நாம் இதுவரை குறிப்பிட்ட காரியங்களில் அநேகமானவை, துணை இல்லாமல் தனித்திருப்பவருக்கும் பொருந்தும். இருப்பினும், தனித்திருப் பவர்கள் பிரத்தியோகமான ஒரு நிலைவரத்தில் பிரத்தியேகமான சவால்களுடன் இருப்பதால், அவர்களுக்கென்று ஒரு சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன். இவை திருமணமானவர்களுக்கும் பிரயோஜன மானவையாயிருக்கும்.
ஒரு முக்கியமான அழைப்பு – தனித்திருப்பது தேவனிடமிருந்து கொடுக்கப்பட்டுள்ள (36 குறிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன) உன்னதான அழைப்பு. இதனை பவுல் மிகவும் உயர்வான மதிப்புக்குரியதாக வைத்திருந்தார்( 1 கொரி 7) தனித்திருப்பவர்கள், மனிதர் அனுபவிக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவங்களில் ஒன்றான, பாலுறவில் நன்றாக ஈடுபடமுடியாது என்பது உண்மையானதாகும்.ரூத் டக்கர் என்பர், நற்செய்திப்பணி ஊழிய சுதந்திரம் தொடர்பான தனது புத்தகத்தில் திருமணமாகாத பெண் நற்செய்திப் பணியாளர்களின் பெரிதான ஊழியப் பணியைக் குறித்து தனியான அத்தியாயம் ஒன்றை எழுதியுள்ளார். இருப்பினும் இந்த திருமணமாகாத நற்செய்திப் பணிப்பாளர் முகங்கொடுத்த பிரதானமான அனுபவம் தனிமையும் சில வேளைகளில் மனச் சோர்வுமாகும் என அவர் குறிப்பிடுகின்றார்.
எனவே, தேவன் எமது வாழ்க்கைக்குத் தந்துள்ள சிறந்தவற்றை இழக்கின்றார்கள் என நாம் கூறக்கூடுமா? பவுல் 1 கொரிந்தியர் 7 இல் கூறுபவற்றை நாம் கருத்திற் கொண்டால் அப்படியாக்க் கருதமுடியாது. அவர் இவ்விடத்திலே, சிறப்பாக தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு (வசனம் 26) திருமணமாகாதவர்களை, திருமணம் செய்ய வேண்டாமென அறிவுறுத்துகிறார். இயேசு தருவதாக வாக்களித்த நிறைவான வாழ்வு (யோவான் 10:10) தனித்திருப்பவர்களுக்கும் நிச்சயமாய் கிடைக்கும். உண்மையில் இயேசு திருமணமாகாத தனியானவராகவே இருந்ததுடன், உலகில் வாழ்ந்த மனிதர்களில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தவராயும் இருந்தார். எனவேதான் அவர் எமக்கு மகிழ்ச்சியைத் தரும்போது எமது மகிழ்ச்சி பூரணமானதாயிருக்கும் என்று சொன்னார். (யோவான். 15:11) அவர் இந்தக் காரியத்தை, உலகிலுள்ள எந்த மனிதனும் அனுபவத்திராத பெரிய உபத்திரமான உலகத்தின் பாவங்களின் தண்டனையை தான் ஏற்றுக் கொள்வதற்கு முன்பதாகச் சொன்னது சுவரசியமானதாகும். எனவே, உலகத்தின் பார்வையில் இழப்புள்ளது என கருதப்படும் வேளையிலும் கிறிஸ்தவர்கள் நிறைவானவர்களாய் இருக்கக்கூடும்.
பிரச்சினை என்னவெனில் நாம் வாழும் உலகம் பாலியலைக் கடவுளாகக் கணிப்பிடுகின்றது. இந்தக் கணிப்பீடு காரணமாக பாலியல் உறவுகளற்றவர்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளிலொன்றை இழந்தவர்கள் என்ற மனப்பாங்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆராய்ச்சிகள் இம் மனப்பான்மை பிழையானது என உறுதிப்படுத்தியுள்ளன. பாலுறவைத் தவிர்த்துக் கொள்கிறவர்கள் சுகதேகியான நபர்கள் இருக்கலாம்.
பவுல், திருமணமாகாமல் தனிமையாயிருக்க மனிதரை அறிவுறுத்துவதற்கான காரணம், இப்படியானவர்கள் குடும்பத்தைப் பாராமரிக்க வேண்டிய சுமையில்லாமல் தேவனுக்கு ஊழியம் செய்யக் கூடிய பிரத்தியோக நிலையில் இருப்பதேயாகும் (1 கொரி. 7:32-35) என்னுடைய வீட்டிலுள்ள படிப்பறையில் எனக்கு விருப்பமான துறைகளில் பிரசித்தி பெற்ற 28 கிறிஸ்தவ தலைவர்களின் படங்களை வைத்துள்ளேன். இவர்களில் 8 பேர் திருமணமாகாதோர் : ஏமி கார்மைக்கல், ஜோன் கிறிஸ்சோஸ்டம்,, ஹென்றியட்டா மியர்ஸ், சாது சுதந்தர்சிங், ஜோன் கிறிஸ்டோஸ்டம், சாது சுந்தர்சிங், ஜோன் சங், கோரி டென் பூம், சி.எஸ். லூயிஸ் தனது ஐம்பதாவது வயதின் பிற்பகுதியில் திருமணம் செய்து நான்கு வருடங்களில் தாரமிழந்தோர். இங்கு காணப்படும் திருமணமாகாதவருக்கும் திருமணமானவருக்கும் இடையேயான விகிதம் உலகத்தில் காணப்படும் விகிதத்திலும் அதிகமானதாகும். ரூத் டக்கர் தனது புத்தகத்தில், ஒரு ப்ப்டிஸ் நற்செய்திப் பணி அதிகாரி “சீனாவில் இரண்டு திருமணமான ஆண்களைவிட ஒரு பெண் அதிக பயனுள்ளவளாய் இருப்பாள்“ எனக் குறிப்பிட்டுள்ளதாக எழுதியுள்ளார்.
தீர்க்கப்படாத விருப்பங்கள்
திருமணமாகாதவர்களுக்கும் பாலியல் விருப்பங்கள் இருக்கும். இவை நிறைவேற மாட்டாது. அவர்கள் இவற்றைக் குறித்து என்ன செய்யக்கூடும்? எல்லாக் கிறிஸ்தவர்களும் தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இப்படியான சூழ்நிலைகளுக்குள்ளாகச் செல்வார்கள். நான் என்னுடைய வாழ்வின் இறுதி மூன்றிலொரு பகுதியில் உள்ளேன் என நம்புகின்றேன். நானும் எனது மனைவியும் எங்களில் இருவரில் ஒருவர் பரலோகத்திற்குப் போகும் நிலைமைக்கு எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். முப்பதாண்டு திருமண வாழ்க்கையின் பின்னர் இந்தக் கணம் உலகில் இருக்கப் போகின்றவர்களுக்கு மிகவும் கஷ்டமானதொரு அனுபவமாக இருக்கும் எனபது நிச்சியம். நாம் இருவரும் ஒரே நேரத்தில் மரிக்க விரும்புகின்றோம். ஆனால், அநேகமாக அப்படி நடக்க மாட்டாது. இணைந்து வாழ்ந்து பழக்கப்பட்ட பின்னர் தனித்து வாழும் வாழ்க்கைக்கு நாம் ஆயத்தமாக வேண்டும். இது மிகவும் கடினமானதென நாம் அறிவோம். ஆனாலும், தேவன் நம்மோடு நமது கடினமான அனுபவங்களோடுமிருந்தும் எமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தருவார் எனவும் நாம் அறிவோம். அன்புக்குரிய ஒருவரின் மரணத்தின் பிரிவின் மிகுதியிலும் கிறிஸ்தவ மகிழ்ச்சி தொடர்ந்தும் நிலைத்திருக்கும்.
கிறிஸ்தவனொருவன் உளவியல் ரீதியில் வளர்ச்சியடையாத ஒருவரைத் திருமணம் செய்து உளரீதியாக கடினமானதொரு திருமணவாழ்க்கைக்கூடாக மரணம் தம்மை பிரிக்கும் வரையில் வாழவேண்டிய சந்தர்ப்பங்களை நாம் சந்திக்கக்கூடும். இது கடினமானதாகும். எனினும் தேவன் தேவையான பலத்தைக் கொடுப்பார். திருமணமானவர்களில் சிலருக்கு உளரீதியான அல்லது சரீர ரீதியான பிரச்சினைகள் காரணமாக ஆரோக்கியமான பாலியல் உறவுகளில் ஈடுபட முடியாதுள்ளது. இப்படியான பிரச்சினைகள் தீரக்கப்பட வேண்டும் என்று விருப்பப்பட்டாலும் சிலவேளைகளில் சில பிரச்சினைகள் குணமாக்கப்பட போவதில்லை.
தேவன் சிலரை இப்படியான அனுபவத்திற்குள் அனுமதிப்பது சாதாரண நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபட்டதாகும். ஆனால், அவர் பிரச்சினைகளை விட பெரிதானவர். அத்துடன் இப்படியான அனுபவங்களை அனுபவிப்பவர்களுக்கு தனது பிள்ளைகளுக்கு கொடுக்கும் பரிபூரண வாழ்க்கையை அவர் கொடுக்கிறார்.
பரிசுத்த அவா
அப்படியானால் தனிமையாயிருப்பின் காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காக பாலியல் உறவின் அனுபவத்தின் நிறைவு பெறாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? நான் இவர்களுக்கு வேதாகமத்தின் கட்டுப்பாடுகளில் ஒன்றான, “பரிசுத்த அவாவை“ யோசனையாக முன்வைக்க விரும்புகிறேன். கிறிஸ்தவர்கள், தேவன் தமக்கென்று தருகின்ற ஆசீர்வாதங்களை சுவைத்தவர்கள். இருப்பினும், அவர்களுக்கு இப்பொழுது தாம் அனுபவிக்கும் காரியங்கள் முழுமையின் ஒரு முன்னுகர்வே என அறிவார்கள். எனவே அவர்கள் உலகத்தில் ஏமாற்றங்களை அனுவித்து நிறைவுக்காக ஏங்குவார்கள். பவுல் இதனை ரோமர் 8:18-25 இல் விபரிக்கின்றார். சங்கீதங்களில் விசுவாசிகள் தேவனுக்காக தவிப்பதையும் (சங். 42:1) தாகம் கொள்வதையும் (63:1) காண்கிறோம். இத்தாகமானது நாம் பரலோகம் செல்லும்வரை தீர்க்கப்பட மாட்டாத ஒன்றாகும். உன்னதப்பாட்டுக்கள், ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்கிடையேயான அன்பு, திருமணத்தின் மூலமாக முழு நிறைவடைவதைச் சந்திப்பதற்கு ஆவலுடன் இருக்கிறார்கள் என்பதை இதே தத்துவத்தைப் பயன்படுத்துகின்றது.
தனிமையாய் இருப்பவர்களும் இவ்விடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களும் தங்களது அசாதாரணமான நிலைவரம் காரணமாக ஆழ்ந்த அழுத்தங்களை எதிர்கொள்வார்கள். பாலியல் ரீதியான சமுதாயத்தி டமிருந்தும் அழுத்தங்கள் உண்டு. அக்கறையுள்ள உறவினர்களிடமிந்தும், நண்பர்களிடமிருந்தும், இவர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆவர்வத்தினால் அழுத்தங்கள் உண்டு. இதன் காரணமாக அவர்கள் தொடர்ச்சியாக கூர்மையான கேள்விகளைக் கேட்ட வண்ணமாயிருப்பார்கள். தங்களிடத்தே காணப்படும் காதலுணர்வு, பாலுணர்வு காரணமாக அவர்களுக்கு அழுத்தங்கள் உண்டு. இவை இல்லையென மறுக்க முடியாது. ஆனால், அவர்கள் தங்களது ஆசைகளை பரிசுத்த அவாவாவக மாற்றக் கூடும். தேவன் எமக்கு முழுமையைத் திட்டமிட்டு வைத்துள்ளார். இது பரலோகத்திலேயே முழுமையை அடையும். இதற்கிடையில் அவர் எமக்குத் திருமணத்தை பாலிய வயதிலோ, பிந்திய வயதிலோ தரக்கூடும். அல்லது அவர் எம்மை தனிமைக்கு அழைக்கக் கூடும். இவர்கள் தேவன் தமக்குத் திட்டமிட்டுள்ள முழுமையாக்காக அவருடனிருந்து பரிசுத்தமாயிருப்பதன் மூலம் தேவன் தங்களுடைய வாழ்க்கைக்கா வைத்துள்ள அழகிய திட்டத்தை அழிக்காமல் காத்துக் கொள்ளலாம்.
(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)
இவ்வாக்கமானது Dr. அஜித்குமார் (இயக்குநர், கிறிஸ்துவிற்காக இளைஞர்(இலங்கை) ஆங்கிலத்தில் எழுதிய “உணர்வுபூர்வமான நடத்தை - முன்யோசனையின்றி ஏற்படக் கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி“ என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
மொழி மாற்றம் - கலாநிதி அன்பழகன்