- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday, 8 January 2013

ஆவிக்குரிய பரிசீலனை


இன்று நான் எல்லா மனிதருடனும் தாழ்மையாய் நடந்தேனா?
தீத்து 3:2

இன்று நான் ஏதாவது வீணான வார்த்தைகள் பேசினேனா?
மத். 12:36

இன்று நான் யாருடனாவது சுயநலமாக செயற்பட்டேனா?
1 கொரி 13:5

இன்று நான் வேறு ஒருவரின் தோல்வியில் சந்தோஷப்பட்டேனா?
1 கொரி. 13:6

இன்று நான் இறைவனுடைய அரசையும் நேர்மையையும் தேடினேனா?
மத். 6:33

இன்று நான் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தேனா?
கொலோ 1:10

இன்று நான் இறைவனின் அன்பை சந்தேகப்பட்டேனா?
மல். 1:2

இன்று நான் ஏதாவது உலக காரியத்தில் பெருமைப்பட்டேனா?
கலா. 6:14

இன்று நான் ஏதாவது செய்யக் கூடிய நன்மையை செய்யாது விட்டேனா?
கலா. 6:9

இன்று நான் ஏதாவது தீமையான வார்த்தைகளைப் பேசினேனா?
எபே. 4:9

இன்று நான் பிரதிபலன் எதிர்பார்த்து நன்மை செய்தேனா?
மத். 7:12

இன்று நான் இரகசியத்தைக் காத்துக் கொண்டேனா?
நீதி. 1:13

இன்று நான் யாருடனாவது பொறுமையிழந்து நடந்தேனா?
1 கொரி. 13:4

இன்று நான் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் சரியாக நடந்தேனா?
கொலோ 4:1

இன்று நான் உற்சாகப்படுத்தக் கூடிய வார்த்தைகளைப் பேசினேனா?
எபி. 3:13

இன்று நான் என் குடும்பத்தாருக்கு எனது அன்பைக் காண்பித்தேனா?
1 தீமோ 5:8

இன்று நான் மற்றவர்களை விட மேலானவனாக எண்ணினேனா?
பிலி. 2:3

இன்று நான் வேறொருவரை பிழையாக நியாயம் தீர்த்தேனா?
1 கொரி. 04:05

இன்று நான் முழுவதுமாக மன்னிக்காதவர்கள் யாரேனும் உண்டா?
மத். 6:12

இன்று நான் சிந்தனை நடத்தை தூய்மையாயிருந்ததா?
பிலி. 04:08

இன்று நான் என்னை துன்பப்படுத்துபவர்களுக்காக மன்றாடினேனா?
மத். 05:44

இன்று நான் யாரிலாவது பொறாமை கொண்டேனா?
1 கொரி. 13:04

இன்று நான் சக விசுவாசிகளை மதித்து அன்பு காட்டினேனா?
1 பேதுரு 02:17

இன்று நான் சகோதரனின் தேவைகளில் கரிசனை செலுத்தினேனா?
யாக். 02:15,16

இன்று நான் கொடுத்த வாக்கை காப்பாற்றினேனா?
சங். 15:04

இன்று நான் சந்தித்தவர்களுள் என்னை ஒரு அடிமையாகக் கொண்டேனா?
1 கொரி. 09:19

இன்று நான் எனது எல்லாவித கவலைகளையும் கர்த்தரிடம் ஒப்புவித்தேனா?
1 பேதுரு 05:07

இன்று நான் மனிதருடைய கருத்தை மட்டும் கருத்திற் கொண்டேனா?
1 கொரி. 04:03

இன்று நான் கிடைத்த சந்தர்ப்பத்தை பயனுள்ளதாக செலவிட்டேனா?
எபே. 05:16

இன்று நான் எனது பிள்ளைகளுடன் ஆவிக்குரிய காரியங்களை பேசினேனா?
உபா. 06:06-07

இன்று நான் என்னைப் போல என் அயலவனில் அன்பு செலுத்தினேனா?
லேவி. 19:18