இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை மாறாக மரத்தூண் ஒன்றிலே கட்டி தொங்கவிடப்பட்டிருந்தார் என்பது யெகோவா சாட்சிகளின் போதனையாகும். (Source : The Watchtower 15 August 1987, p27) இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. என்று கூறும் இவர்கள் (Awake, 8 November 1972, p28) சிலுவை என்பதற்கு வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் நேரான தூண் எனும் அர்த்தமுடையது என்று விளக்குகின்றனர்.(Anonymous, Reasoning from the Scriptures, p89)ஆனால் சிலுவை என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள Stauros எனும் கிரேக்கப் பதம் T + X I எனும் மரத்தினால் செய்யப்பட்டவைகளைக் குறிக்கும். எனவே அப்பதத்தை மட்டும் ஆதாரமாக் கொண்டு இயேசுகிறிஸ்து I வடிவமரத் தூணில் மரித்தார் என்று கூறமுடியாது. (Source : R.M. Bowman, Understanding Jehovah’s Witnesses, p.143) மேலும் இயேசுக்கிறிஸ்து நேரான மரத்தூணில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தால் மத்தேயு 27:37 குறிப்பிட்டுள்ளதுபோல் “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவரது சிரசுக்கு மேலாக அதை வைத்திருக்க முடியாது. மாறாக அவரது கைகளுக்கு மேலாகவே வைத்திருக்க முடியும். எனவே யெகோவாவின் சாட்சிகள் கூறுவதுபோல இயேசுக்கிறிஸ்துவின் கைகளிரண்டும் ஒன்றாக கட்டப்பட்டு அவர் மரத்தூணில் கட்டித் தொடங்கவிடப்பட்டார் என்னும் விளக்கம் தவறானதாகவே உள்ளது. (Source : R.Rhodes, Reasoning from the Scriptures with the Jehovah’s Witness, pp-397-398)ஆரம்பகாலத்தில் யெகோவா சாட்சிகள் இயேசுக்கிறஸ்து சிலுவையில் மரித்தார் என்று கூறுகின்றபோதிலும் (R.Reed, Index of Wachtower Errors, p 73;The Watchtower 1 January 1891, p 1277, Anonymous, Creation pp161, 265, 336) பிற்காலத்தில் இவர்கள் தங்கள் கருத்தை மாற்றியுள்ளதோடு சிலுவையை வைத்திருப்பதும் அதைப் புனிதமாகக் கருதுவதும் விக்கிரக வழிபாடு எனப் போதிக்கத் தொடங்கினர். (Anonymous, Reasoning from the Scriptures, p 92)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment