). இந்தக் கல் அல்லது பாறை என்பது உறுதியான அடிப்படையாயையும் அசையாத ஆதாரத்தையும் குறிக்கும் பழைய ஏற்பாட்டுக் காலத்து கடவுளுடைய மக்கள் தங்களுக்கு கடவுளே உறுதியான ஆதாரம் என்ற கருத்தில் அவரைப் பாறை என்று அழைத்தனர். (உபா. 32:4, 15, 18; சங். 18:2) புதிய ஏற்பாட்டில் திருச்சபைக்கு அடிப்படையும் ஆதாரமுமாய் விளங்குபவர் இயேசுவே. (ஏசா. 28:16; 1 பேதுரு 2:4-8 ரோமர் 9:33, 1 கொரி. 3:11)

(iii) “புது சிருஷ்டி காரியம்” (கலா. 6:15) புது சிருஷ்டி என்றால் என்ன? விருத்தசேதனமும் ஒன்றுமில்லை. விருத்தசேதனமில்லாமலாமையும் ஒன்றுமில்லை என்’று கூறுகின்ற ஒத்த வாக்கியங்களைப் பார்க்கவும். “அன்பினால் கிரியை செய்கின்ற விசுவாசமே உதவும்” (கலா. 5:6) அதாவது புது சிருஷ்டியின் பண்பாகும். தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவனே புது சிருஷ்டியாவான் என்பது தெளிவாகும்.

(iv) “அன்பு திரளான பாவங்களை மூடும்” (1 பேதுரு 4:8) நான் எல்லோருடனும் அன்பாயிருந்தால் என்னுடைய அநேக பாவங்கள் மூடப்படும் என்று சிலர் இந்த வசனத்தைத் திரித்துக் கூறுவர். ஒத்த வாக்கியத்தைப் பார்க்கும்போது “பகை விரோதங்களை எழுப்பும். அன்பே சகல பாவங்களையும் மூடும். (நீதி 10:12) அன்பு பிறருடைய பாவங்களை மூடுமே தவிர தன் பாவங்களை மூடுவதில்லை.

 

4.    ஒத்த வரலாறுகள்.
சொல்லொத்த வாக்கியங்களும் பொருளொத்த வாக்கியங்களும் ஆங்காங்கு பொருளொத்த வரலாறுகள் உண்டு.


(அ) இறை மக்களின் வரலாற்றுக்களைக் காட்டும் ஒத்த வரலாறுகளும் பழைய ஏற்பாட்டிலிருக்கின்றன.
(i) இராஜாக்களின் இரு நூல்கள் (சாமுவேலின் இரு நூல்களும்) தீர்க்கதரிசிகளின் மூலம் எழுதப்பட்டன. அரசு முறையின் வரலாற்றைக் கூறுவதே இவ்வாகமங்களின் நோக்கம்)
அரச முறையின் துவக்கம்   – தாவீது
அரச முறையின் முடிவு       – நேபுகாத்நேச்சார்
அரசர்களின் துவக்கம்            – சாலோமோனின் மகிமை
அரசர்களின் முடிவு                – யோயாக்கீமின் சிறைவாசம்

யூதா நாட்டின் 19 அரசர்களுள் 8 அரசர்கள் மட்டும் “கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தனர்” இஸ்ரவேல் நாட்டின் 19 அரசர்கள் (9 அரசர்கள் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) எல்லோரும் “கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தனர்)


(ii) நாளாகம நூல்கள் இரண்டும் மக்களின் வரலாற்றையோ அரசர்களின் வரலாற்றையோ குறிப்பிடுபவதில்லை. தேவாலயத்தின் வரலாற்றையே குறிப்பிடுகின்றன. இவைகள் ஆசாரியர்கள் மூலம் (ஒருவேளை ஆசாரியனும் வேதபாரகனுமாகிய எஸ்றாவின் மூலம்) எழுதப்பட்டிருக்கலாம். ஆகவே தேவாலயத்தைப் புறக்கணித்துப் பிரிந்துபோன இஸ்ரவேல் நாட்டு மக்களின் வரலாறுகள் நாளாகமத்தில் சேர்க்கப்படவில்லை
நாளாகமத்தின் தொடக்கம் – சாலமோன் கட்டின ஆலயம்
நாளகமத்தின் முடிவு – சுட்டெரிக்கப்பட்ட பழைய ஆலயத்திற்குப் பதிலாகப் புது ஆலயத்தைக் கட்ட கோரேஸ் பிறப்பித்த ஆணை

 

(ஆ) இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை அறிவிக்கும் நற்செய்தி நூல்கள் நான்குண்டு முதல் மூன்று நற்செய்தி நூல்கள் ஒன்றுக்கொன்று மிகவும் ஒற்றுமை உடையனவாகும்.
    ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கப்பட்ட வரலாறு இயேசுவின் மரணம், இயேசுவின் உயிர்தெழுதல் ஆகியவைகள் நற்செய்தி நூல்கள் நான்கிலும் கூறப்பட்டுள்ளன.
i.    மத்தேயு, மாற்கு ஆகிய இருவரும் தம் நற்செய்தி நூலில் இயேசு தம் சீடர்களைத் தமக்கு முன் போகும்படி துரிதப்படுத்தினதாகவும் பின்பு மக்களை அனுப்பி விட்டு தனியாக மலைமீது ஏறி ஜெபிக்கச் சென்றதாகவும் கூறுகின்றனர். (மத்.14:22,23) மாற்கு 6:45,46) ஆனால் காரணத்தைக் கூறவில்லை. யோவான் 6:15 இல் காரணத்தைக் கூறுகின்றார். சீடர்கள் பொதுமக்களின் புரட்சி செயலில் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்கும்படி இயேசுவால் அனுப்பப்பட்டனர். எனவே அவர்களைத் துரிதப்படுத்தி அனுப்ப வேண்டிய சூழ்நிலை உருவானது என்பது யோவானது நற்செய்தி நூலில் தெளிவாகத் தெரிகின்றது.

ஆகவே நற்செய்தி நூலிலிருந்து ’ஏதாவது ஒரு பகுதியை நீங்கள் செய்திக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டால் மற்ற மூன்று நற்செய்தி நூல்களிலும் அதையொத்த வரலாறுகள் உண்டா என்று ஆராய்ந்து அப்படியிருக்கும் ஒத்த வரலாறுகளையெல்லாம் படித்து ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கவும்.


ii.    சிலுவையில் இயேசு அருள்மொழிகள் ஏழு என்பது யாவருக்கும் தெரிந்ததாகும். ஆனால் எந்த நூலிலும் இந்த ஏழும் ஒருங்கே கூறப்படவில்லை. லூக்கா மூன்றையும் யோவான் வேறு மூன்றையும் குறிப்பிட்டுள்ளனர். “தேவனே தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்ற நான்காம் மொழியை அறிவிக்கின்றவர்கள் மத்தேயுவும் மாற்கும். இந்த ஒரு வார்த்தை மட்டும் இரண்டு நற்செய்தி நூல்களில்தான் அறிவிக்கப்பட்டுள்ளது.


iii.    உயிர்தெழுதலின் விளக்கங்கள் ஆங்காங்கு நற்செய்தி நூல்கள் நான்கிலும் சிதறிக் கிடக்கின்றன. கிறிஸ்து இயேசு தம்மை உயிருள்ளவராய் கண்பித்த வரலாறுகள் கீழ்க்காணுமாறு

மகதலேனா மரியாள் மாற்கு 16:9-11; யோவான் 20:11-18
மற்றப்பெண்கள் மத்தேயு 28:9-10
சீமோன் பேதுரு லூக்கா 24:33-35, 1 கொரிந்தியர் 15:5
எம்மாவூருக்கு செல்லும் சீடர் மாற்கு 16:12,13 லூக்கா 24:13-22
அப்போஸ்தலர் பத்து பேரும் வேறு சில சீடரும் மாற்கு 16:14, லூக்கா 24:13-22

மேற்கண்ட ஐந்தும் நிகழ்ச்சிகளும் இயேசு உயிர்த்தெழுந்த அன்றே நடந்தன.

அப்போஸ்தலர் பதினொருவரும்
(தோமாவுடன்)
யோவான் 20:26,31
1 கொரிந்தியர் 15:5
கலிலேயா கடல் ஓரமாயுள்ள எழுவர்
யோவான் 2:11-25
500 பேருக்கு அதிகமான சகோதரர் மாற்கு 16:15-18,
1 கொரிந்தியர் 1:6
ஆண்டவருடைய சகோதரன் யாக்கோபு
1 கொரிந்தியர்15:7, லூக்கா 24:44-53
பரமேறுதல் அப்போஸ்தலர் 1:3-12, மாற்கு 16:19-20


(இ) பவுல் அடியார் குணப்படுத்தல் மூன்றுமுறை நடபடிகளின் புத்தகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. (அப். 9:1-22; 22:11-16;26:1-20) நடபடிகளின் நூலையும் பவுல் இயற்றிய நிருபங்களையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கவும்

 

5.    வேதநூலின் முழுக்கருத்து
திருமறையின் மொத்தக் கருத்துக்கு முரண்படுகின்ற முறையில் நாம் எந்த வாக்கியத்தையும் விளக்கம் செய்யக்கூடாது. உதாரணமாக சில வசனங்கள் கடவுளுக்கு உடலுறுப்புகள் இருக்கின்ற வண்ணமாகப் பேசுகின்றன. “தேவன் ஆவியாயிருக்கின்றார்” என்ற வசனத்திற்கொத்த (யோவான் 4:24) விதமாய் நாம் இந்தப் பகுதிகளை விளக்கஞ் செய்தல் வேண்டும்

நான்காம் விதி நமக்கு கற்றுத் தருவது
திருமறையின் முழுக்கருத்திற்கேற்றவாறு வேதத்தின் எந்தப் பகுதியை வியாக்கியனம் செய்தல் வேண்டும்

(அத்த்தியாயம் 5 முற்றிற்று)

(வளரும்)